Sunday, 6 January 2008

2-சிங்களம் வெட்டிய குழிகள் எங்கணும் விடுதலை அரசியலை விதைத்த மதியுரைஞர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த அரசியல் போராளியாக, மதியுரைஞராக, தத்துவாசிரியராக விளங்கி, தமிழர் போராட்ட வரலாற்றில் உயர்ந்து நின்றவர் "தேசத்தின் குரல்' அன்ரன் பாலசிங்கம்.ஈழத்தமிழர்களின் வன்முறைப் போராட்டத்திற்கு நியாயம் காட்டி அரசியல் வடிவம் கொடுக்கும் பணியைத் தமது தோள்மீது சுமந்தவர் பாலா. அவர் குறித்த ஒரு பார்வை இக்கட்டுரை. "தேசத்தின் குரல்' விடுதலைப் பாதையில் தடையரண் களும் அழிவுக் கிருமிகளும் உட்புகுந்து வேரழிக்கச் சன்னதம் கொண்ட வேளையில், தனது மார்க்சிசப் பார்வை விரவிய அறிவாயு தத்தைக் கையிலெடுத்துச் சமராடிய பெரு மகன் இவர். எதிரியானவன், தலையைத் தட வியபடி "முதுகிற்குப் பின்னால் வெட்டிய குழிகளுக்குள்' விடுதலை விதைகளை விதைத்து "தனது அறிவாற்றலை உரமாக்கி' நீரிழிவு நோய் வாட்டிடும் போதும் அவ்விடு தலை விருட்சத்திற்கு நீர் பாய்ச்சிய அரசியல் சமராடி பாலா அண்ணர்.பேச்சு மேடையில் விடுதலைப் புலி களுக்கு வீசப்பட்ட சர்வதேச வலையை இலாவகமாக கழற்றி எறிந்த சாணக்கியமே சர்வதேசத்தை நோக்கிய சுயநிர்ணய உரிமை அறைகூவலிற்கு அத்திவாரமிட்டது.தனியரசுக்கு மாற்றீடான மறுபக்க இணைவுச் சாத்தியங்களை சமஷ்டி என்றும், உள்ளக சுயநிர்ணயம் என்றும் நடைமுறை யிலுள்ள கோட்பாடுகளை எடுத்துக் கூறியும் சிங்களத்திற்கு எதுவுமே புரியவில்லை.இயல்பு வாழ்வு திரும்பவேண்டுமென மனித உரிமை பற்றிக் கூறியும் சர்வதேசத்திற்கு விளங்கவில்லை. உலகத்து மக்களுக்கு ஏதோவொரு வகையில் தமிழர் தரப்பின் அரசியல் அபிலாஷைகள் பேச்சுத் தளத்தினூடாகக் கொண்டு செல்லப்பட்டிருக்கின்ற நம்பிக்கை உண்டு.பயங்கரவாதமென்ற போர்வைக்குள் மூடி மறைக்கப்பட்டிருந்த விடுதலையின் ஒளியினை அவர்களுக்குப் புரிந்த அரசியல் கோட்பாட்டு மொழிமூலம் சர்வதேசப் பரப்பில் படரவிட்ட தேசத்தின் குரலின் ஆளுமை போற்றத்தக்கது.உலகத்திற்கு எடுத்துரைத்த பெரும் பணி2002 பெப்ரவரி மாதம் வரை நிகழ்த்தப்பட்ட தமிழ்த் தேச விடுதலைப் போராட்ட பரிமாணத்தின் அரசியல் கருத்துநிலை வடிவத்தினை பேச்சுகள் ஊடாக உலகிற்கு எடுத் துரைக்கும் பெரும்பணி தமிழர் தலைமையில் தேசத்தின் குரலிற்கு வழங்கப்பட்டி ருந்தது.அரசியல் ஆளுமையும், தேச உருவாக்க சிந்தனையும் அற்ற வெறும் வன்முறைக் குழுவாக விடுதலைப் புலிகளைக் கணித்த அல்லது அவ்வாறு இருக்க வேண்டுமென் கிற கருத்தினைத் திணித்த சில பிராந்திய நலவாதிகளுக்கு அரசியல் ஆலோசகரின் முதிர்ச்சியான தேசிய விடுதலைக் கோட் பாட்டுக் கருத்துரைப்புகள் கசப்பாகவே இருந்திருக்கும்.விடுதலைப் புலிகளை இராணுவ வழிமூலம் அழிப்பதே சரியானதென தற்போது கூறும் பேராசான் ஜீ.எல். பீரிஸ், தேசத்தின் குரலோடுதான் சர்வதேசம் அங்கீகரிக்கும் நாகரிக அரசியல் பற்றிப் பேசினார்.சர்வதேசத்தின் ஏமாற்றும் தந்திரத்தைஉணர்ந்து கொண்டே பேச்சுஆழ்மனத்தில் இராணுவச் சிந்தனையும் நுனி நாக்கில் கற்றறிந்த ஏட்டுச் சுரக்காய்களும் ஊடாடுவதை அரசியல் வித்தகர் ஆறு சுற்றுப் பேச்சிலும் உணர்ந்திருப்பார்.திம்புவிலிருந்து ஜெனிவாவரை திலகர், யோகி, பாலசிங்கம், தமிழ்ச்செல்வன் போன்ற அரசியல் தளபதிகளை சிங்களத்தோடு பேசுமாறு அனுப்பியும் எதுவுமே அசைவுறாத நிலையில் இனி எந்த சிங்களத் தலைவர்களையும் நம்ப முடியாதென்கிற நிலைப்பாட்டினை 2007 ஆம் ஆண்டு மாவீரர் தின உரையில் தேசியத் தலைவர் முன் வைக்கிறார்.பேசிப் பயனில்லை என்பதையும், பேசியே அம்பலமாக்க வேண்டுமென தேசத்தின் குரல் உணர்ந்தார். ஆயினும் பேச வலியுறுத்தும் சர்வதேச நாடுகளின் ஏமாற்றும் தந்திரத்தை உணர்ந்தவாறே பேசச் சென்றார்கள் விடுதலைப் புலிகள்.35 வருடகாலப் போராட்ட வாழ்வில் ஐந்து வருடங்கள் சர்வதேச அரசியல் களத்திற்கு ஒதுக்கப்பட்டது. திம்புவில் தமிழர் போராட்டத் தலைமைகளால் உறுதியாக முன்வைக்கப்பட்ட முதல் மூன்று கோட்பாடுகளும் தேச உருவாக்கத்தோடு பரிணாமமடைந்து தாயகம், தேசியம், தன்னாட்சி என்கிற உச்ச கருத்து நிலையை வந்தடைந்துள்ளன.நியாயபூர்வமான கற்பனைக் கருத்துருவமாகக் கொள்ளப்பட்ட கோட்பாடுகள், விடுதலைப்புலிகளின் போராட்ட முன்னெடுப்போடும் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்ட தேச உட்கட்டுமானத்தோடும் யதார்த்த நிலையை எட்டியுள்ளது.அரசியல் கோட்பாட்டு வடிவத்தை உருவாக்கியவர்இந்த முழுமைப் பரிமாணத்திற்கான அரசியல் கோட்பாடு வடிவத்தை உருவாக்குவதில் தேசத்தின் குரல் ஆற்றிய பங்களிப்பு மிகவும் காத்திரமானதொன்றாக அமைகிறது.சமஷ்டி என்றாலே பதற்றமடையும் சிங்களத் தரப்பிற்கு "உள்ளக சுயநிர்ணயம்' என்கிற மாற்றுப் பதத்தை முன்வைத்து தமிழர் தரப்பின் அபிலாஷைகளை விளக்க முயற்சித்தார்.ஆனாலும் ஒற்றையாட்சி என்கிற குண் டுச் சட்டிக்குள் குதிரை ஓட்ட விரும்பும் சிங் களத்திற்கு சமஷ்டி, உள்ளக சுயநிர்ணயம், கூட்டாட்சி யாவும் அகராதியிலிந்து அகற் றப்படவேண்டிய சொற்பதங்களே.ஓருலகக் கோட்பாட்டுச் சிந்தனையைக் கொண்ட நாடுகளில் நடைமுறையிலுள்ள ஆட்சியமைப்பு வடிவங்களான சமஷ்டி, உள் ளக நிர்ணயம், கூட்டாட்சி என்பனவற்றையே தேசத்தின் குரல் தனது பேச்சுகளில் தீர்விற்கான மாற்று வழிமுறைகளாக முன்வைத்தார். அது குறித்து பேசப்படலாமென்பதை முன்னிலைப்படுத்தவோ அல்லது தாம் கடைப்பிடிக்கும் அரசியல் முறைமைகளை நியாயப்படுத்தவோ அனுசரணை வகித்த எவரும் முயலவில்லை.சிங்களம் விரும்பும் அரசியல் தீர்வோடு, சமரசம் கொள்ளும் நிர்ப்பந்தங்களையே தமிழர் தலைமை மீது திணிப்பதற்கு சர்வதேசம் விரும்பியது. இதனடிப்படையிலேயே இந்தியா ஏமாற் றியது போன்று சர்வதேசமும் இன்று எம்மை ஏமாற்றி விட்டதென தேசியத் தலைவர் தனது விசனத்தை மாவீரர் தின உரையில் தெரிவிக் கிறார்.கொசோவோவின் பிரகடனம் அவதானிக்கப்படுகிறதுஇன்றைய நிலையில் கொசோவாவின் சுயநிர்ணய உரிமைப் பிரகடனத்திற்கு சர்வ தேசம் மேற்கொள்ளப் போகும் இராஜதந்திர நகர்வுகளையும் அணுகுமுறைகளையும் அதே போன்று போராடும் சக்திகள் அனைத்தும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றன. அரசுகளிற்கிடையே ஏற்படும் யுத்தங்களும் அரசொன்றினை எதிர்த்து தமது சுயநிர்ணய உரிமைக்காக முன்னெடுக்கப்படும் மக்கள் யுத்தங்களும் சர்வதேச மட்டத்தில் பல பிராந்திய முரண்பாடுகளைத் தோற்று விக்கின்றன.இம்முரண்நிலையைப் பகுப்பாய்வு செய்து சர்வதேச நகர்வுகளுக்கு ஏற்றவாறு எமது தேச விடுதலையை வென்றெடுக்கக்கூடிய இராஜதந்திர வழிமுறையினை வகுக்கக்கூடிய வல் லாண்மை தேசத்தின் குரலிற்கு உண்டு.அவர் எம்மைவிட்டுப் பிரிந்தாலும் தமிழ்த் தேசிய அரசியல் ஆளுமையில் அண்ணன் ஆற்றிய கனதியான பங்களிப்பும், தேசியத் தலைவனின் ஆழமான பிரபஞ்சம் பற்றிய புரிதலும், நேர்த்தியான பாதையில் எமது விடுதலைப் போராட்டத்தை வழிநடத்தியே தீரும்.தமிழின வரலாறு பாலாவின்பெயரைச் சுமக்கும்அப்பாதையை சீராகச் செப்பனிட்டு, விடுதலை வேள்வித் தீயில் தன்னை இணைத்து தேசத்தின் குரலாகவும் அரசியல் முகவரியாகவும் திகழ்ந்த அன்ரன் பாலசிங் கம் அவர்களைத் தமிழின வரலாறு நிச்சயம் சுமந்து செல்லும்.வாழ்வதற்காகப் போராடினார்.போராடக் கற்றுக்கொண்டார்.கற்றவற்றைப் பிரயோகித்தார்.பிரயோகித்ததை நிலைநாட்டினார்.நிலைநிறுத்தியது விரிந்து செல்லும்.விரிவனவெல்லாம் இலக்கை அடையும்.
Thanks Uthayan.
jaalavan@gmail.com

No comments: