Wednesday 23 April 2008

15-வடபோர் படை நடவடிக்கை முறியடிப்பு: 150 படையினர் பலி! 400 படையினர் காயம்! 30 சடலங்கள் மீட்பு.

வடபோர் முனையில் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட பாரிய படை நடவடிக்கை விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.இதில் 150 சிறீலங்காப் படையினர் கொல்லபட்டுள்ளனர். மேலும் 400 படையினர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளாகியதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளளனர்.
இன்றைய முறியடிப்புச் சமரில் விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலைகளில் சிறீலங்காப் படையினரின் சடலங்களும் ஆயுத தளபாடங்களும் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன.இன்று அதிகாலை 2 மணியளவில் கிளாலி தொடக்கம் முகமாலை கண்டல் வரையிலான 7 கிலோமீற்றர் வரையில் சிறீலங்காப் படையினர் பெரும் எடுப்பில் படையயெடுத்துள்ளனர்.53வது, 55வது முன்ன
ணி தாக்குதல் படையணிகள் களமிறக்கப்பட்டனர். இவர்களுக்கு ஆதரவாக யுத்த டாங்கிகள், பல்குழல், ஆட்லறி, மோட்டார் எறிகணைகள் என கனரக ஆயுதங்களின் சூட்டாதரவும் வழங்கப்பட்டுள்ளன.படையினரின் முன்னேற்ற முயற்சிக்குக்கு எதிராக விடுதலைப் புலிகள் நண்பகல் 12.30 வரை கடுமையாக எதிர்த் தாக்குதலைத் தொடுத்து படையினரின் முன்னேற்ற முயற்சியை முறியடித்து, படையினரை பழைய நிலைகளுக்கு பின்வாங்கச் செய்துள்ளனர்.

jaalavan@gmail.com

Saturday 5 April 2008

14-சிறிலங்காவுக்கான இந்தியாவின் ஆயுத உதவியை எதிர்த்தும் குரல் கொடுப்போம்: தமிழர்களுக்கு நடிகர் சத்யராஜ் வேண்டுகோள்.

இலங்கையில் வாழ்கிற தமிழர்கள் நம் சகோதர, சகோதரிகள். செஞ்சோலையில் நம் தமிழ்க் குழந்தைகளைப் படுகொலை செய்த இலங்கை இராணுவத்திற்கு இந்திய அரசு உதவி செய்யக்கூடாது என்று தமிழர்கள் நாம் வலியுறுத்த வேண்டும் என்று நடிகர் சத்யராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கர்நாடகத் தமிழர்கள் மீதான கன்னட வெறியர்களின் இனவெறித் தாக்குதலைக் கண்டித்து சென்னையில் தமிழ்த் திரைத்துறையின் பல்வேறு அமைப்புக்கள் கூட்டாக இணைந்து மாபெரும் உண்ணாநிலைப் போராட்ட நிகழ்வு நடத்தினர்.
இந்நிகழ்வில் நடிகர் சத்யராஜ் பேசியதாவது:

(சத்யராஜின் உரையில் இடம்பெற்றுள்ள சொற்கள் செய்திக்குரிய அளவில் இடம்பெறக் கூடாது என்றாலும் தமிழின உணர்வு நலன் கருதி அப்படியே வெளியிடுகிறோம். (ஆ-ர்)

உங்களை சிரிக்க வைப்பதற்காக உங்களிடம் கைதட்டல் வாங்குவதற்காக சில ஐயிட்டங்களை அள்ளி வீசுவேன். இப்ப அதெல்லாம் எதுவும் செய்யப்போறதுல்ல.
ஏன்னா என்னைப் பொறுத்தவரை இது தமிழனோட உணர்ச்சியை வெளிப்படுத்துவதற்காக நடத்துகிற கூட்டம். பொதுவாக சில மேடைகளில் சில பேர் பெயரைச் சொன்னால் கைதட்டல் வாங்கலாம்.
யாருடைய பேரைச் சொன்னா நீங்க கைதட்டுவீங்களோ அவங்களோட பேரையெல்லாம் சொல்லி கை தட்டல் வாங்கலாம்.
(ஆவேசமாக) ஆனால் அப்படி அவங்க பேரைச் சொல்லி நான் கைதட்டல் வாங்கறதுக்குப் பதிலா நான் நாக்கைப் பிடுங்கிகிட்டுச் சாவேன்யா இங்க வந்தது வித்தை காட்டுறதுகில்ல..
கர்நாடகத்துல தமிழனை கன்னடன் அடிக்கிறான். அதுக்கு கண்டனம் தெரிவிக்க வந்திருக்கோம்.
ஒவ்வொரு நடிகன் பேரைச் சொல்லி கைதட்டல் வாங்கறதுக்காக வரலைய்யா.
அதிகமா சம்பளம் வாங்குற நடிகன் பேரைச் சொன்னா அதிகமா கைதட்டுவ...
அதைவிட கம்மியா சம்பளம் வாங்குற நடிகன் பேரைச் சொன்னா அதைவிட கம்மியா கைதட்டுவ..
அப்படி அவங்க பேற சொல்லி கை தட்டல் வாங்குறதைவிட நாக்கைப் புடுங்கிட்டுச் சாவான்யா இந்தத் தமிழன்.
உலகில் வாழும் 10 கோடி தமிழர்களுக்குப் போய்ச் சேருவதற்காக பேசும் பேச்சு இது.
மானமுள்ள தமிழர்களுக்குப் போய்ச் சேருவதற்காக பேசும் பேச்சு.
பொதுவா நான் என்னை மனுசன்னு சொல்லிக்கத்தான் ஆசைப்படறேன்..
ஆனா இன்னையிலிருந்து நான் மனுசன் இல்லை... தமிழன்னு சொல்லிக்கத்தான் ஆசைப்படறேன்.
அப்ப உங்க எல்லாத்துக்கும் ஒரு சந்தேகம் வரும். அப்ப மனுசன் தமிழன் இல்லையா? அப்படின்னு ஒரு சந்தேகம் வரும்.
அப்படி ஒரு சந்தேகமே உங்களுக்கு வேண்டாம்யா... தமிழன் மனுசன் இல்லை.... மரம். அப்படின்னுதான் நினைச்சுகிட்டு இருக்காங்க.
தமிழன் ஒரு மனுசனா இல்லாம மரமா இருந்தா என்ன என்ன நடக்கும்?
ஒரு நாய் காலை தூக்கிட்டு வந்து அங்கு சிறுநீர் கழிக்கும். அதை அந்த மரம் சகிச்சுக்கும்.
அந்த வழியா போற ஒருத்தன் அந்த மரத்தை வெட்டிட்டுப் போயி அந்த மரத்துல கட்டில் செய்து கால் மேல கால் போட்டு ஆட்டிகிட்டு இருப்பான்.
அப்புறம் மேசை நாற்காலி செய்து அது மேலயே உட்கார்ந்துக்குவான்.
இதையெல்லாம் சகிச்சுக்கிட்டு நாம மரமா வாழ்ந்திகிட்டு இருந்தா நமக்கு மரியாதையே இல்லாம போயிடும்.
மரமா வாழுற தமிழனை மனுசா வாழு-தமிழனா வாழுன்னு சொல்றேன்.
ஏன்னா எந்த மேடையில் எதைச் சொல்லி கைதட்டல் வாங்கறதுன்னு எனக்கும் தெரியும்.
கர்நாடகத்தில நம்ம சகோதரனை அடிக்கிறான். அதனால் அது சம்பந்தமா மட்டும்தான் நான் பேசுவேன்.
காந்தி சொல்லியிருக்கார்.. கண்ணுக்கு கண் என்று ஆரம்பிச்சா உலகத்தில இருக்கிற 600 கோடி பேரும் கண்பார்வையற்றவர்களாகத்தான் இருக்கனும். அதனால பழிவாங்குற உணர்ச்சி இருக்கக் கூடாதுன்னு காந்தி சொன்னாரு.
ஆனால் இப்ப அது சரிப்பட்டு வராதுங்க..
ஏன்னா தமிழனோட கண்ணை மகராட்டிரத்துல பால்தாக்கரேன்னு ஒரு ஆள் சிவசேனானு ஆரம்பிச்சு பிடுங்க ஆரம்பிச்சான்...
மலேசியாவுல தமிழன் கண்ணை பிடுங்கறான்...
நம்ம ஈழத்தில் தமிழன் கண்ணை பிடுங்கறான்...
இப்ப கர்நாடகவிலேயும் தமிழனோட கண்ணை பிடுங்கறான்...
கண்ணுக்கு கண் கூடாதுக்கு காந்தி சொன்னதை நாம கடைப்பிடிச்சா இந்த உலகத்துல இருக்கிற 600 கோடி பேரில் 10 கோடி தமிழன் மட்டும் குருடனா இருப்பான்...
மீதி 590 பேரு கண்ணோட சுத்திகிட்டு இருப்பான்.. மறந்துடாதீங்க...
590 பேரு கண்ணோட சுத்திகிட்டு இருப்பான்.. 10 கோடி தமிழன் மட்டும் தான் குருடனா சுத்திகிட்டு இருப்பான்.
ஏற்கெனவே தமிழன் கருத்துக் குருடனாகவும்- சிந்தனைக் குருடனாகவும் சுத்திகிட்டு இருக்கான்.
அவனுக்கு கண்ணும் குருடாகிப் போச்சுன்னா அவனுக்கு வாழ்க்கை மயிர் மாதிரி இருக்கும்... ஞாபகம் வச்சுக்க...
இது இன்னைக்கு நேத்தைக்கு நடக்கிற பிரச்சனை இல்லீங்க...
கர்நாடக முதல்வராக குண்டுராவ் இருந்தபோது தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். விருந்துக்குச் சென்றார்.
விருந்தில் நன்றாக சாப்பிட்ட எம்.ஜி.ஆர்., கடைசியில் ஒரு தம்ளர் நீரை அருந்த மறுத்துவிட்டார்
அங்க என் தமிழன் நீரில்லாமல் சாகிறான் என்று நீர் அருந்த மறுத்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
அவர் தமிழர்களுக்காகவே வாழ்ந்தவர்.
எல்லா வகையிலும் கன்னடர்களுக்கு நம்மீது எரிச்சல்.
சாய்குமார் என்ற பிரபல ஒரு கன்னட நடிகர் தனக்குப் பிடித்த நடிகர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்று ஒரு பேட்டியிலே கூறியபோது,
ஏன் கன்னட நடிகர் ராஜ்குமாரை பிடித்த நடிகர்னு சொல்லுன்னு சொல்லி அடித்து உதைத்தது.
இதுக்குப் பேர்தான் கன்னட வெறிங்கிறது.
சந்தனக் கடத்தல் வீரப்பன் அட்டூழியத்தைப் பார்த்து நானே ரொம்ப நொந்து போயிருக்கேன். ஆனால் பல வீரப்பன்களை நீங்கள் இப்போது உருவாக்கிவிடாதீர்கள். அது உங்க கையில்தான் இருக்கிறது.
"நாம் எடுக்கும் ஆயுதம் எது என்பதை நமது எதிரிகள்தான் தீர்மானிக்கிறார்கள்" என்று மாசேதுங் சொல்லியிருக்காரு..
நாங்கள் ஆயுதத்தை எடுக்க விரும்பவில்லை. ஆயுதத்தை எடுக்கக்கூடிய சூழ்நிலையை தயவு செய்து உருவாக்கி விடாதீங்க.
ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டத்தால் கர்நாடகவுக்கு எதுவித நட்டமும் இல்லை.
நம்ம நீரை நாமே பயன்படுத்துகிறோம்...
என் பொண்டாட்டி கூட நான் படுக்கிறேன். உனக்கு ஏண்டா வேகுது?
ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டத்தால் உனக்கு எந்தவித பிரயோசனமும் இல்லை. நீ எதையாச்சும் சொல்லி அரசியல் பண்ணுவதற்காக பேசுகிறீர்கள்.
வாட்டாள் நாகராஜூன்னு ஒரு பெரிய காமெடியன் இருக்கான். நல்லவேளை அவன் சினிமாவில நடிக்கலை. நம்ம வடிவேலு எல்லாம் கிட்டயே வரமுடியாது.
அந்த வட்டாள் நாகாராஜூ சொல்றாரு, ஈரோடு எல்லாம் கர்நாடகத்துக்கு வந்து சேரனுமாம்.
ஈரோடு- கிருட்டிணகிரி- இந்த சென்னை- கடற்கரை எல்லாம் கர்நாடகத்துக்கு போய் சேரணும். நாம வாயில்ல விரலை வெச்சிகிட்டுப் போகனும்.
வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு-
இதையே பேசிகிட்டு இருக்காதே.. நீ கே.பு. ஆகிடுவ...
வந்தாரை வாழ வைக்கவும் தெரியனும்--
வாலை ஆட்டுனா ஒட்ட நறுக்கவும் தெரியனும்யா....
அவன் தாண்டா தமிழன்...
சும்மா வந்தாரை வாழவைப்பேன்னு சொல்லிகிட்டே இருந்தா உம்மேல குதிரை ஏறிட்டுத்தான் இருப்பான்.
நீ குனிஞ்சா ஏறத்தான் செய்வான்.. குனியாம- நிமிர்ந்து நில்லு!
ஒவ்வொரு தொழில் செய்வோருக்கும் ஒவ்வொரு சங்கங்கள் இருக்கின்றன. பிரச்சினைகள் வரும்போது ஒரு சங்கத்தினர் போராடினால் மற்றவர்கள் தார்மீக ஆதரவு தரலாம்.
ஆனால் ஒரு தமிழன் தாக்கப்படும்போது தமிழர்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.
எங்க இருந்துமே தமிழனுக்கு தண்ணீர் வரக்கூடாதுன்னு சொல்றான்யா...
காவிரியிலிருந்து வரக்கூடாது
கிருஷ்ணாவிலிருந்து வரக்கூடாது...
முல்லைப் பெரியாறு இருந்து வரக்கூடாதுன்னு சொல்றான்..
சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றவே கூடாதுங்கறான்..
எனக்கு மனுசனா வாழனும்தான் ஆசை.
தமிழன் - தமிழன்னு சொல்லி பிரிவினையை பேச எனக்கு ஆசையே இல்லை...
ஆனா பிரிவினை பேச வேண்டிய சூழ்நிலையை- தமிழன்னு மார் தட்டிக்க வேண்டிய சூழ்நிலையை நீதான் கொண்டுவந்திருக்க...
தமிழர்களே உங்களுக்கு அனைத்துக்கும் ஒரு தமிழன் இருக்கிறான்.
மத்தவங்கள தூக்கி வெச்சுக்கிட்டு ஆட வேண்டிய அவசியமே இல்லை.
அய்யா.. நீ சாமி கும்பிட ஆசைப்பட்டா கூட உனக்குத் தமிழ்க் கடவுள் முருகன் இருக்கிறான்...
பழனி முருகன் இருக்கான்...
வடபழனி முருகன் இருக்கான்
திருச்செந்தூர் முருகன் இருக்கான்...
போய் முருகனைக் கும்பிடு...
மதுரை வீரனைக் கும்பிடு
சுடலை மட சாமியைக் கும்பிடு...
உனக்குத் தமிழ்க் கடவுள் 1008 சாமி இருக்கான்யா....
வட நாட்டு சாமி இராமர் சாமியில்ல... இராகவேந்திரர் தேவையில்ல... கேரளா அய்யன் உனக்குத் தேவையில்லை..
முருகன் போதும் உனக்கு.
அந்த அளவுக்கு தமிழனை உணர்ச்சிவசப்பட்டு பேச வைக்கிறாங்க... இது என்ன இந்தியா? கர்நாடகத்துல என்ன வேண்டுமானாலும் செய்வீன்ன நீ இந்தியன் கிடையாதா?.தமிழா! தமிழா! விழித்துக் கொள்!
ஒவ்வொரு விடயத்திலும் தமிழனுக்குத் தீங்கு நடந்தா குரல் கொடு!
இங்க மட்டுமல்ல இலங்கையில் நம்ம தமிழர்கள் தாக்கப்படுகிறார்களா? குரல் கொடுய்யா..
இலங்கையில் இருக்கிற தமிழன் உன் சகோதரன் யா...உன் சகோதரி..
அந்த உணர்ச்சி உனக்கு வேண்டாமா?
இலங்கையில செஞ்சோலைங்கிற பள்ளிக்கூடத்து மேல இலங்கை இராணுவம் குண்டுபோட்டு 60 தமிழ்க் குழந்தைகள் சாகுறாங்க...
அந்த இலங்கை இராணுவத்துக்கு நம்ம இந்திய அரசாங்கம் உதவி செய்யலாமா?
செய்யக்கூடாதுன்னு சொல்லு... சொல்றா....செய்யக்கூடாதுன்னு....
தமிழன் எந்த மூலையிலும் நசுக்கக் கூடாது.. தமிழா நீ குனியாதே...உன் மேல எவனும் குதிரையேற அனுமதிக்காதே... நீ முட்டா...ஆயிடுவ.. என்றார் சத்யராஜ்.
நன்றி புதினம்.
jaalavan@gmail.com

Thursday 3 April 2008

13-இப்போது இன்னொரு "ஜயசிக்குறு"- வன்னிக்குள் சிங்களப்படை வருவதனையே நாங்கள் எதிர்பார்க்கிறோம்: துணைத் தளபதி அமுதாப்.

வன்னிப் போரரங்கில் "ஜயசிக்குறு" போன்றதொரு படை நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. சிங்களப்படை வன்னிக்குள் வரவேண்டும், படை நடவடிக்கையைச் செய்ய வேண்டும். அனைத்து படைகளையும் பயன்படுத்தட்டும், அதனைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஜயசிக்குறுவைப் போல் சிங்களப் படையினரை நாங்கள் கொன்றொழித்து வெற்றிபெறுவோம் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என்றும் வன்னி என்பது சிங்களப் படைக்குரிய சாவுக்களம் என்றும் பொதுமக்களிடத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதி அமுதாப் விளக்கியுள்ளார்.
வவுனியா மாவட்டத்தில் உள்ள கனகராயன்குளத்தில் கடந்த சனிக்கிழமை (29.03.08) நடைபெற்ற "புலிகளின் குரலின்" முத்தமிழ் கலையரங்க நிகழ்வில் அவர் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்:45,241 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பைக்கொண்ட, ஒரு கோடியே 80 லட்சம் மக்களைக் கொண்ட, கடல்- தரை- வான் ஆகிய முப்படைகளையும் உள்ளடக்கிய 3 லட்சம் படைகளைக் கொண்ட சிறிலங்காவின் சிங்கள அரசாங்கம் 61 ஆவது சுதந்திர நாளை நிறைவு செய்திருக்கிறது.20,369 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பைக்கொண்ட, அண்ணளவாள 35 லட்சம் மக்களைக் கொண்ட, சில ஆயிரக்கணக்கான விடுதலைப் போராளிகளைக்கொண்ட வடக்கு-கிழக்கு தாயகத்தில் தமிழ் மக்களின் பின்பலத்தோடு செயற்படும் நாங்கள் இன்று 36 ஆவது ஆண்டில் விடுதலைப் போராட்டத்தை நடாத்திக் கொண்டிருக்கிறோம். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் இரண்டு முனைகளில் இந்த விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருக்கின்றது. ஒன்று யுத்தம் -மற்றது அரசியல். இந்த இரண்டு முனைகளின் ஊடாக நடத்தப்படுகின்ற விடுதலைப் போராட்டத்தினுடைய வரலாற்றில் யுத்தத்தினூடாக நாங்கள் எதனைச் சாதித்தோம், எதனைச் சாதித்துக் கொண்டிருக்கிறோம் என்கின்ற சில விடயங்களை- களங்களில் நாங்கள் கண்டதைச் சொல்லலாம் என நினைக்கின்றேன்.
இந்த விடுதலைப் போராட்டம் சண்டைகளினூடாக சாதனைகளை, வரலாறுகளை இந்த மண்ணில் படைத்திருக்கிறது. இந்த நிகழ்வு நடைபெறும் இடத்திலிருந்து அண்ணளவாக 16 கிலோ மீற்றர் தூரத்தில் சிங்கள இராணுவத்தினுடைய எல்லை இருக்கின்றது. அந்த எல்லையிலிருந்து 500 மீற்றர் தூரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தமிழ் மக்களை பாதுகாக்கும் எல்லை இருக்கின்றது. சவால் நிறைந்த இந்த கட்டத்தில்- இந்த இடத்தில் சவாலாக நின்று நாங்கள் இந்நிகழ்வை நடத்திக்கொண்டிருக்கிறோம். எமது விடுதலைப் போராட்டத்தின் ஆயுதப்போராட்டம் முனைப்புப்பெற்ற காலமான 83 ஆம் ஆண்டிலிருந்து யுத்த களங்களில் நாங்கள் வெற்றி பெற்றிருக்கின்றோம். 11.10.1980 அன்று யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் விடுதலைப் புலிகள் இயக்கம் முதன் முதலாக இரண்டு சிங்களப் படையினரைச் சுட்டு, இரண்டு ஆயுதங்களை எடுத்தபோதுதான் தன்னுடைய ஆயுதப்போரை தொடங்கியது. அன்றிலிருந்து இன்று வரை தமிழ் மக்கள் சார்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் களங்களில் சாதித்தது என்ன? தமிழர்கள் தங்களுடைய விடுதலைக்காக உயிர்களைக் கொடுக்கத் தொடங்கிய 82 ஆம் ஆண்டு ஒரு விடுதலைப் போராளி மடிந்தான். 83 ஆம் ஆண்டில் திருநெல்வேலியில் 23 சிறிலங்கா இராணுவத்தைக் கொன்றதிலிருந்து, 85 ஆம் ஆண்டு கொக்கிளாய் முகாமைத் தாக்கி அழித்ததிலிருந்து விடுதலைப் போராட்டத்தின் இராணுவ வளர்ச்சி படிப்படியாக வளர்ந்து வந்துகொண்டிருந்தது. 87 ஆம் ஆண்டு ஒப்றேசன் லிபிறேசனை சிங்கள அரசாங்கம் செய்தபோது கரும்புலி என்ற வடிவத்தை நாங்கள் உருவாக்கி, ஒப்றேசன் லிபிறேசனை முறியடித்த புதிய போர் வடிவம் இந்த மண்ணில்தான் உருவாக்கப்பட்டது. 26 ஆண்டுகளுக்கு முன் முதலாவது மாவீரன் இந்த மண்ணிலே மடிந்தான். நாங்கள் நிமிர்ந்தோம். இதற்கெல்லாம் காரணம் எங்கள் மக்கள். உங்களுடைய பிள்ளைகளுக்குப் பின்னால் நீங்கள் நின்று சாதித்தீர்கள், இயக்கம் நிமிர்ந்தது. 90 ஆம் ஆண்டு பிறந்தது. சாதாரண ஒரு சமாதானச் சூழல் உருவாகியது. மீண்டும் சிங்களப் படைகளுக்கும் தமிழர்களுக்கும் இடையே வரலாற்று ரீதியான யுத்தம் தொடங்கியது. யுத்தம் நடந்தது. "வன்னி விக்கிரம 1,2,3", "ஆகாய கடல்வெளிச் சமர்", "மின்னல்" இப்படி பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 95 ஆம் ஆண்டு "சூரியக்கதிர்" நடவடிக்கை நடந்தது. 9 லட்சம் பேர் வாழ்ந்த வரலாற்றுப் பூமியை, தமிழ் மக்களின் கலாச்சாரப்பூமியை சிதைக்கும் நடவடிக்கையில் சிறிலங்கா அரசாங்கம் இறங்கியது. படைகளை நகர்த்தியது. 52 நாள் யாழ். குடாநாட்டில் சிங்களப் படைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் யுத்தம் நடந்தது. 492 போராளிகள் தங்கள் உயிர்களை தியாகம் செய்தார்கள். ஆயிரக்கணக்கான சிங்களப் படையினர் அழிக்கப்பட்டனர். தந்திரோபாய ரீதியான யுத்தத்தை பிடித்து, பிடித்து நாங்கள் பின்வாங்கி வந்தோம். இது உண்மை.
யாழ்ப்பாண இடப்பெயர்வுக்குப் பின்னர் வன்னியில் எங்களுடைய மக்கள் ஒரு மனித இனம் எப்படி வாழக்கூடாதோ, ஒரு மனித இனம் எப்படி சாகடிக்கப்படக்கூடாதோ அவற்றுக்கெல்லாம் முகம்கொடுத்தனர். வரலாற்று எதிரியான சிங்கள தேசம் இதனைச் செய்தது. உலகம் பார்த்துக்கொண்டிருந்தது. வன்னிக்கு வந்த பின்னர் சிங்கள அரசாங்கம் தன்னுடைய போரை அடுக்கடுக்காகத் தொடங்கியது. "யாழ்பாணத்தை சிங்களப் படைகள் கைப்பற்றியுள்ளன, 80 விழுக்காட்டுப் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டுள்ளனர், வன்னியில் 20 விழுக்காட்டை அழித்துக்கொண்டிருக்கிறோம், விடுதலைப் புலிகள் இயக்கம் அழிந்தது" என்றெல்லாம் கூறியபோது விடுதலைப் புலிகள் இயக்கம் எழுந்தது. 18.01.1996 அன்று முல்லைத்தீவில் "ஓயாத அலைகள்" மூலம் 24 மணித்தியாலத்தில் 2,000 சிங்களப் படைகளை விடுதலைக்குப் போராடும் இயக்கம் பிணமாக்கியது, ஆயுதங்கள் அள்ளி எடுக்கப்பட்டன, ஆட்லறிகள் எடுக்கப்பட்டன, புதிய பலத்துடன் விடுதலைப் புலிகள் இயக்கம் நிமிர்ந்தது. இதனை மூடி மறைப்பதற்காக சிங்களப்படை "சத்ஜெய" நடவடிக்கை மூலம் கிளிநொச்சியைக் கைப்பற்றியது. "சத்ஜெய 1,2,3" நடவடிக்கைகளால் மக்கள் இடம்பெயர்ந்தார்கள், எங்களுடைய மக்கள் வீதிகளில் செத்து கிடந்தார்கள், பிணங்கள் பிணங்களாகக் கிடந்தார்கள். எவருமே பார்க்கவில்லை. விடுதலைக்காகப் போராடிய இயக்கப் போராளிகள் எங்களுடைய மக்களை தூக்கி அடக்கம் செய்தார்கள். எங்களுடைய மக்களுக்காகத் தொடர்ந்து போராடினார்கள். தமிழர்களுடைய விடுதலை இயக்கம் புதிய சவால்களில் இருந்து எப்படி மீண்டது, தலைவர் எப்படி மீளவைத்தார் என்பதுதான் வரலாறு. முல்லைத்தீவு தாக்குதலோடு கிளிநொச்சியைக் கைப்பற்றினார்கள். கிளிநொச்சியை கைப்பற்றிய கையோடு "ஜயசிக்குறு" படை நடவடிக்கை தொடக்கினார்கள். 13.05.97 அன்று ஓமந்தையில் இருந்து "ஜயசிக்குறு" படை நடவடிக்கை எடுத்து வந்தார்கள். சிங்கள அரசாங்கம் தன்னுடைய படைபலம் முழுவதையும் பயன்படுத்தி 50-க்கும் மேற்பட்ட உலக நாடுகளுடைய ஆயுதங்களை வாங்கி, இந்த வீதியின் ஊடாக 18 மாதங்களாக தவழ்ந்து தவழ்ந்து மாங்குளம் எங்கே, எங்கே என கேட்டுப் போனார்கள். ஒட்டிசுட்டானுக்குப் போனார்கள், பள்ளமடுவுக்கும் போனார்கள். விடுதலைப் புலிகளுடைய கதை முடிவதாக அந்த நேரத்தில் உலகம் கூறியது. அப்போது படையினர் மாங்குளத்தில் நின்றனர். கிளிநொச்சியில் நாங்கள் பாதுகாப்பு வேலியைப் போட்டிருந்தோம். இராணுவ நடவடிக்கைகள் கிட்டத்தட்ட 25 கிலோ மீற்றருக்கு நெருக்கி கொண்டுவரப்பட்டன. இந்த நேரத்தில் தலைவர் முடிவெடுத்தார். ஒருபக்கம் சிங்களவனுடைய வலிந்த தாக்குதலை மறித்து வைத்துக்கொண்டு மறுபக்கத்தில் கிளிநொச்சியை அழித்தோம். 26.09.98 அன்று நாள் "ஓயாத அலை - 02" நடவடிக்கை மூலம் 48 மணித்தியாலத்தில் ஒருபக்கம் ஒரு வலிந்த தாக்குதலை மறித்து வைத்துக்கொண்டு இன்னுமொரு பக்கம் மக்களின் பின்பலத்துடன் 2,000 படையினரை கிளிநொச்சியில் பிணமாக்கினோம். வரலாறு நிமிந்தது, தமிழினம் நிமிர்ந்தது. நாங்கள் எப்படி நிமிர்ந்தோம்? நாங்கள் என்றுமே தன்னம்பிக்கையை இழந்தவர்கள் அல்லர். நாங்கள் என்று கூறுவது தமிழினத்தையே ஆகும். தமிழினம் என்றும் நம்பிக்கையை இழந்தது கிடையாது. கிளிநொச்சியை மீட்டோம். சிங்களவர்கள் வந்து மாங்குளத்தில் நின்றார்கள். விடுதலைப் புலிகளினுடைய கதை முடிகிறது என்று கூறினார்கள். ஒட்டிசுட்டானில் நின்றவர்கள் இதோ புதுக்குடியிருப்புக்கு போகிறோம் என்று கூறினார்கள். மாங்குளத்தில் நின்றவர்கள் இதோ கிளிநொச்சியில் கையைத் தொடுகிறோம் என்று கூறினார்கள். எரிந்த சாம்பலில் இருந்து உயிர்த்தெழுகின்ற பீனிக்ஸ் பறவையைப் போன்றது உங்கள் இயக்கம். அந்த இயக்கத்தில் இருப்பவர்களை பெற்று வளர்த்தவர்கள் நீங்கள். அந்த இயக்கத்தை வழி நடத்துகின்ற தலைவர் எரிமலை போன்றவர், கிட்ட நெருங்கமுடியாது. அவருடைய வழிகாட்டலுடன், அவரின் தீர்க்கதரிசன முடிவுடன் "ஓயாத அலை - 03" நடவடிக்கை இடம்பெற்றது.
வன்னியில் மக்கள் பட்டினிச்சாவை எதிர்கொண்டபோது, வன்னியில் எங்களுடைய மக்கள் பனடோலுக்கு வழியில்லாமல் துடித்தபோது, "ஓயாத அலை - 03" நடவடிக்கை மூலம் 5,000 சிங்களப் படையினர் செத்து மடிய, 10,000 சிங்களப் படையினர் காயப்பட்டு இந்த வீதியால்தான் போனார்கள். மாங்குளம் எங்கே, எங்கே என்று கேட்டுச் சென்ற படையினர் ஆறு நாட்களில் ஈரட்ட எங்கே, எங்கே என்று கேட்டவாறு ஓடினர். துரத்தியவர்கள் யார்? அப்போது வன்னியில் இருந்த மக்களும் நாங்களும்தான். நீங்களும், நாங்களும் உங்களுடைய பிள்ளைகளும் துன்பப்பட்டு, துயரப்பட்டு, பிணங்களுக்குள்ளும், இரத்தத்துக்குள்ளும், பிண வாடைக்குள்ளும் வாழ்ந்து நிமிர்ந்தோம். எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்த நம்பிக்கையில் நாங்கள் நிமிர்ந்ததால் ஆறு நாட்களில் ஓடினான், இந்த வீதியால்தான் ஓடினான். துரத்தி வந்தோம். இந்த நிகழ்வு தற்போது நடக்கும் இடத்தில் ஆட்லறித்தளம் இருந்தது. பாடசாலைக் கட்டடத்தில் காயமடைந்த சிங்களவனுக்கு மருந்து கட்டினார்கள். இந்த இடங்களையும் மீட்டோம். இன்று 16 கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள எல்லையில் இருக்கிறார்கள். சண்டை ரீதியாக, யுத்த ரீதியாக சிங்களப் படைகளோடு போராடுகின்ற இயக்கம் எதனைச் செய்யப் போகிறது? வெற்றி பெறுவார்களா? தோற்றுப் போவார்களா? கடந்த கால வரலாறுகளை நாங்கள் பார்க்க வேண்டும். இங்கிருந்தவர்களை 6 நாட்களில் அங்கு கொண்டுபோய் நிறுத்தினோம்.ஆனையிறவை அசைத்தது புலிப்படைவடபோர்முனைப் பக்கம் திரும்பினோம். 240 வருடங்கள் பழைமை வாய்ந்த ஆனையிறவை அசைக்க முடியாது என்று கூறினார்கள். சந்திரிகா அறிக்கையும் விட்டார். அமெரிக்காவில் இருந்து வந்த சில இராணுவ அதிகாரிகளும் கூறினார்கள். பூகோள ரீதியாக 240 வருடங்கள் பழைமை வாய்ந்த ஆனையிறவில் 15,000 படைகளை சுற்றி விட்டிருக்கிறோம், அதனை அசைக்க முடியாது என்றார்கள். அசைத்தது புலிப்படை!26.03.2000 அன்று சிங்கள அரசாங்கத்தின் கடற்படைக்குச் சவாலாக கடலில் கரும்புலிகள், கடற்புலிகள் சாதனை நிகழ்த்த, வெற்றிலைக்கேணியில் இருந்து சென்ற 1,200 போராளிகள் குடாரப்பில் தரையிறங்கினார்கள். கழுத்துமட்ட நீருக்குள்ளால் நடந்து இத்தாவிலுக்கு போனார்கள். ஆனையிறவில் 15,000 படை, யாழ். குடாநாட்டில் 20,000 படை என 40 ஆயிரம் சிங்களப் படைக்கு மத்தியில் 1,200 போராளிகள் நின்றனர். சாவினுடைய விளிம்பு- மரணத்தின் வாசல் அது.தரை வழிப்பாதை இல்லை-நீருக்குள்தான் விநியோகம் போக வேண்டும். யுத்தம் தொடங்கியது. இத்தாவிலில் நிற்கும் 1,200 புலிப்படையை நாங்கள் அழிக்கிறோம், பால்ராஜ் அண்ணையை கைது செய்கிறோம் என்று சந்திரிகா கூறினார். சிறிலங்காவின் முழுப்பலமும், முழுவளமும் பயன்படுத்தப்பட்டது. யுத்த களத்தில சிவப்புப் புள்ளி விழாத எத்தனையோ படைத்தளபதிகள் பலாலியில் இறங்கினார்கள்- யுத்தத்தை நடத்தினார்கள். யுத்தத்திற்கு எதிராக நாங்கள் யுத்தத்தை நடத்தினோம். காலைக் கடனைக்கூட கழிக்கமுடியாத யுத்தம். அப்படித்தான் அந்த யுத்தம் இருந்தது. 34 நாட்கள் சிங்களத்தின் முழுப் படைபலத்துக்கு எதிராக விடுதலை இயக்கம் போராடியது. காயமடைந்த போராளியை தூக்கி காலடியில் வைத்துவிட்டு, வீரச்சாவடைந்த சகோதரனைத் தூக்கி பதுங்கு குழிக்குள் வைத்து விட்டுப் போராடினோம். எதற்காகப் போராடினோம்? நாங்கள் எந்த சக்தியைக் கண்டும், எந்தப் பலத்தை கண்டும் தளர்ந்ததும் இல்லை- தடுமாறியதும் இல்லை. பால்ராஜ் அண்ணனைக் கைது செய்ய என்று வந்த படை கைது செய்யப்பட்டது. எங்களை அழிக்க வந்த படை மீட்கப்பட வேண்டிய படையாக மாறியது. யாமினி கொட்டியாராச்சி என்றொரு பிரிகேடியர் வந்தார். எழுதுமட்டுவாளில் இருந்து கிளம்பினார்கள். இதோ பளைக்குப் போகிறேன், யுத்தத்தை முடிக்கிறேன் என்றார். சண்டையை 5 மணிக்குத் தொடங்கினார். இரவு 6 மணி மணி ஆகியது. என்னுடைய கண்ணுக்கு முன்னால் எங்களின் படைகள் கொல்லப்படுவதனை என்னால் பார்க்க முடியாது என்று இறுதியாகக் கூறினார். களத்தில் வைத்து ஒரு படைத்தளபதியை நாங்கள் இடம்மாற்றம் செய்தோம்- ஓய்வுக்கு அனுப்பி வைத்தோம் என்பது சாதாரண விடயமல்ல. புலிப்படையின் வீரம்-அதன் நம்பிக்கை-அதன் போரிடும் ஆற்றல்-அவர்களுடைய எரிமலைக்குணம்-நெருப்பில் நீராடிப்போகின்ற அந்த வலு 34 நாட்களில் இத்தாவில் சமர்க்களத்தில் சிங்களப் படையை ஆட்டம் காண வைத்தோம். ஆனையிறவுப் படைத்தளத்தில் 15,000 படையினர் இருந்தனர். கிளாலியால் ஓடினார்கள். செத்துச் செத்து ஓடினார்கள். ஆட்லறிகள், ஆயுதங்கள், சப்பாத்துக்கள் எல்லாவற்றையும் போட்டுவிட்டு உயிர்தப்பினால் போதுமென 15,000 படையினரும் கிளாலியால் ஓடினார்கள். நின்ற படையை வந்த படை கூட்டிக்கொண்டு ஓடிய வரலாறு நிகழ்த்தப்பட்டது. யாழ்ப்பாண வாசல் வரைக்கும் நாங்கள் போனோம். வாசல் வரைக்கும் போன எங்களுக்கு பலாலி வரைக்கும் போக முடியாததற்கு காரணம் என்ன? எங்களிடம் ஆட்பலம் இருக்கவில்லை. நாங்கள் அத்துடன் யுத்தத்தை நிறுத்தினோம். அப்போது நாங்கள் யுத்தத்தில் எப்படிப்பட்ட தளங்களை, எப்படிப்பட்ட இடங்களை, எப்படிப்பட்ட சவால்களைச் சந்தித்து அதிலிருந்து எப்படி நாங்கள் மீண்டோம், ஆனையிறவைப் பிடித்தோம். ஆனையிறவைப் பிடித்துக்கொண்டு யாழ்ப்பாணம் வரைக்கும் போனோம். வரலாறு இன்னமும் முடியவில்லை, இருக்கிறது. 95-இல் தலைவர் கேட்ட 5,000 பேரும் வரலாற்று அவலமும்யாழ்ப்பாணத்தை 95 ஆம் ஆண்டு படையினர் கைப்பற்றப் போகிறார்கள். அங்கே 9 லட்சம் மக்கள் வாழ்ந்தார்கள். அன்று 9 லட்சம் மக்களில் 5,000 பேரையாவது உடனடியாக போராட்டத்திற்கு வருமாறு தலைவர் கேட்டார், வரவில்லை. அந்த 5,000 பேரும் வந்திருந்தால் அன்று நாங்கள் "சூரியக்கதிர்" படை நடவடிக்கையை மறித்திருக்க முடியும். ஒரு பெரிய அவலத்தை நாங்கள் சந்தித்தோம். உலகத்தில் ஒரு தரைவழிப்பாதை இல்லாமல் 9 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்த பெரிய அவலம் அது. 95 ஆம் ஆண்டு கிளாலியால் வந்த மக்களை கொண்டு வந்து நிறுத்தி, அந்த மக்களுக்கு விடுதலைப் புலிகள் ஆறுதலளித்தனர். விடுதலைப் போரட்ட வரலாற்றில் இப்படியொரு அவலம் நடந்ததாக இல்லை. ஆனையிறவைப் பிடித்து அங்கே வந்தோம். திருப்பி அவன் படை நடவடிக்கை செய்தான்.
72 மணி நேர சமர்25.04.2001 அன்று "தீச்சுவாலை" என்ற படை நடவடிக்கை தொடங்கப்பட்டது. இது சாதாரண நடவடிக்கை இல்லை, இது மிகப்பெரிய நடவடிக்கை. எல்லா நாடுகளில் இருந்தும் உதவிகளை வாங்கி, இராணுவத் திட்டங்களை வாங்கி "தீச்சுவாலை" என்று நடவடிக்கையைச் செய்தார்கள். "அக்கினி" என்றால் புலியை எரிக்கப் போகிறோம் என்றே அர்த்தம். கிளாலியில் இருந்து கண்டல் கரை வரைக்கும் 8 கிலோ மீற்றரில் மறித்தோம். சிங்கள அரசாங்கத்தின் 53, 55 ஆவது டிவிசனை உள்ளடக்கிய 12,000 முன்னணிப் படையினர் முன்னேறினார்கள். பல்குழல், நெடுந்தூர- குறுந்தூர ஆட்லறிகளை லட்சக்கணக்கில் ஏவியவாறு, விடுதலைப் புலிகளினுடைய காப்பரண் வரிசையை 12,000 முன்னணிப் படையினர் உடைத்தனர். எட்டு இடங்களில் உடைத்தார்கள். ஆனையிறவு என்ற அவாவோடு அவர்கள் வந்தார்கள். புலிப்படைக்கும் சிங்களப் படைக்கும் முகமாலை, கிளாலி, கண்டலில் போர் மூண்டது. போராளிகள் ஒவ்வொரும் உறுதியுடன் களத்தில் நின்றார்கள். 72 மணித்தியாலங்களாக யுத்தம் நடந்தது. உணவு இருந்தும் சாப்பிட நேரமில்லாமல், காயமடைந்த போராளியை தூக்கி ஏற்றுவதற்கு நேரமில்லாமல், வீரச்சாவடைந்தவனை தூக்கி பதுங்குகுழிக்குள் வைத்து விட்டு,72 மணித்தியாலங்களாக எங்களுடைய போராளிகள்- உங்களுடைய பிள்ளைகள் - உங்களுடைய உடன்பிறப்புக்கள்- தலைவரின் திட்டத்தை நெறிப்படுத்தினார்கள். 72 மணித்தியாலங்களில் "தீச்சுவாலை" அணைந்துபோனது, உலகம் அதிர்ந்தது, சிங்களம் திடுக்கிட்டது. நடந்தது என்ன? 72 மணித்தியாலங்களில் 142 மாவீரர்களின் உயிர் வீழ்ந்தது. 30 நிமிடத்திற்கு ஒரு உயிர் கொடுத்து நாங்கள் போராடினோம். கிட்டத்தட்ட 500-க்கும் மேற்பட்ட சிங்களப் படையை பிணமாக்கினோம். 1,000-க்கும் மேற்பட்ட படையினரை அங்கவீனப்படுத்தினோம். "தீச்சுவாலை" அணைக்கப்பட்டது. 1991 ஆம் ஆண்டு "ஆகாய, கடல்வெளி" சமரின்போது இலங்கையில் இரண்டு இராணுவம் என்று கூறினார்கள். 10 ஆண்டுகள் கழித்து "தீச்சுவாலை" முறியடிக்கப்பட்டபோது, வெல்லப்பட முடியாத சக்தியாக விடுதலைப் புலிகள் இயக்கம் இருப்பதாகக் கூறினார்கள். நாங்கள் அப்படிக் கூறவில்லை- உலகமே அப்படிக் கூறியது.இதற்குப் பின்னர் ஒரு சமாதானம் என்று சொல்லமுடியாத சமாதானம் ஒன்றை ஏற்படுத்த வைத்தது விடுதலைப் புலிகள் இயக்கம். சிங்கச் சண்டியன் மகிந்தசிறிலங்கா அரசாங்கத்தின் தலைவிதி உங்களது, எங்களது கையில்தான் இருக்கிறது, அது மகிந்தவின் கையில் இல்லை. இதனை அன்றே நாங்கள் நிறுவினோம். ஐந்து ஆண்டுகள், நான்கு ஆண்டுகள் சமாதானம் என்று கூறிப்போய், கடைசியாக மகிந்த வந்தார். ஊரில் தெருச்சண்டியனான அவர், அரச தலைவர் ஆகியவுடன் சிங்கமாகினார். சிங்கச் சண்டியனாகி புலியுடன் சண்டை பிடிப்போம் என்று யோசித்தார். நாங்கள் ஜே.ஆரைக் கண்டவர்கள், பிரேமதாசாவைக் கண்டவர்கள், டி.பி.விஜயதுங்கவைக் கண்டவர்கள், சந்திரிகா அம்மாவை 10 ஆண்டுகளாகக் கண்டவர்கள். ரணில் வந்தார். மகிந்த வந்தார். முகமாலைச் சமர்க்களங்கள்11.08.2006 அன்று முகமாலை ஊடாக வெளியேறி ஆனையிறவைக் கைப்பற்றி கிளிநொச்சிக்கு படை நகரப் போகின்றது. யுத்தத்தை தொடக்கினார்கள். யுத்தம் மூண்டது. முகமாலை நெருப்பாகியது, எங்கும் புகைமண்டலம். சிங்களவனுடைய வெடிகணைச் செலுத்திகள் ஏராளம். பக்கத்தில் உள்ள போராளியை இனம் காண முடியாது எங்கும் புகை மண்டலம். வெடிச்சத்த ஓசை வந்தது. படை யுத்தம் மூண்டது. மரணத்தின் வாசல், சாவினுடைய விளிம்பு. கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் களத்தில யுத்தம் மூண்டது. நாங்கள் சண்டையிட்டோம். ஒவ்வொரு அங்குல நிலத்திற்காக, ஒவ்வொரு உடன்பிறப்பும், ஒவ்வொரு போராளியும், மக்களுடைய வாழ்வுக்காக, களத்தில மூர்க்கத்தனமாய் போராடினார்கள். முறியடித்தோம். 09.09.2006 அன்று மீண்டும் ஒருதடவை முன்னேறினார்கள். அதனையும் முறியடித்தோம். 11.10.2006 அன்று மீண்டும் முகமாலையைக் கைப்பற்றப் போகிறோம் என்று கூறிக்கொண்டு கிளம்பினார்கள்.வந்தார்கள், மானப்போர் மூண்டது. யுத்தம் என்று சொன்னால் வரலாற்றில் மறக்க முடியாத யுத்தமாக இருந்தது. ஏறத்தாழ 500-க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டனர். 75 பேருடைய சடலங்கள் கிளிநொச்சியில் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டன. யுத்தத்தினூடாக வெல்லமுடியும் என்று நம்பினார்கள், யுத்தத்தை விரிவாக்கினார்கள். வடக்கு-கிழக்கு என்றில்லாமல் யுத்தம் பரந்தது. வடக்கு அப்படியே இருந்தது. வட போர் அரங்க நிலைமைகிழக்கில் யுத்தத்தை விரிவுபடுத்தினார்கள். கிழக்கு என்பது பூகோள ரீதியாக எந்தவொரு காலகட்டத்திலும் சிங்கள அரசாங்கமோ தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமோ பூரணமான கட்டுப்பாட்டில் வைத்திருந்த வரலாறு கிடையாது. இரண்டு முறையில் நாங்கள் போராடுவோம். ஒன்று கரந்தடி அடுத்தது வலிந்த தாக்குதல். கரந்தடி தாக்குதலை எங்கே செய்ய முடியுமோ அங்கே செய்வோம், வலிந்த தாக்குதலை எங்கே செய்யமுடியுமோ அங்கே செய்வோம். நாங்கள் விடுதலை இயக்கம். இந்த இரண்டு போர் முறையூடாக நாங்கள் நகர்வோம். ஒரு இடத்தை விட்டு விலகுவது யுத்தத்தில் பின்னடைவு என்று அர்த்தமல்ல, தோல்வி என்றும் அர்த்தமல்ல. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம் . கிழக்கை கைப்பற்றிய பின்னர் வடக்கே ஆசை வந்தது. சிங்களம் தன்னுடைய படைகளைத் தயார்படுத்தியது. மன்னாரின் ஊடாக பல பல திட்டங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன. மன்னாரில் பாரிய நடவடிக்கை நடந்து கொண்டிருக்கிறது. பல திட்டங்கள் இருக்கின்றன. எல்லாத் திட்டங்களையும் எங்களால் சொல்ல முடியாது. படையினர் போட்டிருக்கும் திட்டம் என்பது வன்னியை முழுமையாக அழிப்பது, வன்னியை முழுமையாகக் கைப்பற்றுவது. அதற்காக பல முனைகளில் படைகளை நகர்த்துகிறது. 57 ஆவது டிவிசனைக் கொண்டு வந்து இறக்கினார்கள். காட்டுக்குள்ளால் நகர்த்தினார்கள், படை வந்தது. அன்று 18 மாத காலமாக எப்படி ஒரு "ஜயசிக்குறு" இந்த வீதியால் நகர்ந்ததோ அதனைவிட மோசமாக, அதனைவிட படைபல சக்தியுடன், அதனைவிட கூடிய பலத்துடன் இன்று ஓராண்டு காலமாக மன்னார் களத்தில் சிங்களப் படையினர் நகர்ந்து கொண்டிருக்கின்றனர். மறிக்கிறோம், சண்டையைப் பிடித்துக்கொண்டே இருக்கிறோம். நாங்கள் செய்வது மறிப்புச் சண்டை. நாங்கள் நாளாந்தம் சிங்களப் படையை அழித்துக்கொண்டே இருக்கிறோம். ஒரு கோடியே 80 லட்சம் மக்களுக்குள் இருந்து அவர்கள் படையை நகர்த்துகின்றார்கள். வன்னியில் எங்களுடைய மக்கள் தொகை உங்களுக்குத் தெரியும். இந்தத் தொகையில் இருந்து வரலாற்று ரீதியாகப் படையை எடுக்கிறோம், ஏன் ? வரலாற்றின் தேவை, வரலாற்றின் நிர்ப்பந்தம். நாங்கள் படை எடுத்து சிங்களப் படையை மறிக்கிறோம். மணலாற்றிலிருந்து மன்னார் பாப்பாமோட்டை வரைக்கும் 150 கிலோ மீற்றர். கிளாலியில் இருந்து நாகர்கோவில் வரைக்கும் 20 கிலோ மீற்றர். ஏறத்தாழ 200 கிலோ மீற்றர் தரையில் சிங்களப் படையை நாங்கள் மறிக்கிறோம். 200 கிலோ மீற்றருக்குள் நாங்கள் சிங்களப் படையை மறித்து வைத்திருக்கிறோம். நாங்கள் யாரை நம்பி மறித்து வைத்திருக்கிறோம்? எங்களுடைய மக்களின் பின் உதவியுடன் நாங்கள் அங்கே மறித்து வைத்திருக்கிறோம். எங்கள் மக்களின் அனைத்து உதவிகளுடனும் தான் நாங்கள் களத்தில் நிற்கிறோம். எங்களுடைய மக்களுக்காக நாங்கள் அங்கே நிற்கிறோம்.எங்களுடைய மக்கள் எங்களுக்காக நிற்கிறார்கள். இதுதான் வரலாறு. இந்த வரலாற்றை நிகழ்த்துவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். கடந்த ஒரு வருடமாக யுத்தத்தை எதிர்கொள்கிறோம். ஒரு மூலோபாயத்தில் 100 தந்திரோபாயம் இருக்கிறது. 100 தந்திரோபாயத்தில் 50 தந்திரோபாயத்தை நாங்கள் வெற்றி நோக்கி நகர்த்துவோம். இல்லாவிடின் 50 தந்திரோபாயத்தை இன்னும் ஒரு முனையில் நாங்கள் நகர்த்துவோம். யுத்த களத்தை யாரும் தீர்மானிக்க முடியாது. யுத்தம் என்பது நாங்கள், நீங்கள் வார்த்தகைளால் சொல்லிவிட முடியாதது, சொற்களால் சொல்லிவிட முடியாதது. மரணத்தின் வாசலில், சாவின் விளிம்பில் நின்று, சிங்களப் படையினருடைய எறிகணை மழைக்குள் நின்று, துப்பாக்கி ரவைக்குள் நின்று நெஞ்சு நிமிர்த்தி சிங்களவனைக் கொல்ல வேண்டும், இதுதான் யுத்தம். நிமிடத்துக்கு நிமிடம் காலடியில் உயிர்கள் பிணமாகும். நிமிடத்திற்கு நிமிடம் ஒவ்வொரு விடுதலைப் போராளியும் இரத்த வெள்ளத்துக்குள் படுத்திருப்பான், இதுதான் யுத்தம். இதனைத்தான் சிங்களப் படை செய்கிறது. இதற்குள்தான் நாங்கள் வாழ்கிறோம், எங்களுடைய போராட்டத்தை முடிப்பதற்காக நாங்கள் நிற்கிறோம், வெற்றி பெறுவோம். நெருக்கடியான கால கட்டங்களில் தளராத தன்னம்பிக்கையோடு வழிநடத்தி, இந்த தமிழீழத்தை நிமிரச்செய்தவர் தலைவர். இது ஒரு நெருக்கடி. இந்த நெருக்கடியை இப்போது நாங்கள் படிப்படியாகத் தாண்டிக்கொண்டிருக்கிறோம்.57 ஆவது டிவிசனுக்கு முதலில் இருந்த உற்சாகம் இப்போது இல்லை, சேடமிழுக்கிறது. 58 ஆவது டிவிசன் பாவம். 59 ஆவது டிவிசன் மணலாற்றிற்குப் போய்விட்டது. இந்த முனையில் முன்னேறிப் பார்த்தார்கள், காலக்கெடு விதித்தார்கள், அத்துலத்முதலியில் இருந்து சரத் பொன்சேகா வரைக்கும் இப்ப காலக்கெடுதான் விதிக்கிறார்கள்.
ரத்வத்த "ஜயசிக்குறு" காலத்தில ஒரு கருத்தை சொல்லியிருந்தார் "நான் கைகுலுக்குவேன்- யாருடன்? தலைவர் பிரபாகரன் அவர்களுடன் கைகுலுக்குவேன். எப்போது? தலைவர் பிரபாகரன் தோற்றபோது நான் வெற்றி பெற்றபோது" என்றார். இன்று ரத்வத்த எங்கே இருக்கிறார் என்று தெரியாது, எதனை வென்றார் என்று தெரியாது. இது வரலாறு. இன்று எத்தனையோ பேர் சவால் விடுகின்றார்கள். அவர்களுடைய காலக்கெடுக்களை நாங்கள் நெஞ்சில் நிறுத்தி வைத்திருக்கிறோம். இந்த 36 ஆண்டுகால விடுதலைப் போராட்ட வரலாற்றில் 33 அகவையில் இந்திய அரசாங்கத்தோடு போராடி இன்று வரலாற்று எதிரியுடன் எத்தனையோ இராணுவ நடவடிக்கைகளை தலைவர் எதிர்கொண்டவர், எத்தனையோ திட்டங்களை தவிடு பொடியாக்கியவர். அந்தத் திட்டங்கள் எல்லாம் தலைவருக்கு தெரியும். எங்கே மாங்குளம், மாங்குளம் என்று வந்தவர்கள் ஈரட்டவுக்கு எப்படிப் போனார்களோ, எங்கே மன்னார், மடு, அடம்பன் என்று வருகிறவர்கள் எப்படி மதவாச்சிக்கு போக முடியும் என்பதை வரலாறு எங்களுக்கு காட்டும். நாங்கள் அதனை சொல்லத் தேவையில்லை, நாங்கள் அதனைச் சொல்வதற்கும் வரவில்லை. நாங்கள் யுத்தத்திலே நிற்கிறோம், யுத்தத்தின் போக்குகளை நாங்கள் சொல்ல முடியாது. காலம் தீர்மானிக்கும். படை பலத்தை வைத்து அதனை நாங்கள் செய்வோம். சிங்கள அரசாங்கம் இன்று என்ன செய்கிறது? வன்னியைப் பிடிக்க வேண்டும் என்று மன்னாரிலிருந்து வருகிறார்கள், மணலாறில் இருந்து வருகிறார்கள், வவுனியாவில் இடைக்கிடை முட்டிப்பார்க்கிறார்கள். மறுபுறத்தே முகமாலையிலும் இடைக்கிடையே முட்டிப்பார்க்கிறார்கள். 200 கிலோ மீற்றர் நீளமான பாதுகாப்பு வேலியில் விடுதலைக்குப் போராடும் ஒரு விடுதலை இயக்கம் சிங்களப் படையை மறித்து வைத்திருக்கிறது. 200 கிலோ மீற்றரில் ஒரு நாளைக்கு 20 இடங்களில் படையினர் பாதுகாப்பு வேலியை உடைக்க முனைந்தார்கள் என்று சொன்னால், 20 இடங்களில் நாங்கள் சண்டை பிடிக்கிறோம். ஒரு இடத்தில ஒரு போராளி வீரச்சாவடைந்தால் 20 போராளிகளை நாங்கள் களத்தில் இழக்கிறோம். இது உண்மை, இது யதார்த்தம். நாங்கள் களத்தில் உயிரையும் இரத்தத்தையும் கொடுத்தே போராடுகிறோம். மன்னாரில் என்ன நடக்கிறது? மன்னாரில் இன்னொரு "ஜயசிக்குறு" மாதிரி ஒரு படை நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.நாங்கள் தளர்ந்து போகவில்லை. எங்களுடைய மக்களுக்கு நாங்கள் பொய்களைச் சொல்ல வரவில்லை. சிங்களப் படை வன்னிக்குள் வரவேண்டும், படை நடவடிக்கையைச் செய்ய வேண்டும். நாங்கள் அழிப்போம், கொன்றொழிப்போம், வெற்றி பெறுவோம். அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. சிங்களப் படை வரட்டும், அனைத்து படைகளையும் பயன்படுத்தட்டும், அதனைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். வன்னி என்பது சிங்களப் படைக்குரிய சாவுக்களம். இந்த வன்னிக்களத்தில், "ஜயசிக்குறு" களத்தில் வந்த படையினரின் மண்டையோடு இந்த காடுகளில் இப்போதும் கிடக்கின்றன. ஆனையிறவு வெட்டவெளியில் இப்போதும் கிடக்கின்றன. இன்றும் இந்த வரலாற்றை நாங்கள் நிகழ்த்தத்தான் போகிறோம். அதுக்கு காலம் வரும், அதுக்கு தலைவர் இருக்கிறார். தலைவர் சொல்லும்போது அது நிகழ்த்தப்படும். எனவே நாங்கள் நம்பிக்கை இழக்கக்கூடாது. இந்த விடுதலைப் போராட்டத்தில் உள்வாங்கப்பட்ட போராளிகள் பலபேர், பல கருத்துக்களைச் சொல்ல முடியும். அவர்கள் இந்த விடுதலைப் போராட்டத்திற்கு உள்வாங்கப்பட்ட பிற்பாடு அவர்களுக்கு இந்த தலைமையால் கொடுக்கப்பட்ட கடமைகளை ஏற்று, ஒவ்வொரு போராளியும் களத்தில் உறுதியோடுதான் நிற்கின்றார்கள். மன்னாரில் பயிற்சிகளைப் பெற்ற படை, ஆயுதங்களைக் கொண்டு வந்து இன்று ஒரு வருடமாக முன்னேற முனைந்து கொண்டிருக்கிறது என்று சொன்னால், அந்தப் படையை தடுப்பது யார்? இன்று இந்த விடுதலைப் போராட்டத்தில் உள்வாங்கப்பட்ட எங்களுடைய உறவுகள், எங்களுடைய போராளி நண்பர்கள், எங்களுடைய தோழர்கள் சிங்களப் படைகளுடைய நடவடிக்கையை முடக்கி வைத்திருக்கிறார்கள். சாதிக்கிறோம், நாங்கள் சாதிப்போம், நாங்கள் வெற்றி பெறுவோம். அந்த நம்பிக்கை, அந்த துணிவு எங்களுடைய மக்களுக்கு இருக்கவேண்டும். நீங்கள் பின்பலமாக இருக்கும் வரை எங்களை அசைக்க முடியாது. எத்தனை முனைகளால் படை வந்தாலும் அத்தனை முனைகளிலும் நாங்கள் தடுப்போம், தடுத்து நிறுத்துவோம். அந்த வல்லமை, அந்த சாதுரியம் எங்களுக்கு இருக்கிறது. நாங்கள் எப்படி வெற்றி பெறுவோம்? தலைவரின் வழிகாட்டலில், மாவீரர்களின் உயிர்த் தியாகத்தில், மக்களுடைய பலத்தில் நாங்கள் வெற்றிபெறுவோம். இரத்தத்தால் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்ற எங்களுடைய தமிழ் மக்களின் வாழ்க்கையை இந்த விடுதலைப் போராட்டத்தின் விடுதலை யுத்தத்தால் நாங்கள் முடித்து வைப்போம். இது உறுதியான விடயம். அதனை எங்களுடைய மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நிச்சயமாக எதனைப்பற்றியும் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. சிங்களப்படையை வன்னிக்குள் வரவிட்டு அழித்து நாங்கள் வெற்றிவாகை சூடுவோம். காலங்கள் கனிந்து வரும்போது நாங்கள் அதனைச் செய்வோம். அதுவரைக்கும் எங்களுடைய உயிரிலும் மேலான மக்களாகிய நீங்கள் எப்பொழுதுமே எங்களுக்கு துணையாக இருக்கிறீர்கள். ஒரு பெரிய வெற்றிக்காக எல்லோரும் காத்திருக்கிறீர்கள். அந்த வெற்றியை ஈட்டுவதற்காக நாங்கள் களங்களில் காத்திருக்கிறோம். ஒவ்வொரு நாளும் களங்களில் உங்களுடைய பிள்ளைகளாகிய நாங்கள் உங்களுடைய, உறவுகளாகிய நாங்கள் எப்படி வாழ்கிறோம்? எப்படி வாழக்கூடாதோ அப்படித்தான் வாழ்கிறோம். களத்தில் போராளியாக இருக்கின்ற நாங்கள் சுமக்க முடியாத சுமைகளையும் வேதனைகளையும் தாங்கி மரணத்தின் வாசலில், சாவின் விளிம்பில் நின்று போராடுகிறோம். எங்களுடைய மக்களின் வாழ்க்கையை சகிக்கமுடியாது, அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். நாங்கள் அந்த வழியில் போனோம். அந்த வழியில் எங்களுக்கு தரப்பட்ட கடமையைச் செய்தோம். அந்த கடமையின் ஊடாக எங்களுடைய மக்களின் வாழ்க்கைக்காக போராடுகிறோம். இன்று இந்த புளியங்குளம் சேமமடுவில், பாலமோட்டையில் உங்களுடைய பிள்ளைகள் கண்விழித்து எதிரியை மறிப்பதனூடாகத்தான் கனகராயன்குளத்தில் இரவில் அமைதியாக மக்கள் வாழ்கின்றார்கள். அங்கே அந்த எல்லை இல்லை என்று சொன்னால் சிங்களப்படைகள் நகர்வார்கள். அவர்களுடைய நோக்கம் எங்களை அழிப்பது. மகிந்தவுக்கு நோக்கமிருக்கின்றது. தமிழ் மக்களை அழிப்பதனூடாகத்தான் சிங்கள மக்கள் நிம்மதியாக வாழ முடியும் என்ற பேரினவாத சிந்தனையோடு மகிந்த யுத்தத்தை நடத்துகின்றார். மகிந்த நடத்துவது அரசியலுக்கான யுத்தம், ஆக்கிரமிப்புக்கான யுத்தம். சிங்களப்படைகளை அழிப்பதனூடாகத்தான் தமிழர்களுடைய வாழ்வு நிலைபெறும். தமிழர்கள் இந்த மண்ணிலே வாழ முடியும். நாங்கள் இந்த மண்ணிலே 20,000 போராளிகளை இழந்திருக்கிறோம். 80,000 மக்கள் அழிக்கப்பட்டிருக்கின்றார்கள். 35 லட்சம் மக்களுடைய வாழ்வுக்காக தமிழினம் ஒரு லட்சம் உயிர்களை இந்த மண்ணுக்கு தியாகம் செய்திருக்கிறது. பாதுகாப்பாக வாழ்வதற்காக சுதந்திரம் கிடைத்ததா? எங்களை யாரும் மதிக்கிறார்களா? இல்லை. இன்றுவரை யுத்தம் தொடர்கிறது. உரிமைக்காகப் போராட ஆரம்பித்த நாங்கள், இன்று உயிர் வாழ்வதற்காகப் போராடுகிறோம். இந்த மண்ணில் இந்த இடத்தில் வாழுகின்ற மக்களின் உயிர்களை பாதுகாப்பதற்காக, இந்த மண்ணில் இருந்து போராடக்கூடிய உங்களுடைய பிள்ளைகள் களத்தில் உயிரைத் தியாகம் செய்கிறார்கள். இது வரலாறு. நாங்கள் தளர்ந்தவர்கள் அல்லர். நாங்கள் தளர்ந்து போகமாட்டோம். தலைவர் இருக்கும் வரை தலைவரின் வழிகாட்டலில், எந்த சவாலையும் முறியடித்து, நாங்கள் சாதனைகளை நிகழ்த்துவோம். இந்த நம்பிக்கை உங்களுக்கு இருக்க வேண்டும். அது எப்போது, எங்கு நடக்கும் என்பதல்ல கேள்வி. வரலாறு வழியைக் காட்டுகின்றபோது அந்த சரித்திரம் இந்த மண்ணிலே நடக்கும். அதற்காக நீங்கள் காத்திருங்கள், அதற்காக நீங்கள் உழையுங்கள். நம்முடைய மண்ணுக்காக, நம்முடைய சுதந்திரத்துக்காக, நம்முடைய பாதுகாப்பிற்காக நாம்தான் போராட வேண்டும். எமக்கு எவரும் சுதந்திரத்தை பெற்றுத்தரமாட்டார்கள். இது உண்மை. யுத்த களத்தில் உயிர்களையும் இரத்தங்களையும் சிந்தி பெற்றுக்கொள்ள முடியாத எதனையும் பேச்சுவார்த்தை மேசையில் சிங்களவர்களிடமிருந்து நாம் பெற்றுக்கொள்ளமுடியாது என்பது வரலாறு. 60 ஆண்டுகால வரலாற்றில் நாங்கள் எப்படி இருந்தோம் , எப்படி வாழுகிறோம் என்பது வரலாறு. யுத்தக் களத்தின் ஊடாக உயிரையும் இரத்தத்தையும் கொடுத்து, சிங்களப் படைகளுக்கு அழிவுகளை ஏற்படுத்தி, நாங்கள் வெற்றி பெறுவோம், நாங்கள் நிமிர்வோம், நாங்கள் சாதிப்போம். நாங்கள் புறமுதுகு காட்டி ஓடப்போவதில்லை. நெஞ்சு நிமிர்த்தி, யுத்தம் புரிந்து சிங்களவனை நாங்கள் வெற்றி பெறுவோம். இந்த நம்பிக்கை எங்களுடைய மக்களுக்கு இருக்க வேண்டும். இழப்புக்களை மட்டும் தயவு செய்து பார்க்க வேண்டாம். இழப்புக்குப் பின்னால் நாங்கள் எதனைச் செய்வோம், நாங்கள் எதனைச் சாதிக்கப் போகின்றோம் என்ற வரலாற்றை நாங்கள் பார்ப்போம். எங்களிடம் முப்படை இருக்கிறது. எந்த நாட்டிலும் இல்லாத படை எங்களிடம் இருக்கிறது. உயிர்த்தியாகம் செய்கின்ற கரும்புலிகள் என்ற இந்தப் படையை வைத்துக்கொண்டு, முப்படைகளையும் வைத்துக்கொண்டு, எமது தலைவரையும் வைத்துக்கொண்டு, எந்த சவாலுக்கும் முகம் கொடுக்ககூடிய, எந்த பலத்தையும் முறியடிக்கக்கூடிய மக்களுடைய சக்தியை வைத்துக்கொண்டு, எந்த களத்திலும் உயிரை துச்சமென மதித்து தியாகம் செய்யக்கூடிய உங்களுடைய பிள்ளைகளுடைய தியாகத்தின் முன், உங்கள் பிள்ளைகளுடைய வீரத்தின் முன், சிங்களப்படை எங்களுக்கு தூசு. நாங்கள் அதனைச் செய்வோம். அதனை மட்டும் எங்களுடைய மக்கள் உறுதியாக புரிந்த கொள்ளவேண்டும். சிங்கள மக்களுக்கும், சிங்களப் படைகளுக்கும், சிங்கள அரசியல்வாதிகளுக்கும், சிங்கள அரசுகளுக்கும் ஒரே ஒரு மொழி மட்டும்தான் புரியும். அந்த மொழிதான் அடி. அந்த மொழியை புரியவைக்கும் காலம் இன்று களத்தில் நடந்து கொண்டிருக்கிறது. நாங்கள் எவ்வாறு சந்திரிகாவின் காலங்களில் சாதனைகளை படைத்தோமோ, எவ்வாறு இராணுவ சக்கரத்தை உடைத்தோமோ, எவ்வாறு சிங்கள அரசாங்கத்தினுடைய திட்டத்தை தவிடு பொடியாக்கி வெற்றியை நோக்கி நகர்ந்தோமோ அதேபோன்ற காலம் கனிந்து வருகின்ற போது நகருவோம். தமிழ் மக்களுக்கு, தமிழீழத் தாயகத்திற்கு வெற்றி கிட்டும்வரை அல்லது களத்தில் வீரச்சாவு அடையும் வரை நாங்கள் போராடுவோம். நீங்கள் எப்போதுமே நீரைப்பற்றி சிந்திக்காமல் வாழவும் கூடாது, வாழவும் முடியாது. தமிழ் மக்களாகிய நீங்கள் எப்பொழுதும் எங்களுடைய தலைவரால் வழிநடத்தப்படுகின்ற உங்களுடைய விடுதலைப் புலிகள் இயக்கத்தினுடைய இராணுவ பலம், ஆட்பலம் பற்றி சிந்திக்காமல் வாழவும் கூடாது, வாழவும் முடியாது. நீரைப்பற்றி சிந்திக்காமல் வாழ்ந்தால் மரணத்தை சந்திக்க வேண்டிவரும். ஆகவே எங்களுடைய மக்களாகிய நீங்கள் உங்களுடைய பாதுகாப்புக்குரிய படையைப்பற்றி சிந்திக்காமல் வாழ்ந்தால் அழிவை நாங்கள் சந்திக்கவேண்டிவரும். எனவே எந்தச் சவால்களையும் எதிர்கொண்டு எங்களுடைய தலைவருடைய காலத்தில், நாங்கள் எங்களுடைய இலக்குகள் நோக்கி நகருவோம், தொடர்வோம், மாவீரர்களுடைய இலட்சியத்தை அடைவோம் தமிழீழம். புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்றார் அவர்.
jaalavan@gmail.com