Wednesday 31 December 2008

** சிறிலங்காவின் உதவாத உதவிகள்.

வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அவசரத் தேவையாகவுள்ள கூடாரங்களைக் கொண்டு செல்லத் தடைவிதித்துள்ள சிறிலங்கா அரசு அதற்குப்பதிலாக பாவனைக்குதவாத கிடுகுகளை வன்னிக்கு அனுப்பிவைத்துள்ளது.

படை நடவடிக்கையினாலும், கடந்த மழை வெள்ளத்தினாலும் குடியிருப்புக்களை இழந்துள்ள மக்களுக்கு 42 ஆயிரம் வரையிலான கூடாரங்கள் அவசரத்தேவையென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பன்னாட்டுத்தொண்டு நிறுவனங்கள் வழங்கும் கூடாரங்களை வன்னிக்கு எடுத்துச்செல்லத் தடைவிதித்துள்ள அரசாங்கம், தற்போது ஒரு தொகுதி கிடுகுகளை அனுப்பிவைத்துள்ளது. அவை பல இடங்களில் ஏற்றி இறக்கி பயன்படுத்த முடியாத நிலையிலேயே வன்னிக்கு வந்த சேர்ந்துள்ளன.
__________
Sankathi.com

** படை நெருக்டியால் சிறார்கள் உளப்பாதிப்பு

யாழ். குடாநாட்டிலுள்ள சிறார்களில் 70 வீதமானவர்கள் கடும் உளப்பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர் எனவும் குடாநாட்டில் பிறக்கின்ற பிள்ளைகளில் 10 வீதமானோர் அங்கவீனர்களாக பிறக்கின்றனர் எனவும் சிறுவர் பாதுகாப்பு நிதியத்தின் யாழ் அலுவலகம் சுட்டிக் காட்டியுள்ளது. போர் நெருக்குதல்கள், படைக் கெடுபிடிகள் என்பன இவற்றிற்கு காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

___________
Sankathi.com

** அம்பாறை மாவட்டத்தில் 12 மாதகாலங்களில் 191 படையினர் பலி! 247 படையினர் காயம்.

அம்பாறை மாவட்டத்தில் 2008ம் ஆண்டில் சிறிலங்கா படைக்கும் ஒட்டுக்குழுக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையில் 7 ஒட்டுக்குழு உட்பட 198 படையினர் பலி 5 ஒட்டுக்குழு உட்பட 252 படையினர் காயமடைந்துள்ளனர்.

கடந்த 01-01-2008 தொடக்கம் 31-12-2008 வரையிலான ஒரு வருட காலப்பகுதியில் அம்பாறை மாவட்டத்திலும் அதனை சூழவுள்ள வனப்பகுதி உள்ளிட்ட சில பகுதிகளிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் நடாத்திய தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த சிறிலங்கா படையினரது விபரங்கள்.
விசேட அதிரடிப்படையினரது எண்ணிக்கை-123,
இராணுவத்தினரது எண்ணிக்கை-35,
ஊர்காவல் படையினரது எண்ணிக்கை-15,
பொலிஸாரின் எண்ணிக்கை-18,
கொல்லப்பட்ட ஒட்டுக் குழுவினரது எண்ணிக்கை-07

மற்றும் காயமடைந்தவர்கள் விசேட அதிரடிப்படையினரது எண்ணிக்கை-192, இராணுவத்தினரது எண்ணிக்கை-44,
ஊர்காவல் படையினரது எண்ணிக்கை-05,
பொலிஸாரின் எண்ணிக்கை-06,
காயமடைந்த ஒட்டுக்குழுவினரது எண்ணிக்கை-05 ஆகும்.

காயமடைந்த சிறிலங்கா படையினரில் 72பேர் யுத்தகளத்திற்கு மீண்டும் செல்லமுடியாதவாறு தமது உடல் அவயங்களை இழந்துள்ளனர்.

இதேவேளை சிறிலங்கா படையினருடனான மோதல்களின் போது 23 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர், 13 போராளிகள் விழுப்புண் அடைந்துள்ளதாக அம்பாறை மாவட்ட அரசியல் துறையினர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
_________
Pathivu.com

** பரந்தன் பகுதியில் வான்படையின் வான்தாக்குதலில் 4பேர் பலி! 14காயம்

சிறிலங்கா வான்படையின் விமானங்கள் பரந்தன், மற்றும் முருகாணந்த பாடசாலைக்கு அருகாமையில் பொதுமக்கள் குடியிருப்புகள் மீது நடாத்திய வான் தாக்குதலில் ஒரு பெண் கொல்லப்பட்டு 12 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று புதன்கிழமை காலை 8.00 மணியளவில் இடம்பெற்ற தாக்குதலில் தாக்குதலில் நிர்மலன் 15, எஸ். ராகுலன் 21, செல்வராசா குலேந்திரன் 33, ஜெயசூரி 38, சோமசுந்தரம் சந்திரகுமார் 43,அன்னக்கொடி சந்திரமேரி 43, வெள்ளைச்சாமி அன்னக்கொடி 49, எஸ். பாலசுந்தரம் 51, வயதுடைய சுப்ரமணியம் 52, சந்தரபோஸ் 52, றஞ்சிதமலர் 58, சரவணபவானந்தன் 62 ஆகியோர் காயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர் ஆசிர்வாதம், மரியம்மா, சிவானந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றன.

இதேவேளை தர்மபுரம் வைத்தியசாலையில் இரத்தத்திற்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியசாலை நிருவாகம் தெரிவித்துள்ளது.
_________
Pathivu.com

Tuesday 30 December 2008

** அம்பாறையில் விடுதலை புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் விசேட அதிரடிப்படையின் 2 பேர் பலி! 6 பேர் காயம்.

அம்பாறை பொத்துவில் காவல்துறை பிரிவு உகந்தையில் விடுதலை புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் இரு விசேட அதிரடிப்படையினர் பலி மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று செவ்வாக்கிழமை காலை 7.40 மணியளவில் உகந்தை காட்டுப் பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட விசேட அதிரடிப்படையினரை வழிமறித்த விடுதலை புலிகள் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர் இதில் இரு விசேட அதிரடிப்படையினர் கொல்லப்பட்டதுடன் மேலும் 6 பேர் படுகாயமடைந்துள்ளதாக அம்பாறை மாவட்ட அரசியல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக அத்துறையினர் மேலும் தெரிவிக்கையில் நேற்று ஆயிரக்கணக்கான விசேட அதிரடிப்படையினர் உகந்தை காட்டுப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைக்காக ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களை இன்று வழிமறித்த விடுதலை புலிகள் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்கள் அம்பாறை மற்றும் கொழும்பு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இத்தாக்குதல்களையடுத்து அப்பகுதியில் மேலும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு தேடுதல்கள் மேற்கொண்டுவருவதாக அம்பாறை மாவட்ட அரசியல் துறையினர் மேலும் தெரிவிக்கின்றனர்.
_________
Pathivu.com

** களமுனைகளில் சிங்களப் படை முடங்கி சாவுக்குழிக்குள் அகப்பட்டு யோயுள்ளது.

எமது மண்ணை வல்வளைப்புச் செய்து கிளிநொச்சி, முல்லைத்தீவு நோக்கி முன்னேறிய சிங்களப் படைகள் எமது களமுனைப் போராளிகளின் வீரமிகு தாக்குதல்களால் களமுனைகளில் மூச்சடங்கி சாவுக்குழிக்குள் அகப்பட்டுப் போயுள்ளனர். இவ்வாறு வடமராட்சி கிழக்குக் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் அண்ணாத்துரை தெரிவித்துள்ளார்.

வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசத்தில் நேற்று முன்தினம் கரைச்சி வடக்கு, பூநகரி, வடமராட்சி கிழக்கு, மாந்தை மேற்கு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் மக்களுடனான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில், விடுதலைப் போராட்டங்களில் நெருக்கடிகள் வருவதும், அது பின்பு தகர்த்தெறியப்படுவதும் வழமை. எமது விடுதலைப் போராட்டத்திலும் அவ்வாறான சந்தர்ப்பங்கள் நடந்தேறியுள்ளன.
1995-1996 காலப் பகுதிகளில் யாழ்ப்பாணத்தை விட்டு விடுதலைப் புலிகள் தந்திரோபாயமான பின்வாங்கலை மேற்கொண்டபோது, விடுதலைப் புலிகளின் கோட்டையினை பிடித்து விட்டதாகவும் புலிகள் மீண்டும் வன்னிக் காட்டில் ஒழிந்துவிட்டார்கள் என்றும் அன்றைய சனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சரும் இராணுவத் தளபதியும் கூச்சலிட்டு சிங்கள மக்களின் வரவேற்பைப் பெற்றனர்.

அவ்வேளை முல்லைத்தீவை முற்றாக மீட்டு அங்கு நின்ற சிங்களப் படைகளைக் கொன்று ஆயுதங்களையும் கைப்பற்றி அன்றைய இனவாத அரசின் மூச்சை அடக்கினர். எமது தலைவரும், தளபதிகளும் களமுனையில் மூச்சாக ஏற்று நின்று போராடிய போராளிகளும் அதன்பின் ஜெயசிக்குறு நடவடிக்கை மூலம் வன்னிப் பெருநிலப் பரப்பை தொடர்ச்சியாக வல்வளைப்புச் செய்து சந்திரிக்கா அரசு மேற்கொண்ட முயற்சி தலைவரின் திட்டத்தில் தவிடுபொடியாகியானது.

வல்வளைப்புச் செய்த பகுதிகள் மட்டுமல்லாது இரும்புக்கோட்டை என்று சிங்கள அரசினால் கூறப்பட்டு வந்த ஆனையிறவும் எமது கைக்குள் வீழ்ந்தது. அது மட்டுமல்லாமல் யாழ் குடாநாட்டின் ஒரு பகுதியான வடமராட்சி கிழக்கில் 11 கிராமங்கள் எமது கையில் கிடைத்தன.

பொதுவாக இந்தப் பிரதேசங்கள் அன்றைய பொழுதில் விடுபட மக்கள் எல்லைப்படையாகத் திரண்டதே முக்கிய காரணம். இன்றைய நெருக்கடியான சூழலில் போராட வலுவுள்ள அனைவரும் எமது தாய்நாட்டுக்காக உழைக்க வேண்டிய காலகட்டத்தில் தள்ளப்பட்டுள்ளோம்.

எமது மண்ணை வல்வளைத்து மக்களை இடம்பெயரவைத்து பேரவலத்திற்குத் தள்ளிய சிங்கள இனவாத அரசின் மூச்சை அடக்கி வன்னிப் பகுதியிலுள்ள சிங்கள இராணுவத்திற்கு மட்டுமல்லாமல் எமது தமிழீழ மண்ணில் கால்பதித்த அனைத்துப் படைகளுக்கும் புதைகுழி அமைத்து எமது தலைவரின் காலத்தில் தமிழீழத்தைப் பெற அனைவரும் உழைக்க வேண்டும். இவ்வாறு அண்ணாத்துரை மேலும் தெரிவித்துள்ளார்.
_________
Sankathi.com

** அம்பாறை வனப்பகுதியில் பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொண்ட படையினர் மீது தாக்குதல்!

அம்பாறை மாவட்டம் பொத்துவில் தொடக்கம் யால வரையிலான வனப்பகுதிக்குள் தேடுதல் நடவடிக்கைக்காக நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை களமிறக்கப்பட்ட ஆயிரக்கணக்கிலான விசேட அதிரடிப்படையினரின் இரு அணிகளை இன்று காலை 07.40 மணிக்கும், 08.25 மணிக்கும் இடையில் உகந்தை வனப்பகுதிக்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் வழிமறித்து தாக்கியதில் இரண்டு விசேட அதிரடிப்படையினர் கொல்லப்பட்டதுடன், மேலும் 6 படையினர் படுகாயமடைந்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல்துறை தெரிவித்துள்ளது.

இவ் வழிமறிப்புத் தாக்குதலினை அடுத்து மேலும் படையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டு பலத்த துப்பாக்கிப் பிரயோகத்துடன் தேடுதல் நடவடிகையும் தொடர்ந்தது.

இதற்கிடையே மட்டக்களப்பில் தாக்கதல்கள் அதிகரித்துள்ள நிலையில் பொலநறுவை மட்டக்களப்பு எல்லைப் பகுதியான வெலிகந்தவிற்கு சிறிலங்கா பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டு கள நிலைமைகளை பார்வையிட்டதுடன், அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.
__________
Sankathi.com

** கிளிநொச்சி மருத்துவமனை மீதான சிறிலங்காவின் தாக்குதல்கள் - ஆவணப்படுத்தப்படுவதாக தெரிவிப்பு!

கிளிநொச்சி மருத்துவமனை பகுதி மீது சிறிலங்கா வான் மற்றும் தரைப் படையினர் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் மருத்தவமனையின் கட்டங்கள் பலத்த சேதங்களுக்கும் உள்ளாகியுள்ளன. இது தொடர்பாக கருத்து தெரிவித்த கிளிநொச்சி மருத்துவமனை வட்டாரங்கள், இத்தாக்குதல் தொடர்பான விபரங்கள் தெளிவான முறையில் ஆவணப்படுத்தப்படுவதாகத் தெரிவித்தன. கிளிநொச்சி மருத்துவமனை பகுதி தொடர்ந்து அடுத்தடுத்து சிறிலங்கா வான் படையினரினதும் தரைப்படையினரினதும் தாக்குல்களுக்கு உள்ளாகி வருகின்றது.


அண்மைக்காலத்தில் மட்டும் பதினாறு தடவைகள் இப்பகுதி மீது சிறிலங்கா வான் படை தாக்குதல்களை நடத்தியிருக்கின்றது. கிளிநொச்சி நகரை சுற்றிவர அரண் அமைத்து நிலைகொண்டுள்ள சிறிலங்கா தரைப் படையினரது ஆட்டிலறி பீரங்கித் தாக்குதல்களும் இப்பகுதி மீது தொடர்ந்து நடாத்தப்படுகின்றன என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.


இத்தாக்குதல்களினதும் அனைத்து ஆதாரங்களும் ஆவணங்களாக உரிய முறையில் சேகரிக்கப்பட்டு, ஒழுங்கமைக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. குறிப்பாக, இப்பகுதியில் சிறிலங்கா வான் படையினர் அண்மைக் காலமாக மேற்கொண்டு வரும் "பரசூட்" மூலம் வீசப்படும் கொத்துக்குண்டு வகைக் குண்டுகளின் சிதறல்களும் அவற்றின் படங்களும் சேத விபரங்களும் சேகரிக்கப்படுவதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இந்த ஆதாரங்கள் அனைத்தும் சிறிலங்கா அரச படைகள் மருத்துவமனை போன்ற மனிதாபிமான இலக்குகள் மீது நடத்தம் தாக்குதல்களுக்கு எதிராக அனைத்துலக மனிதநேய அமைப்புக்கள் மட்டத்தில் முன்னெடுக்கப்படும் பரப்புரைகளில் உடனடியாகவே பயன்படுத்தப்படும் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
__________
Sankathi.com

Monday 29 December 2008

** வெளிநாடுகளில் வாழும் எமது மக்களின் பலத்தில் போராடுகின்றோம்-கேணல் பானு

எமது பலத்தை நாம் நிரூபிக்கின்ற போது என்ன உதவி வேண்டும் என்று வெளிநாடுகள் எம்மிடம் கேட்கும் நிலை வரும் என்று தளபதி கேணல் பானு தெரிவித்துள்ளார்.

சிங்கள அரசு வெளிநாடுகளின் உதவிகளை பெற்றுக்கொண்டு போரை நடத்துகின்றது. நாம் வெளிநாடுகளில் வாழும் எமது மக்களின் பலத்தில் போராடுகின்றோம்.

நாம் எமது நிலங்களை எதிரியின் வல்வளைப்பு மற்றும் வலிந்த தாக்குதல்கள் மூலம் இழந்திருக்கின்றோம். ஆனால் நாம் எமது பலத்தை இழக்கவில்லை. நாம் போரில் வெற்றி பெறுவது உறுதி.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் போர் மூலோபாயங்களுக்குச் செயல் வடிவம் கொடுப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றுதிரண்டு உழைக்க வேண்டும் 2009 ஆம் ஆண்டை "படையினரின் ஆண்டு" எனப் பிரகடனப்படுத்தியுள்ள மகிந்த ராஜபக்சக்கு அதனை நாம் அவர்களது "அழிவு ஆண்டு" என மாற்றுவோம்.

எமது மக்கள் சிறிலங்கா படைத் தாக்குதல் மற்றும் வல்வளைப்புக்களால் இடம்பெயர்ந்து பெரும் துயரை அனுபவித்து வருகின்றனர். ஆனால் அவர்கள்நம்பிக்கையுடன் இருக்கின்றனர். பார்க்கலாம்.இறுதி வெற்றி யாருக்கென்று.

சிங்கள அரசு வெளிநாடுகளின் உதவிகளை பெற்றுக்கொண்டு போரை நடத்துகின்றது. இன்று சிறிலங்கா பெரும் நெருக்கடிக்குள் இருக்கின்றது. அது பெரும் பொருண்மிய நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. இன்னும் பெரும் பொருண்மிய உடைவு அவர்களுக்கு ஏற்படவுள்ளது

நாம் பலத்தை நிரூபிக்கின்ற போது வெளிநாடுகள் தாமாகவே என்ன உதவி வேண்டும் என்று கேட்கும் நிலை உருவாகும்.

மன்னார் களமுனைகளில் மிகச் சிறப்பாகச் செயற்பட்ட போராளிகளுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வாழ்த்தை உள்ளடக்கியதான சமர் ஆய்வுப் பிரிவின் சான்றிதழ்கள் வழங்கி மதிப்பளிக்கும் நிகழ்வில் சிறப்புரையாற்றும் போதே கேணல் பானு இவ்வாறு தெரிவித்தார்.
_________
Pathivu.com

Sunday 28 December 2008

** "நாம் ஒருபோதும் எமது மண்ணையும் எமது மக்களையும் விட்டு ஓடப்போவதில்லை'' - தமிழீழ தேசியத் தலைவர்

"நாம் ஒருபோதும் எமது மண்ணையும் எமது மக்களையும் விட்டு ஓடப்போவதில்லை'' என தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கூறியுள்ளார். லக்பிம நியூஸ் ஆங்கில பத்திரிகைக்கு மின்னஞ்சல் மூலம் வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். செவ்வியின் ஒரு பகுதியை இங்கு தருகிறோம்.

"உங்கள் பாதுகாப்புக்காக ஏதாவது ஒரு வெளிநாட்டுக்கு செல்லப்போவதாக வதந்தி உலவுகிறது. உங்கள் சகாக்களை விட்டுச் செல்ல நீங்கள் முயற்சிக்கிறீர்களா?'' என கேட்கப்பட்டபோது "இவை அனைத்தும் இலங்கை அரச ஊடகங்கள் நடத்தும் முற்றிலும் பொய்யான பிரசாரங்கள் மாத்திரமே. நாம் ஒரு போதும் எமது மண்ணைவிட்டு செல்லமாட்டோம். மக்களின் உரிமைகளைப் பெறுவதற்காக இறுதிவரை போராடுவோம்'' என பிரபாகரன் பதிலளித்துள்ளார்.

நீங்கள் நாளுக்கு நாள் வயதாகி வருகிறீர்கள். ஆனால் ஈழம் இன்னும் கைகூடவில்லையே என்ற கேள்விக்கு பதிலளித்த பிரபாகரன், எமது போராட்டம் ஒரு சுதந்திர போராட்டமாகும். எமது சுதந்திர போராட்டத்திற்கு கால எல்லையோ வயது எல்லையோ கிடையாது எனக் கூறியுள்ளார். கிளிநொச்சியை சில தினங்களில் இராணுவம் கைப்பற்றிவிடும் என்ற கருத்து தொடர்பாக பதிலளிக்கையில் "எமது போராட்ட வரலாற்றில் இதைவிட பாரிய இராணுவ நடவடிக்கைகளுக்கும் இலங்கை அரசின் பிரசாரத்திற்கும் முகம் கொடுத்துள்ளோம்.

நாம் யாழ்ப்பாணத்தைக் கைவிட்டு வன்னி பிரதேசத்திற்கு வந்தபோது எம்மால் மீண்டும் ஒருபோதும் பாரம்பரிய இராணுவமாக செயற்பட முடியாது என இலங்கை அரசுபெரும் பிரசாரம் மேற்கொண்டது. ஆனாலும் அதன்பின் ஓயாத அலைகள் 1, 2 மற்றும் 3 மூலம் முல்லைத்தீவு, ஆனையிறவு மன்றும் வன்னியின் பெரும்பகுதியை கைப்பற்றினோம். தற்போது நாம் விரைவில் கிளிநொச்சியை இழந்துவிடுவோம் என இலங்கை அரசு பிரச்சாரம் செய்கிறது.
எவ்வாறெனினும் கடந்த சில நாட்களில் கிளிநொச்சியில் நடைபெற்ற மோதல்களில் இலங்கை இராணுவம் சந்தித்த பாரிய இழப்புகள் புலிகளின் எதிர்கால வெற்றியை வெளிப்படுத்துகிறது '' எனக் கூறியுள்ளார்.

உங்கள் பயங்கரவாத செயற்பாடுகளை விரும்பாததால்தான் சர்வதேச சமூகம் உங்களை கைவிட்டுள்ளது. தேசிய மற்றும் சர்வதேச சக்திகள் அனைத்தையும் உங்களால் தோற்கடிக்க முடியாது அல்லவா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், எமது போராட்டம் நேர்மையான போராட்டம் என சர்வதேச சமூகம் இப்போது புரிந்துகொண்டுள்ளது. நாம் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. மக்களை இலக்கை வைத்து விமான குண்டுவீச்சுகளை மேற்கொள்வது மற்றும் அவர்களுக்கு பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தும் இலங்கை அரசின் நடவடிக்கைகள் பயங்கரவாத நடவடிக்கைகள் இல்லையென்றால் மக்களை பாதுகாப்பதற்காகவும் அவர்களின் உரிமைகளைப் பெறுவதற்காகவும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பயங்கரவாத நடவடிக்கைகளாகுமா என சர்வதேச சமூகம் புரிந்துகொள்ள வேண்டும். இதை புரிந்துகொள்ளுமாறு சிங்கள மக்கள் உட்பட முழு சர்வதேச சமூகத்தையும் நாம் கோருகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிக்கத்தன் மூலம் மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கியமை குறித்து தற்போது என்ன நினைக்கிறீர்கள். அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் சிலரால் உங்கள் இயக்கத்திற்கு பணம் வழங்கப்பட்டதால்தான் அத்தேர்தலை பகிஷ்கரித்தீர்கள் எனக் கூறப்படுகிறது என்ற கேள்விகளுக்கு பதிலளிக்கையில், மக்கள் தாமாகவே தேர்தலை பகிஷ்கரித்தனர். மக்களின் உணர்வுகளை நாம் மதிக்கிறோம். மக்கள் தேர்தலை பகிரஷ்கரித்தமை தொடர்பாக பொய்யான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. எமது விடுதலைப் போராட்டம் நேர்மையான போராட்டமாகும். பணம், லஞ்சம் மற்றும் பதவி போன்றவற்றினால் அதை ஒழிக்க முடியாது எனக் கூறியுள்ளார்.

புலிகள் பலமிழந்துவிட்டதாக சர்வதேச ஊடகங்களும் கூறுவது குறித்து கேட்கப்பட்டபோது, நாம் பலமிழந்து விடவில்லை. எமது பலம் மக்கள்தான். அண்மையில் கிளிநொச்சியில் நடைபெற்ற சண்டை இதற்கு பதிலளிக்கின்றது. எமது எதிர்கால போராட்டங்கள் மூலம் எமது பலம் குறைந்துவிடவில்லை என்பது தெரியவரும் என பதிலளித்துள்ளார்.
__________
Sankathi.com

** சிறிலங்கா இராணுவத்தில் மேலும் ஒரு சிறுவர் சிப்பாய் பலி - அடையாள அட்டையுடன் உடலம் விடுதலைப் புலிகளால் மீட்பு

முல்லைத்தீவு நகரை நோக்கி நேற்று அதிகாலை சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வு முயற்சிக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடாத்திய முறியடிப்புச் சமரில் 68ற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் பல படையினர் படுகாயங்களுக்குள்ளாகினர். இந்த தாக்குதலின்போது பலதரப்பட்ட படையப்பொருட்களும் 16 படைச் சடலங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.



இதில் பலர் சிறுவர் படையினராக இருந்துள்ளனர். அதில் ஒருவர் சர்வதேச விதிமுறைகளுக்கு அமைய போரில் ஈடுபடுத்த முடியாத 17 வயதானவர் (26.06.1991இல் பிறந்தவர்) என அவரிடம் இருந்து மீட்கப்பட்ட அடையாள அட்டையில் இருந்து தெரியவந்துள்ளது. அவரது பெயர் ராஜபக்ச மொகட்டகே ரவி துஷ்மந்த எனவும், பிறந்த இடம் ரதவான எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அவர் ஒரு மாணவர் எனவும் அவரது முகவரி 119/1 விலபேள் சேரன்ஹம மேற்கு மாகாணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் கொல்லப்பட்ட பலர் 19 வயதுடையவர்கள் என்றும் அவர்களின் அடையாள அட்டைகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.

17, 19 வயதில் களமுனையின் முன்னணிப் போர் முனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்றால் எத்தனை வயதில் அவர்கள் படையில் இணைத்துக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த காலங்களில் களமுனையில் இருந்து மீட்கப்பட்டுள்ள சடலங்கள் பல சிறுவர் படைகளாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
__________
Sankathi.com

** கிளிநொச்சி மோதலில் சிறிலங்காவின் மேஜர் ஜெனரல் தர உயரதிகாரி பலி

கிளிநொச்சியில் கடந்த 20ம் திகதி இடம்பெற்ற முன்னேற்ற நகர்வின்போது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் சிறீலங்கா இராணுவத்தின் உயர் நிலை அதிகாரி ஒருவர் பலியான சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது.

நரன்கொட பிரதேசத்தைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் லசந்த மகேஷ்குமார என்ற அதிகாரியே இந்த மோதலின் போது பலியாகியுள்ளார். இவரது இறுதி நிகழ்வுகள் இராணுவ மரியாதையுடன் நேற்று ராகமவில் இடம்பெற்றுள்ளது.
__________
Sankathi.com

** முல்லைத்தீவு நோக்கிய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் முறியடிப்பு: 68 படையினர் பலி! 75 படையினர் காயம்

முல்லைத்தீவைக் கைப்பற்றும் சிறீலங்காப் படையினரின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 68 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 75 படையினர் காயமடைந்துள்ளனர் இதன்போது படையினரின் 17 உடலங்களும் படையக் கருவிகளும் கைப்பற்றப்பட்டதாக என தமிழீழ விடுலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.


நேற்று சனிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் பல்குழல், ஆட்டிலறி, மோட்டார் மற்றும் கனரக ஆயுதங்களின் சூட்டாதரவுடன் சிறீலங்காப் படையினர் முன்னகர்வுகளில் ஈடுபட்டனர்.படையினரின் முன்னகர்வுகளுக்கு எதிராக போராளிகள் நடத்திய தாக்குதலில் சிறீலங்காப் படையினர் தரப்பில் 50 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 75 படையினர் காயமடைந்துள்ளனர்.

இந்த முறியடிப்புத் தாக்குதல் மதியம் 1 மணி வரை நீடித்தது. இதன்போது பெருமளவான படைக்கருவிகள் கைப்பற்றப்பட்டுள்ளனர்.


ஏகே எல்.எம்.ஜி - 08
ரி-81 ரக எல்.எம்.ஜி - 01
ஆர்.பி.ஜி - 04
கவச எதிர்ப்பு எறிகணை செலுத்தி- 02
ரி-56-2 ரக துப்பாக்கிகள் - 08
ரி-56 ரக துப்பாக்கிகள் - 02

இதேபோன்று உடுப்புக்குளத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கிய பிறிதொரு முன்னகர்வும் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. காலை 9 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட முன்னகர்வு மதியம் 12.30 மணியளவில் முறியடிக்கப்பட்டுள்ளது.


இதன்போது 18 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் படையினரின் உடலம் ஒன்றும் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
_________
Pathivu.com

** வத்தளையில் சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களில் முகாமில் குண்டு வெடிப்பு: 8 பேர் பலி! 19 பேர் காயம்

கொழும்பு புறநகரான வத்தளைப் பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் சிறீலங்காப் படை அதிகாரி உட்பட 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 10 படையினர் உட்பட 19 பேர் காயமடைந்துள்ளனர்.வத்தளை கேகித்த கோவில் வீதியில் உள்ள சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 நிமிடமளவில் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.



கொல்லப்பட்ட படையினரில் ஆறு பேரும் ஊர்காவல் படையைச் சேர்ந்தவர்கள் எனவும் ஏனைய இருவரும் பொதுமக்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் 10 பேர் ஊர்காவல் படையைச் சேர்ந்தவர்கள் எனவும் ஏனைய 9 பேரும் பொதுமக்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.காயமடைந்தவர்கள் ராகம மற்றும் கொழும்பு தேசிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



தென்னிலங்கையில் விடுதலைப் புலிகளின் தொடர்பான தகவல்கள் மற்றும் தாக்குதல்கள் குறித்த விடயங்களை அறிவதற்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு என சிவில் பாதுகாப்பு அமைப்பு சிறீலங்காப் படையினரால் உருவாக்கப்பட்டமை இங்கே குறிப்பிடத்தக்கது.

_________

Pathivu.com

Saturday 27 December 2008

** கிளிநொச்சியை கைப்பற்றும் நடவடிக்கையில் 7000 படையினர்

சிறிலங்காப் படைத்தரப்பின் கிளிநொச்சி மீதான படை நடவடிக்கை புலிவாலைப் பிடித்த கதையாகி விட்டது என ஈழநாதம் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஜெயராஜ் இன்று வெளியான அதன் வார இதழில் எழுதியுள்ள பத்தியில் குறிப்பட்டுள்ளார்.

கிளிநொச்சிக்கென கொடுககப்பட்ட விலையானது - ஒருபுறத்தில் சிறிலங்கா சனாதிபதிக்குச் சீற்றத்தை ஏற்பபடுத்தும் அளவிற்கு அதிகரித்ததொன்றாகவும், மற்றொரு புறத்தில் படைத்தரப்பின் இழப்பை எவ்வாறு குறைத்தல் என்பது குறித்து ஆராய வேண்டியதான நிர்ப்பந்தத்தை சிறிலங்காப்படைத்தரப்பிற்கு ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் அப்பத்தியில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 16ம் திகதி படையினர் கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட பாரிய நடவடிக்கையில் 7 ஆயிரம் வரையிலான துருப்பினர் பயன்படத்தப்பட்டனர். கவசப்படைப்பிரிவும் இதில் பங்கெடுத்தது.
கடும் ஆட்லறி எறிகணைகள், பல்குழல் எறிகணைகள் இதில் பயன்படுத்தப்பட்டன. தொடர்ச்சழியான வான் தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டன. இதில் 53,56, 57,58 ஆகிய படையணிகள் ஈடுபடுத்தப்பட்டன.



ஆனால் 16ம் 17ம் திகதிகளில் படைத்தரப்பிற்கு ஏற்பட்ட இழப்புக்கள் மிக அதிகம் படை நடவடிக்கையும் படு தோல்வியில் முடிவடைந்துள்ளது. இது அரசிற்கும் படைத்தரப்பிற்கும் கடும் சிக்கல்களை உருவாக்கியுள்ளது எனவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
__________
Sankathi.com

** தமிழீழ விடுதலைக்கு உலக நாடுகள் அங்கீகாரம் வழங்க வேண்டும் - விடுதலைச் சிறுத்தைகள்

இலங்கை தமிழர்களுக்கு அமைதியான வாழ்வு கிடைக்க உலக நாடுகள் தமிழீழ விடுதலைக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை தொடக்க விழாவும், தமிழீழ அங்கீகார மாநாடும் சென்னையில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அமைந்தகரை புல்லா அவென்யுவில் நடைபெற்ற இம்மாநாட்டுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார்.

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் தலைவர் ஜி.கே.மணி, கவிஞர் காசி ஆனந்தன், திராவிட இயக்க தமிழக பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்,நடிகர் மன்சூர் அலிகான் உட்பட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மாநாட்டில் கலந்துகொண்டனர்.
கட்சி கொடியை ஏற்றி இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறையை திருமாவளவன் தொடங்கிவைத்தார். அப்போது, இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாநில பொறுப்பாளர்கள் கொடி வணக்கம் செலுத்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் 'எகிறிப்பாய்', 'கட்டறுந்த புயல்' ஆகிய இறுவட்டுக்கள் இரண்டு வெளியிடப்பட்டன. ஜி.கே.மணி, சுப.வீரபாண்டியன் ஆகியோர் வெளியிட, கவிஞர் காசி ஆனந்தன், சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட பா.ம.க. தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜி.கே.மணி உரையாற்றியதாவது:
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை பெறுவதற்காக இந்த இளைஞர் பாசறை செயற்பட வேண்டும். இலங்கையில் தமிழர்கள் படும் துயரத்தை உணர்ந்து கொண்டு சிறிலங்கா அரசுக்கு எடுத்துக்கூறும் வகையில் தமிழர் ஒருவரை இந்தியத் தூதுவராக அமர்த்த வேண்டும்.

தமிழீழத்தை அங்கீகரிக்க இந்திய அரசு முன்வர வேண்டும். கடந்த ஆண்டில் மட்டும் 700 முறை தமிழர்கள் மீது சிறிலங்கா அரசாங்கம் குண்டுகள் வீசியுள்ளது. ஒரு நாளைக்கு 1,000 தொன் குண்டுகள் வீசப்பட்டு அப்பாவித் தமிழர்கள் தவித்து வருகின்றனர் என்றார் ஜி.கே.மணி.

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் உரையாற்றியதாவது: இந்திய அரசு தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும். விடுதலைப் புலிகளை ஆதரிப்பது என்பது வேறு, யதார்த்தம் வேறு. போரை நிறுத்த வேண்டுமென கலைஞர் தலைமையில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை புலிகள் ஏற்கிறார்கள். சிறிலங்கா அரசு மறுக்கிறது. இதுதான் யதார்த்தம். ஆங்கில நாளேடு நடத்திய கருத்துகணிப்பு ஒன்றில் 80 விழுக்காடு மக்கள் விடுதலைப் புலிகளை ஆதரித்துள்ளனர். இந்த யதார்த்ததை புரிந்துகொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தார் காசி ஆனந்தன்.

நிறைவாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உரையாற்றியதாவது: இம்மாநாட்டை நடத்துவதற்காகக் காவல்துறை கெடுபிடி செய்தது. எங்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் எவ்வித முரண்பாடும் இல்லை. என்னைக் கைது செய்ய வேண்டும் என்று கூறுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது.

காங்கிரசுக்கும், தி.மு.க.வுக்கும் முரண்பாட்டை உருவாக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை பகடைக் காயாகப் பயன்படுத்த முயல்வதாகவும் திருமாவளவன் குற்றம்சாட்டினார்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒற்றை தீர்மானத்தை திருமாவளவன் வாசித்தார். அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
1948 ஆம் ஆண்டு பிரித்தானியர்கள் தமிழீழத்தை விட்டு வெறியேறுகிறபோது தமிழீழத்தின் இறையாண்மை தமிழீழ மக்கள் கையில் ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், இந்த இறையாண்மை இலங்கை தீவில் பெரும்பான்மையினராக இருந்த சிங்களவர் கையில் ஒப்படைக்கப்பட்டது. தமிழீழத்தின் இறையாண்மை சிங்களவரிடம் இருந்து தமிழர் கையில் ஒப்படைக்க வேண்டும்.

தமிழீழ தேசிய இனத்தின் இறையாண்மையை தமிழர் மீண்டும் பெற தமிழீழ மக்களுக்கு அதன் வழி நிலையான, உறுதியான அமைதி வாழ்வு கிடைக்க, இந்திய அரசு உலக நாடுகளின் அரசுகளும் தமிழீழ விடுதலைக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
__________
Sankathi.com

** தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்ய தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் துரித நடவடிக்கை!

வன்னியில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய மரக்கறி மற்றும் தானியப்பற்றாக்குறை, தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்ய துரித பயிர்ச்செய்கைத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனடிப்படையில் வன்னியில் உள்ள நான்கு உள்@ர் தொண்டு நிறுவனங்கள் ஒன்றிணைந்து மக்கள் மத்தியில் விவசாய, தோட்டச்செய்கையை ஊக்கப்படுத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
_________
Sankathi.com

நாட்டில் ஸ்திரத் தன்மையை ஏற்படுத்த சில சக்திகள் முயற்சிக்கின்றன - ராஜபக்ச

நாட்டில் ஸ்திரத் தன்மையை ஏற்படுத்த சில உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகள் முயற்சிகளை மேற்கொள்வதாக சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.தேசிய சுதந்திர முன்னணியின் பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக வடக்கில் முன்னெடுக்கப்படும் யுத்தத்தை நிறுத்தி உள் நாட்டில் அரசியல் ரீதியான ஸ்திரமற்ற நிலையை உருவாக்கப் பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகள் முயற்சிக்கின்றன.மது நிலைப்புக்காக விடுதலைப் புலிகளிடம் தங்கியிருக்கும் சில சக்திகள் அரசாங்கத்துக்குப் பிரச்சினைகளைத் தோற்றுவித்து நாட்டில் அரசியல் ரீதியான ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
_________
Pathivu.com

** உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்பட்ட ஆழிப்பேரலையில் உயிரிழந்தோர் நிகழ்வு

ஆழிப்பேரலையில், உயிரிழந்த உறவுகளின் நான்காம் ஆண்டு நினைவு நேற்று உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டது. நினைவாலயம், உயிரிழந்தோர் புதைக்கப்பட்டுள்ள நினைவுச் சதுக்கங்கள் உள்ளிட்ட இடங்களில் உறவுகளாலும், மக்களாலும் நினைவு நிகழ்வுகள் இடம்பெற்றன. தமிழர் புனர்வாழ்வுக் கழக அனர்த்த முகாமைத்துவப் பணிப்பாளர் மூர்த்தி தலைமையில் புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள சுனாமி நினைவாலய வளாகத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றன.


பொதுச்சுடரைத் தமிழத்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினம் ஏற்ற, தேசியக்கொடியை தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்கள் ஏற்றினார். ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்டவர்களின் நினைவாக பொது சுடரை முல்லை. மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பார்த்தீபன் ஏற்றினார். புதுக்குடியிருப்பு முருகன் ஆலய பிரதமக்குருக்கள் மலர்மாலை அணிவித்தார்.

மலர்வணக்கத்தை விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் ஆரம்பித்துவைத்தார். அடுத்து க.வே.பாலகுமாரன், புதுக்குடியிருப்பு வணிகர் கழகத்தலைவர் செ.செல்வரச்சந்திரன், முருகன் ஆலயப்பிரதம குருக்கள் ஆகியோர் நினைவுரையாற்ற, சிறப்புரையைத் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் ஆற்றினார். இந்நிகழ்வு சுவிஸ் அறத்தமிழர் மன்ற புனர்வாழ்வுக்கழகத்தில் இடம்பெற்றது.


முல்லை மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசத்தின் ஒழுங்குபடுத்தலில் முல்லைத்தீவு நினைவாலயத்தில் முல்லைப்பிரதேச வர்த்தக சங்கத்தலைவர் பி.மனோ தலைமையில் நினைவு நிகழ்வு நடைபெற்றது. பொதுச்சுடரினை முல்லை.மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கச் சமாசத்தலைவர் ம.குணசிங்கராசா ஏற்றினார். தேசியக்கொடியினை கடற்புலிகளின் துணைத் தளபதி த.விநாயகம் ஏற்றினார். தொடர்ந்து ஆழிப்பேரலையில் காவுகொள்ளப்பட்டவர்களின் நினைவாக பெற்றோர்கள், பிள்ளைகள், உறவினர்கள் சமநேரத்தில் சுடரேற்றி நினைவுகூர்ந்தனர்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து நினைவாலயத்தில் புதுக்குடியிருப்புப் பங்குத்தந்தை இராசசிங்கம் அடிகளார் ஆழிப்பேரலையில் இறந்த மக்களை நினைவுகூர்ந்து வழிபாட்டினை மேற்கொண்டார். இதன்பின்பு நினைவுச் சமாதிக்கு அனைவரும் மலர்கள், மலர்மாலைகள் கொண்டு வணக்கம்செலுத்தினார்கள் பெருமளவானோர் கூடி நிகழ்வில் கலந்துகொண்டனர்.



முல்லை மாவட்ட அரச அதிபர் செயலகத்தில் நண்பகல் 12.00 மணிக்கு நடைபெற்ற நிகழ்வில் ஆழிப்பேரலையில் இறந்த அனைவரின் நினைவாகப் பொதுச்சுடரினை முல்லை மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், மேலதிக அரச அதிபர் க.பார்த்தீபன் ஆகியோர் ஏற்றினார்கள். அரச பணியாளர்களின் நினைவுப்படத்திற்கான நினைவுச் சடர்களை திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ம.கிறேசியன் வில்வராசா, உதவித்திட்டமிடல் பணிப்பாளர்களான திருமதி க.பவானி திருமதி சாந்தி, திருமதி சுகந்தி, பணியாளர்களான நளாயினி, கணேசமூர்த்தி, திருமதி அருட்செல்வி, மாவட்ட மேலதிக பதிவாளர் ஆகியோர் ஏற்றினார்.

தொடர்ந்து மலர்வணக்கம் இடம்பெற்றது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து காவுகொள்ளப்பட்ட மக்களுக்கு வணக்கம் செலுத்தினர். வடமராட்சி கிழக்கில் உறவுகள் புதைக்கப்பட்டுள்ள இடத்தில் நினைவு நிகழ்வுகள் இடம்பெற்றன. பொதுச்சுடரினை கடற்புலிகளின் தளபதிகளில் ஒருவரான மணாளன் ஏற்றினார். தேசியக்கொடியினை வடமராட்சி கிழக்குக் கோட்ட அரசியல்துறைப்பொறுப்பாளர் அண்ணாத்துரை ஏற்றினார்.

தேசியக்கொடியினை வடமராட்சி கிழக்குக் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் அண்ணாத்துரை ஏற்றினார். ஆழிப்பேரலை பொதுப்படத்திற்கான ஈகச்சுடரினை ஏற்றி, மலர் மாலையினை கடற்புலிகளைச் சேர்ந்த மோகன் அணிவித்தார்.

பிரதான ஈகச்சுடரினை தமிழர்புனர்வாழ்வுக்கழக உதவி நிறைவேற்றுப் பணிப்பாளர் நரேன் ஏற்ற சமநேரத்தில் ஆழிப்பேரலையால் சாவடைந்த உறவுகளுக்கு உறவினர்கள் சுடரேற்றி வணக்கம் செலுத்தினார்கள். நினைவுரையினை நரேன் ஆற்றினார். இந்நிகழ்வுச் சதுக்கத்தில் 1600 மக்கள் புதைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
__________
Sankathi.com

** புதுக்குடியிருப்பு மக்கள் குடியிருப்பு மீது வான் தாக்குதல் - மூவர் படுகாயம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 9ம் பிரிவில் தங்கியிரந்த இடம்பெயர்ந்தவர்களின் வாழ்விடம் மீது சிறீலங்கா வான் படை இன்று சனிக்கிழமை கடும் தாக்குதலை நடத்தியுள்ளது. இதன்போது குழந்தை உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர்.





மதியம் நடைபெற்ற இந்தத் தாக்குதலில் நான்கு வயதான செல்வராஜா செல்வரஞ்சன் என்ற குழந்தையும், 10 வயதான அமிர்த்தாசன் விதுசாளினி என்ற சிறுமியும், சத்தியசீலன் சத்தியராஜா என்ற 18 வயது மாணவனும் படுகாயமடைந்து புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
__________
Sankathi.com

Friday 26 December 2008

** யாழ் மக்களே சிந்தித்துச் செயற்படுங்கள் - எல்லாளன் படை

தனித் தமிழீழத்துக்கான போராட்டமானது தனது இறுதியான பாதையில் பயணித்துக் கொண்டிருப்பதை தாங்கள் அறிவீர்கள். இப் போராட்டத்திற்காக இரண்டு தசாப்த காலங்களாக போராளிகளும் மக்களும் உயிரை துச்சமென மதித்து போராடிக் கொண்டிருக்கும் இவ் வேளையில் போராட்டத்தின் நியாயமான கோட்பாட்டினால் போராட்டமானது இன்று உலகளாவிய ரீதியில் ஒருபரிணாம வளர்ச்சி அடைந்து வந்துள்ளதை நீங்கள் அறிவீர்கள்.

அதனைப் பொறுக்காத மகிந்த அரசு தனது தோல்வியையும் எமது மக்கள் படுகொலை செய்யப்படுவதையும் சர்வதேசத்திடம் இருந்து மறைப்பதற்காக அதனுடன் ஒட்டுண்ணி போல் ஒட்டி வாழும் ஒட்டுக் குழுக்கள் மூலமும் துரோகிகள் மூலமும் உங்களுக்கு சில அற்பசலுகைகளை தந்து வஞ்சக எண்ணத்துடன் போலியாக உறவாடி களியாட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் பேரணிகள் என சில வேலைகளை உங்கள் ழூலம் செய்து போராட்டத்தை தவறாக சித்தரிக்க முயல்கின்றான். இதற்கு மக்களில் சிலரும் உடந்தையாக இருப்பது வேதனை அளிக்கின்றது.

யாழ் மக்களே!
எமது மக்கள் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் இவ் வேளையில் இவ்வாறான செயற்பாடுகள் தேவையா? சிந்தித்து செயற்படுங்கள். எனவே நீங்கள் அற்ப சலுகைகளுக்காக இவர்களுடன் தொடர்பை பேணும் போது உங்களை அறியாமலே நீங்களும் தனித் தமிழீழத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு உடந்தையாகும் சூழ்நிலை அல்லது சந்தர்ப்பம் ஏற்படலாம்.
எனவே இவர்களுடனான தொடர்பை முற்றாக நிறுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம். தனித் தமிழீழத்திற்கான காலம் எம் கண்முன்னால் கனிந்து வந்துள்ளது அதனை நாம் அனைவரும் ஒன்றுபட்டு வென்றெடுப்போம்.

எல்லாளன் படை
யாழ் மாவட்டம்.
26.12.2008

_________
Pathivu.com

** ஒபாமா அரசில் இலங்கை விடயத்தை பில் கிளின்டனே இனிக் கையாள்வாராம்! - கணவரை அப்பொறுப்பில் நியமிக்க ஹிலாரி முடிவு!

அமெரிக்காவின் புதிய வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்கவிருக்கும் ஹிலாரி கிளின்டன் அம்மையார், இந்தியா - பாகிஸ்தான் - இலங்கை போன்ற நாடுகளை உள்ளடக்கிய இந்திய உபகண்டப் பிரதேசத்தின் பிரச்சினைகளைக் கையாள்வதற்கான தமது பிரதிநிதியாகத் தமது கணவரும் முன்னாள் ஜனாதிபதியுமான பில் கிளின்டனின் பெயரைப் பிரேரித்திருக்கின்றார் எனக் கூறப்படுகின்றது.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக எதிர்வரும் 20 ஆம் திகதி பராக் ஒபாமா பதவியேற்கும் சமயத்தில் புதிய வெளிவிவகார அமைச்சராக ஹிலாரி கிளிண்டன் பொறுப்பேற்பார்.

அவர், சர்வதேச ரீதியான இராஜதந்திரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக இராஜதந்திரிகள் அடங்கிய செயலணி ஒன்றை உருவாக்கி வருகின்றார் என்று கூறப்படுகின்றது.இந்திய உபகண்டப் பிரதேசம் பெரும் பதற்றத்துக்கும் மோதலுக்கும் இடமாகியுள்ளதால் அமெரிக்காவின் சார்பில் இப்பிராந்தியப் பிரச்சினைகளைக் கையாள்வதற்கு தேர்ந்த இராஜதந்திரி ஒருவர் தேவைப்படுகின்றார் என ஹிலாரி கருதுகின்றார் என்றும் -

எட்டு வருடங்கள் ஜனாதிபதியாக இருந்து பல்வேறு சர்வதேசப் பிரச்சினைகளை வெற்றிகரமாகக் கையாண்ட அனுபவஸ்தரான தமது கணவர் பில் கிளிண்டனே இதற்குப் பொருத்தமானவர் எனக் கருதி அவரின் பெயரை ஹிலாரி பிரேரித்துள்ளார் என்றும் - கூறப்படுகின்றது.

இதேசமயம்- ஆழிப்பேரலை அனர்த்த நிவாரணப் பணிகளைக் கண்காணிப்பதற்கு ஐ.நாவின் பொதுச் செயலாளரின் விசேட பிரதிநிதியாக இலங்கைக்குப் பல தடவைகள் வந்து சென்றுள்ள பில் கிளிண்டன், அதன் காரணமாக இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் நன்கு பரிச்சயமாகி, விடயங்களை ஏற்கனவே நன்கு புரிந்து கொண்டவர் என்று விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
__________
Uthayan.com

** போரை நிறுத்த இலங்கையுடன் பேச்சு நடத்துகிறதாம் இந்தியா - பிரணாப் விரைவில் கொழும்புக்கு காங்கிரஸ் கட்சிச் செயலர் தகவல்!

இலங்கையில் நடைபெற்றுவரும் போரை உடன் நிறுத்துவது தொடர்பாக அந்த நாட்டு அரசுடன் இந்தியா இராஜதந்திர ரீதியாகப் பேச்சு நடத்தி வருகிறது. அங்கு போர்நிறுத்தத்தை அமுல்படுத்துவதற்காக வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி விரைவில் கொழும்புக்கு விஜயம் மேற்கொள்வார்.

- இவ்வாறு ஆளும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அபிசேக் சிங்வி தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் டில்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இதனைக் கூறினார்.

அப்போது அவர் மேலும் கூறியவை வருமாறு:-தி.மு.க. அரசுக்கு காங்கிரஸ் தலைவர்கள் யாரும் எச்சரிக்கை விடுக்கவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டு இருப்பதால் அதற்கு ஆதரவாக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது மாநில அரசுகளின் கடமை. இது தொடர்பாக தமிழக அரசுடன் காங்கிரஸ் மேலிடம் பேச்சு நடத்தி வருகிறது. அதனையே காங்கிரஸ் வலியுறுத்துகின்றது.

இலங்கையில் நடைபெற்றுவரும் போரை நிறுத்துவது தொடர்பாக அந்த நாட்டு அரசுடன் இராஜாங்க ரீதியாக இந்தியா பேச்சு நடத்தி வருகிறது. போர் நிறுத்தத்தை வலியுறுத்துவதற்காக வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி விரைவில் இலங்கைக்குப் பயணம் செய்வார் - என்றார் அவர்.
எனினும் இலங்கை - இந்தியத் தரப்புகளுக்கு இடையில் இராஜதந்திர ரீதியில் முன்னெடுக்கப்படும் பேச்சுகளின் விவரங்கள் பற்றிய தகவல் எதையும் அவர் அங்கு வெளியிடவில்லை.
__________
Uthayan.com

** அஞ்சாத நெஞ்சுறுதி; குலையாத கொள்கை வெறி! புலிகளிடமிருந்து நாங்கள் வாங்கியவை இவையே’ - தொல். திருமாவளவன் தெரிவிப்பு

எதற்கும் அஞ்சாத நெஞ்சுறுதி. குலையாத கொள்கை வெறி. இனத்தைக் காக்க இன்னுயிரையும் ஈயத் தயங்காத தைரியம். இப்படி புலிகளிடமிருந்து நாங்கள் நிறைய வாங்கியிருக்கிறோம். அவர்களுக்கு துளியளவு உதவிகளைக்கூட எங்களால் செய்ய முடியவில்லையே என்பதுதான் எங்களின் மகா வேதனை.
- இவ்வாறு தமிழகத்திலிருந்து வெளிவரும் ஊடகமொன்றுக்கு விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் தெரிவித்திருப்பவை வருமாறு-
புலிகளுக்கு யானைப்பசி. எத்தனை கோடிகள் அவர்களுக்குக் கிடைத்தாலும், அவர்களின் தேவையைத் தீர்க்க முடியாது. அவர்கள் நடத்தும் யுத்தம், அவர்கள் நடத்தும் அரச, புதிய நாட்டை உருவாக்க அவர்கள் மேற்கொள்ளும் முயற்சி என்பவற்றுக்கெல்லாம் எத்தனையோ கோடிகள் தேவைப்படும்.
புலிகளிடம் நாங்கள் நிறைய வாங்கி இருப்பது உண்மைதான். எதற்கும் அஞ்சாத நெஞ்சுறுதி. குலையாத கொள்கை வெறி. இனத்தைக் காக்க இன்னுயிரையும் ஈயத் தயங்காத தைரியம். இப்படி புலிகளிடமிருந்து நிறைய வாங்கி இருக்கிறோம். அவர்களுக்கு துளியளவு உதவிகளைக்கூட எங்களால் செய்ய முடியவில்லையே என்பதுதான் எங்களின் மகா வேதனை.

புலிகளிடம் கையேந்திக் கட்சியை வளர்க்கும் நிலை எங்களுக்குக் கிடையாது. யதார்த்தத்தில் யாருக்கும் உதவுகின்ற நிலையில் புலிகளும் இல்லை. இப்படியான பொய் வதந்திகளைக் கிளப்புபவர்களைப் பார்த்து நான் ஆத்திரப்படவில்லை. அனுதாபப்படுகிறேன் - என்றார்.

தங்கபாலுவும், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் தவறான கருத்துகளைத் திரும்பத் திரும்பச் சொல்லி, என் மீது நடவடிக்கை எடுக்க வற்புறுத்துகிறார்கள். அன்னை சோனியா சொல்படி இவர்கள் செயல்படுகிறார்களா இல்லை அம்மாவின் (ஜெயலலிதா) இயக்குதல்படி செயற்படுகிறார்களா எனத் தெரியவில்லை.

அ.தி.மு.க. கூட்டணியில் இப்போது கம்யூனிஸ்ட் இடம் வகிக்கிறது. அதனால் காங்கிரஸ் அந்தக் கூட்டணியில் இடம்பெற வாய்ப்பில்லை. காங்கிரஸ் தனித்துப் போட்டியிடவும் வாய்ப்பு குறைவுதான். இதைவைத்து தி.மு.க. கூட்டணியை உடைத்து பலவீனமாக்க அ.தி.மு.க. திட்டம் போடுகிறது.
இதற்கேற்றாற்போல் காங்கிரஸ் தலைவர்கள் எங்களை மையமாக வைத்து தி.மு.க. அரசுக்கு குடைச்சலைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எங்களின் பொறுமைக்கும் நிதானத்துக்கும் ஒரு அளவு இருக்கிறது.

ஈழ விவகாரத்தில் இறையாண்மையை மீற மாட்டேன் என உறுதி கொடுத்துவிட்டேன். சத்தியமூர்த்தி பவன் தாக்கப்பட்ட விவகாரத்திலும் எங்களுக்கு சம்பந்தம் இல்லை. இந்த உண்மைகள் தெரிந்தும், கைதுக்கு வலியுறுத்தும் காங்கிரஸ் தலைவர்கள் விடுதலைச் சிறுத்தைகளை கூட்டணியில் வைத்துக்கொள்ளக் கூடாது என கலைஞரை வற்புறுத்துகின்றனர் எனவும் சொல்கிறார்கள்.

அவர்கள் வெளிப்படையாக அறிவித்தால், நாங்களும் வெளியேறத் தயார். சட்டத்துக்கு உட்பட்டு, என் மீது நடவடிக்கைகள் பாயுமானால் அதனை எதிர்கொள்வதில் எனக்கு எந்தச் சிரமமும் இல்லை. அதற்காக தி.மு.கவுடனான இணக்கத்தையோ பாசத்தையோ உடைத்துக்கொள்ள மாட்டோம். அவர்கள் மீது ஆத்திரப்பட மாட்டோம். தி.மு.க. கூட்டணியை விட்டு வெளியேறவும் மாட்டோம் - என்றார்.
__________
Uthayan.com

** தாயகத்தில் அல்லலுறும் மக்களின் துயர்துடைக்க நத்தார் தாத்தாவாக பிரான்ஸ் தமிழ் இளையோர்கள்.

நத்தார் பண்டிகை தினமான டிசம்பர் 24, 25ம் திகதிகளில ஜியான் நகரத்தில் உள்ள இணைய நிறுவனத்தினரின் வர்த்தக துண்டுப்பிரசுரங்களை மக்கள் அதிகமாக போக்குவரத்து மேற்கொளளும் பிரதான வீதிகளில் நத்தார் தாத்தாவின் வேடமணிந்து கடும் குளிரிளும் இருபத்தைந்திற்கும் மேற்பட்ட பிரான்ஸ் தமிழ் இளையோர்கள் விளம்பரப்படுத்தினர்.


இவ் விளம்பரத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற வருமானத்தை அல்லலுறும் மக்களுக்காக கொடுத்துள்ளார்கள். இது போன்று ஏனை நாடுகளிள் உள்ள இளையோர்கள் முன்னுதாரனமாக தாயகத்தில் அல்லலுறும் மக்களிற்கு கரம் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
__________
Sankathi.com

** யாழில் இருந்து மேலும் படையினர் வன்னிக் களமுனைக்கு அனுப்பி வைப்பு

பெரும் இராணுவப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள சிறிலங்கா அரசு தற்போது கிழக்கு மற்றும் யாழ்குடாவில் நிலைகொண்டுள்ள படையினரை அங்கிருந்து எடுத்து வன்னிக் களமுனைக்கு அனுப்பி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் கிழக்கில் இருந்து 500 படையினர் வன்னிக் களமுனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது யாழ்ப்பாணத்திலுள்ள சிறிலங்காப் படையினரின் படைத்தளங்களிலுள்ள படையினர் குறைக்கப்பட்டு அங்குள்ள படையினர் வன்னிக் களமுனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.
கடந்த வாரம் பருத்துறை, அச்சுவேலி, யாழ்ப்பாணம் படைத்தளங்களில் படையினர் இவ்வாறு குறைக்கப்பட்டு வன்னிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
__________
Sankathi.com

Thursday 25 December 2008

** தமிழ் மக்களை காக்க புலிகளை ஆதரிக்கிறோம் - வைகோ

ஈழத்தில் வாழும் தமிழ் மக்களை காக்க விடுதலைப் புலிகளை நேற்றும் ஆதரித்தோம்; இன்றும் ஆதரிக்கிறோம், நாளையும் ஆதரிப்போம் என்று வைகோ கூறினார்.

சென்னையிலுள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமை அலுவலகத்தில் பெரியார் சிலை அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. பெரியார் சிலையை ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ திறந்து வைத்து உரையாற்றினார். அங்கு அவர் பேசுகையில்,தமிழர் வாழ்வுக்கு வான்மழையாக திகழும் பெரியாரின் சிலையை திறந்து வைப்பதில் பெரும் பேறு அடைகிறேன். உயிரால், உடலால் பெரியார் மறைந்தாலும் கொள்கைகளால் அவர் வாழ்கிறார். வாழ்நாள் முழுவதும் அஞ்சா நெஞ்சராக விளங்கினார் பெரியார்.

அவர் வைக்கம் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தினார். ஆலயப்பிரவேசம் போராட்டத்தை நடத்தினார். தூக்கு தண்டணை தந்தாலும் கொள்கைகளை விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று முழங்கியவர். அரசியல் சட்டத்தை எரிக்கும் போராட்டத்தில் கைதாகி சிறையில் இறந்தவர்களில் லால்குடி பெரியசாமியும் ஒருவர். அவர் 16 வயது சிறுவன். அவனை சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தபோது அப்போதைய கவர்னர் அவனை மன்னித்து விட உத்தரவிட்டார். ஆனால் இனிமேல் இப்படிப்பட்ட போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று கூறினார்.

ஆனால் என்னை விடுதலை செய்தாலும் அரசியல் சட்டத்தை தான் எரிப்பேன் என்றார். எதையும் எதிர்பாராமல் வாழ்ந்தார். அத்தகைய பெரியசாமி போன்ற கொள்கை தங்கங்களை கொண்ட கட்சி ம.தி.மு.க. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ம.தி.மு.க.வை அழிக்க முயற்சி நடந்தது.
எத்தனை சோதனை வந்தபோதிலும் மனம் தளராமல் இருப்பவர்கள் தான் ம.தி.மு.க.வை சேர்ந்தவர்கள். தமிழ் ஈழ விடுதலை புலிகளை ஆதரிக்கிறோம். தமிழ் இன மக்களை பாதுகாக்க விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறோம் என்றார் வைகோ.
__________
Sankathi.com

** விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்தால் கடும் நடவடிக்கை - தமிழக முதல்வர் மு.கருணாநிதி

இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் மு. கருணாநிதி எச்சரித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவு தெரிவித்தால் யாராக இருந்தாலும் சட்டம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும். தி.மு.க. பொறுத்தவரையில் ஈழத்தமிழர்களுக்கு மட்டுமே ஆதரவு தெரிவிக்கும் என்றார்.
__________
Sankathi.com

**வான் படையின் உதவியில் தங்கியுள்ள சிறிலங்காவின் இராணுவ நகர்வு

கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கான தரைப்படையினரின் முயற்சிகளின் போது அவர்களுக்கு ஏற்பட்டு வரும் பாரிய இழப்புக்கள் காரணமாக வான்படையினரின் உதவிகளைத் தற்போது தரைப்படையினர் அதிகம் நாடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில நாட்களாக கிளிநொச்சியை நோக்கியதான பல முனை நகர்வுகளின் போது சிறிலங்காத் தரைப்படையினர் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டும், ஆயிரக்கணக்கில் படுகாயமடைந்தும் களத்திலிருந்து அகற்றப்பட்டுள்ள நிலையிலும், அதனால் போரிடும் படைச் சிப்பாய்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள உளவுரண் பாதிப்புகளினாலும் வான்படையின் உதவிகளை தரைப்படைத் தளபதி சரத்பொன்சேகா அதிகம் எதிர்பார்த்து நிற்பதாகவும், இதனால் தற்போது குண்டு வீச்சு விமானங்களே பயன்படுத்தப்படுவதாக களமுனைச்செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கிளிநொச்சிக் கிழக்கிலுள்ள மக்கள் குடியிருப்புக்களை நோக்கியும் இவ்விமானங்கள் கண்மூடித்தனமான குண்டு வீச்சுக்களை நடத்தி வருகின்றன. தற்போது வன்னிக்களமுனைகளில் நாள்தோறும் குண்டு வீச்சு விமானங்களின் நடவடிக்கைகள் அதிகம் முடுக்கிவிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நேற்று முனத்தினம் இரவு வேளையில் பரந்தன் நகரம் மீது சிறிலங்கா வான்படைக் கிபிர் விமானங்கள் குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இதனால் நகரம் அதிர்ந்தது. பரந்தன் அந்தோணியார் தேவாலயம், திருக்குடும்ப கன்னியர் மடம், நகர வணிக நிலையங்கள், என்பன மிகவும் மோசமாகச் சேதமடைந்துள்ளன. கால்நடைப் பட்டி மீதும் குண்டு வீழ்ந்து வெடித்ததால் 90ற்கும் அதிகமான கால்நடைகள் கொல்லப்பட்டும் 25ற்கு அதிகமான கால்நடைகள் படுகாயமடைந்துமுள்ளன.

நேற்றுமுன்தினம் இரவு 10.30 மணிக்கு வன்னி வான்பரப்பிற்குள் நுழைந்த இரண்டு கிபிர் விமானங்கள் பரந்தன் நகர்மீது அதனை அண்மித்த மக்கள் குடியிருப்புக்கள் மீதும் ஐந்து தடவைகள் குண்டுகளை வீசியுள்ளன. இதில் பரந்தன் புதுக்குடியிருப்பு - வீதியில் அமைந்துள்ள கரைச்சி வடக்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் கட்டடிடத்தொகுதியில் இரண்டு வணிக நிலையங்கள் முற்றாக அழிவடைந்துள்ளன. மேலும் பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.

இதனையடுத்து சமநேரத்தில் பரந்தன் - புதுக்குடியிருப்பு வீதியில் அமைந்துள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தை இலக்கு வைத்து குண்டுகள் வீசப்பட்டன. தேவாலய வளாகத்திற்குள் பரசூட் மூலம் வீசப்படும் குண்டுகள் வீழ்ந்து வெடித்துள்ளன. இதில் தேவாலயம் சேதமடைந்துள்ளது. அதற்கு அருகில் அமைந்துள்ள திருக்குடும்ப கன்னியர்மடம் சேதமடைந்தன. தேவாலய வாசலில் அமைந்துள்ள மாதாசொரூபம் சிதைவடைந்துள்ளது.

மூன்றாவது குண்டுவீச்சுத் தாக்குதல் கால்நடைப் பட்டி மீது இடம்பெற்றிருந்தது. இதில் சிக்கி 90ற்கும் அதிகமான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன. 25ற்கும் அதிகமான கால்நடைகள் படுகாயமடைந்துள்ளன. கொல்லப்பட்ட கால்நடைகளின் பாகங்கள் அந்தப் பகுதிகள் எங்கும் சிதறிக் காணப்படுகின்றன. படுகாயமடைந்த கால்நடைகள் அந்த இடங்களிலே உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றன.
கொல்லப்பட்ட கால்நடைகளின் உரிமையாளர்களான கு.விஐயகுமார் பரந்தன் - குமரபுரம், ப.தவம் குமரபுரம், கி.நாகம்மா குமரபுரம் ஆகியோரின் கால்நடைகளின் அருகில் கண்ணீர் விட்டு அழுத வண்ணட் இருந்தனர்.

நான்காவது ஐந்தாவது குண்டுத்தாக்குதல்கள் பரந்தன் - ஆனையிறவு வீதியில் அமைந்திருந்த மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து இடம்பெற்றிருந்தன. இதில் மக்களின் பத்திற்கும் அதிகமான வீடுகள் முற்றாக அழிவடைந்துள்ளன.

இதேவேளை நேற்றுக்காலை 7.10மணிமுதல் மாலை 4.30மணிரையான நேரத்தில் பரந்தன் குமரபுரம் மற்றும் கிளிநொச்சி நகரப்பகுதிகள் மீதும் நான்கு தடவைகள் கிபிர் விமானங்கள் குண்டுத்தாக்குதல்களை நடத்தியுள்ளன. இதில் மக்களின் குடியிருப்புக்கள் மற்றும் டிப்போச் சந்தி வணிக நிலையங்கள் என்பன அழிவடைந்துள்ளன.
__________
Sankathi.com

** 25 வருட சமாதான மன்றாட்டங்களுக்கு எதுவித சமிக்ஞைகளுக்கு ஏற்படவில்லை - இராசப்பு ஜோசப்.

கடந்த 25 வருடங்களாக சமாதானம் வேண்டும் என அனைத்துலச சமூகத்திடம் விடுத்த மன்றாட்டங்களுக்கு எதுவித சமிக்ஞைகளும் ஏற்படவில்லை என மன்னார் மறை மாவட்ட ஆயர் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார். மன்னார் செபஸ்ரியான் தேவாலயத்தில் நேற்று நள்ளிரவு நடந்த திருப்பலி ஆராதனையின் பின்னர் ஆற்றிய உரையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வன்னியில் சிறிய பிரதேசத்தினுள் 3 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் பெரும் துன்பங்களை எதிர்கொண்டுள்ளனர். அவர்கள் எறிகணைகள் மற்றும் வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன நத்தாரை முன்னிட்டு போர்நிறுத்தத்தைக் கடைப்பிடிக்குமாறு தான் உள்ளிட்ட 5 ஆயர்கள் இணைந்து விடுத்த வேண்டுகோளை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருப்பது தமக்குக் கவலையளிக்கின்றது.

வன்னியில் இடம்பெயர்ந்துள்ள 3 இலட்சம் மக்களில் 40 ஆயிரம் பேர் மன்னார் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து சென்றவர்கள். அவர்கள் தங்களை வாழவிடுமாறு அழுது புலம்புவதாக அவர் மேலும் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
_________
Pathivu.com

** சமாதானப் பிரபுவின் மார்க்கத்தை தொடர்ந்தாலேயே அமைதி சாத்தியம்

மனுக்குலத்தின் மேய்ப்பர் - இறைதூதர் - தேவசுதன் - சமாதானப் பிரபு - இயேசுபிரான் அவதரித்த தினத்தை கிறிஸ்தோதயத் திருநாளாகப் பூவுலகம் இன்று கொண்டாடுகின்றது. பூமிப்பந்துக்கு அமைதியையும் சமாதானத்தையும் கொண்டு வருவதே அவரது வாழ்வாகவும் வழிகாட்டலாகவும் ஜீவனாகவும் அமைந்தன. அமைதி நெறியையே - சமாதான மார்க்கத்தையே - அவர் நமக்குப் போதித்தார்.சமாதான தாகத்தில் - அமைதி தேடலில் - அல்லலுற்றுத் தவிக்கும் உலக சமூகத்துக்கு சமாதானச் செய்தியை எடுத்து வந்தார் இயேசுபிரான்.

ஆனால் அது இன்றும் ஈழத் தமிழருக்கு எட்டாக் கனியாக இருப்பதுதான் வேதனை.2001 இல் கிறிஸ்தோதயத் திருநாளை ஒட்டிப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் ஒருதலைப்பட்சமாக அறிவித்த யுத்தநிறுத்தம், சமாதானம் பற்றிய ஒளிக்கீற்றாக ஈழத் தமிழ் மக்களுக்குத் தோன்றியது. ஆனால் கடந்த ஆண்டு டிசம்பரில் - பண்டிகைக் காலத்தை ஒட்டிய வேளையில் - யுத்த நிறுத்த முறிவு பற்றிய இலங்கை அரசின் உத்தியோகபூர்வ அறிவிப்புடன் சமாதான நம்பிக்கை தளர்ந்து, அமைதி வாய்ப்புக் கருகி, இலங்கைத் தேசம் யுத்தப் பேரிருளில் மூழ்கியது.

மகிமையில் இருக்கும் தேவனுடைய குமாரனாக இருந்தும் மீட்பராகிய ஆண்டவன் இயேசு கிறிஸ்து, வேற்றுமை பார்க்காது, மானுட சமூகத்துக்காக மகிமையிலிருந்து கீழிறங்கி வந்து மானுடனானார். காலத்தைக் கடந்த இறைவன், ஞாலத்தைக் காப்பதற்காக - ஓலமிடும் மக்களுக்கு சீலத்தைப் போதிப்பதற்காக - காலத்துக்கு உட்பட்டவரானார்; பாடுகளைச் சுமந்தார்; பலரையும் அரவணைத்தார்.

அவரின் பணி ஆரம்பம் முதல் இறுதிவரை சமாதானத்தை அறிவித்து, அமைதியை நிலைநாட்டும் ஒப்புயர்வற்ற திருப்பணியாகவே அமைந்தது என்பதை நற்செய்தியை அறிவிக்கும் ஏடுகள் நமக்குப் பகர்கின்றன.அவர் தமது பணி வாழ்வை ஆரம்பித்த சமயம் மலைப் பிரசங்கத்தில் கூட அமைதியையே வலியுறுத்தினார். "அமைதியை ஏற்படுத்துவோர் பேறு பெற்றோர்.

ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் எனப்படுவோர். அவர்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாவர்." (மத். 5: 9) என்று அங்கு குறிப்பிட்டார் தேவசுதன்.ஆனால், இங்கோ - இன்றோ - அமைதியை ஏற்படுத்தும் கருமத்தை ஆற்றுவதற்கு வாய்ப்பும், வசதியும், சந்தர்ப்பமும், அதிகாரமும், செல்வாக்கும் பெற்ற அரசியல் தலைவர்களோ, தேவசுதன் காட்டிய பாதையை மறந்து, சாத்தான் வழி நடக்கும் அலங்கோலமே அரங்கேறுகிறது.

இந்தத் தேசத்தில் - இலங்கைத் தீவில் - சமாதானம் குறித்துப் பேசுவோர் தேசத்துரோகிகளாக இன்று வர்ணிக்கப்படுகின்றார்கள். பேரழிவு தரும் யுத்தத்தில் வெறிகொண்டு அலைவோர் தேசபக்தர்களாகப் போற்றப்படும் அவலட்சண நிலை, சீலம் பேசும் தேசத்தில் அரங்கேறுகின்றது.பாலகன் இயேசுவின் பிறப்பு பெத்தலகேம் நகரில் இற்றைக்கு சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த சமயம் அது பற்றிய செய்தியை முன்மொழிந்த வானதூதர்கள் "உன்னதங்களில் கடவுளுக்கு மகிமை உண்டாகுக. பூவுலகில் நன்மனதுடையோருக்கு அமைதி ஆகுக!" (லூக். 2:14) என்றே அறிவித்தார்கள்.

"இருளில் நடந்து வந்த மக்கள் பேரொளியைக் கணடார்கள். மரண இருள் படிந்த நாட்டில் உள்ளோருக்கு ஒளி கிடைத்தது; சுடர் வீசியது." - இதுவே ஆண்டவன் இயேசுவின் பிறப்புக் குறித்து முன்னறிவிக்கப்பட்ட வாசகங்களாகும்.

ஆக, இயேசு பிரானின் பூமிக்கான திருவருகையும், நற்பணியும் இந்தப் பூவுலகில் அன்பையும், அமைதியையும், சமாதானத்தையும், சமரசத்தையும், சகோதரத்துவத்தையும் நிலை நிறுத்துவதையே இலக்காகக் கொண்டு அமைந்தன. அதற்காகவே அவர் பாடுகளைச் சுமந்தார். தமது உயிரையும், உடலையும் கூட அர்ப்பணித்தார்.

ஆனால் தேசங்களை வழிநடத்துவோர் அந்தப் புனிதரின் வழிகாட்டலில் புதைந்து கிடக்கும் அன்பையும் உயரிய செய்தியையும் புரிந்துகொள்ள - உணர்ந்துகொள்ள - மறுத்து உன்மத்தர்களாக, அராஜகங்களை நாடி, அடக்குமுறையாளர்களாகவும், ஒடுக்குமுறைவாதிகளாகவும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.அதனால் இன்று எங்கும் அவலம்; எங்கும் நலிவு; எங்கும் சோகம்; எங்கும் துன்பம்.

இயேசுபிரான் காட்டிய வழியில் மற்ற மனிதர்களையும், இனத்தவர்களையும், மாற்றாரையும் தம்மைப்போல மாண்புடன் மதிக்கும் உயரிய பண்பியல்பு ஆட்சியிலும், அதிகாரத்திலும் இருப்போருக்கு வந்தால்தான் இங்கு தேவன் விரும்பிய - வழிகாட்டிய - நிரந்தர அமைதியும், நிலைத்த சமாதானமும் ஏற்படும். அப்போதுதான் இருளில் நடந்து வந்த மக்களுக்குப் பேரொளி கிட்டி, மரண இருள் படிந்த நாட்டில் உள்ளோருக்கு ஒளி கிடைத்து, அதன் பலனாக முன்னறிவிக்கப்பட்ட வாசகங்கள் நிஜத்தில் - யதார்த்தத்தில் - செயலுருப் பெறும்.

அதை எட்டுவதற்கு உழைப்பதே எமது பணியாகட்டும் எனப் புனிதர் அவதரித்த இந்த நன்னாளில் திடசங்கற்பம் கொள்வோமாக!
__________
Uthayan.com

** வன்னியில் இடம்பெயர்ந்தவர்க்கு உணவுப் பொருள்களோ, மனிதநேய உதவிப் பொருள்களோ அனுப்பவில்லை! ஐ.நா.சபையின் வொல்டர் கலின்

வன்னியில் இடம்பெயர்ந்தவர்க்கு போதியளவு உணவுப் பொருள்களோ, மனிதநேய உதவிப் பொருள்களோ அனுப்பவில்லை என ஐ.நா.சபையின் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் மனித உரிமைகளுக்கான செயலாளர் வொல்டர் கலின் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் முகாம்களில் தடுத்துவைக்கப்படக் கூடாது எனத் தெரிவித்திருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி, இடம்பெயர்ந்தவர்களும் சுதந்திரமாக நடமாடுவதற்கு உரிமையுடையவர்கள் எனக் கூறியுள்ளார்.

இது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவது

வன்னியிலிருந்து வெளியேறிய மக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் களிமோட்டை மற்றும் சிறுகண்டல் முகாம்களின் நிலைமைகள் குறித்தும் தனது கடிதத்தில் விசாரித்திருக்கும் அவர், பொதுமக்கள் ஆயுதக் குழுக்களிடமிருந்து பாதுகாக்கப்படவேண்டியவர்களாக இருந்தாலும், அந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகள் வெளிப்படையானதாக இருக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இராணுவ நடவடிக்கைகள் காரணமாக பாதுகாப்பற்ற சூழ்நிலை காணப்பட்டால் மாத்திரம் தற்காலிகமாக வேறு இடத்திற்கு மக்களை மாற்றும் உரிமை இருப்பதாக அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மோதலில் ஈடுபட்டிருக்கும் தரப்பினர், பொதுமக்களின் மனிதநேய உதவிகளை முன்னெடுப்பதற்கான பொறிமுறையை அமுல்படுத்த உரியவர்களுக்கு அனுமதி வழங்கவேண்டும்.

அனைத்துத் தரப்பினரும் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை மதித்து நடக்கவேண்டியது அவசியம் எனவும் அவர் வலியுறுத்திக் கூறியுள்ளார். இடம்பெயர்ந்த மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
_________
Pathivu.com

** சிறிலங்காவிற்கு பயணிக்க வேண்டாம் அமெரிக்கா தனது பிரஜைகளுக்கு எச்சரிக்கை!

சிறிங்காவின் வடகிழக்கு பகுதியில் இடம்பெற்றுவரும் மோதல்களினால் மோசமான சூழ்நிலை காணப்படுவதினால் அமெரிக்கர்கள் சிறிலங்காவிற்கான பயணத்தைத் தவிர்த்துக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்நாட்டு இராஜாங்கத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் கடந்த ஜுன் மாதம் விடுத்த பயண எச்சரிக்கையை மீண்டும் நீடிப்பதாக சிறிலங்காவின் வடக்கில் இடம்பெற்றுவரும் போரினால் அச்சம் நிறைந்த பகுதியாகயுள்ளது. அத்துடன் கிழக்கு மாகாணத்துக்குச் செல்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் தெரிவித்துள்ளது.

வடமத்திய மகாணத்தின் ஏ-14 வீதியில் மதவாச்சியிலிருந்து ஹொரவ பொத்தான வரையிலான பகுதி, திருகோணமலை நகரம் மற்றும் ஏ-6 வீதி போன்றவற்றில் பயணிப்பதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் அமெரிக்க தனது பிரஜைகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சிறிலங்காவில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்த நிலையில் அங்கு தங்கியிருக்கும் அமெரிக்கர்கள் கொழும்பிலுள்ள தூதரகத்தில் பதிவுகளை மேற்கொள்ளுமாறும் அமெரிக்க இராஜங்கத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.
_________
Pathivu.com

** தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பல் எங்கே? சிறிலங்கா அரசாங்கம் அதிர்ச்சி!

முல்லைத்தீவை அண்டிய அனைத்துலக கடற்பரப்பில் கனரக ஆயுதங்களுடன் தரித்து நின்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பல் எங்கே? சிறிலங்கா அரசாங்கம் அதிர்ச்சியடைந்துள்ளதாக கொழும்பு வார ஏடு!

இது தொடர்பாக அந்த வார ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

ஆயுத விநியோக மையத்திற்கு சென்று அவர்கள் ஆயுதங்களையும் பார்வையிட்டனர். உக்ரேனிய படை அதிகாரி கொள்வனவுக்கான பரிந்துரைகளை மேற்கொண்டார்.

அந்த பட்டியலில் 122 மி.மீ, 130 மி.மீ, 152 மி.மீ பீரங்கிகள், மோட்டார்கள், கனரக இயந்திர துப்பாக்கிகளுக்கான வெடிபொருட்கள் மற்றும் சிறிய ஆயுதங்கள் என்பன இருந்தன. மேலும் 60 மற்றும் 70 குதிரைவலு கொண்ட வெளி இணைப்பு இயந்திரங்களையும் கொள்வனவு செய்திருந்தனர்.

முதலில் விடுதலைப் புலிகள் வானூர்தி ஒன்றை வாடகைக்கு அமர்த்தவே முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். அது கைகூடாததனால் அவர்கள் கப்பல் ஒன்றை வாடகைக்கு பெற்று கொண்டனர். அல்லது அது அவர்களின் சொந்த கப்பலாகக் கூட இருக்கலாம்.

உக்ரேனில் உள்ள ஆயுத விநியோக மையத்திற்கு செல்வதற்கு ஏற்றது போல கப்பல் மறுசீரமைக்கப்பட்டு ஆயுதங்கள் ஏற்றப்பட்டு அது சிறிலங்கா நோக்கி புறப்பட்டது.

கப்பல் முல்லைத்தீவுக்கு அண்மையான அனைத்துலக கடற்பரப்பை அடைந்து நங்கூரம் பாய்ச்சி நின்றதும் அதில் இருந்த பொருட்கள் 40 மீற்றர் நீளமான றோலர்களில் இறக்கப்பட்டன. இந்த சந்தர்ப்பத்தில் வெளிநாட்டு உளவு நிறுவனம் ஒன்று சிறிலங்காவுக்கு தகவல்களை வழங்கியிருந்தது.

விடுதலைப் புலிகள் சிறிய படகுகளிலும் பொருட்களை இறக்கியிருந்தனர். எனினும் கடற்படையினரின் புலனாய்வுத்துறையின் பலவீனம் காரணமாக விடுதலைப் புலிகளின் பிரதான கப்பலை கண்டறிய முடியவில்லை.

இந்த தகவலை படையினரின் உயர்மட்ட புலனாய்வு அதிகாரி ஒருவர்
அறிந்திருந்தும் கண்டுபிடிப்பதில் தவறவிடப்பட்டது பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
_________
Pathivu.com

<< நத்தார் தின நல் வாழ்த்துக்கள்.... >>

அனைத்து தமிழ் மக்களுக்கும் எனது நத்தார் தின நல் வாழ்த்துக்கள்.... தாயகத்தில் அல்லலுறும் எம் உறவுகளுக்கும் எனது சிறப்பான வாழ்த்துக்களும், இப்புனித நாளில் அவர்களுடைய துன்பங்களும் துயரங்களும் அகல நல் வளிபிறக்க வேண்டும்......




_________________________________________________________________

Wednesday 24 December 2008

** ஈரோடு நீதிமன்றில் தமிழின உணர்வாளர் சீமான் அவர்களின் பிணை மனு தள்ளுபடி!

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் திருநகர் காலனியில் நடந்த கூட்டத்தில் பேசியதாக, இயக்குநர் சீமான், பெரியார் திராவிடக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேசிய பொதுவுடமை கட்சி பொதுச் செயலாளர் மணியரசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ஈரோடு நீதிமன்றத்தில் 3 பேரும் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் 3 பேரையும் ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி வழக்கறிஞர் மோகன் ஈரோடு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு செய்தார்.

அதை விசாரித்த நீதிபதி அசோகன், 3 பேரின் ஜாமீன் கோரிக்கையையும் தள்ளுபடி செய்தார். இதையடுத்து இன்று தாக்கல் செய்யவுள்ளதாக வக்கீல் மோகன் தெரிவித்துள்ளார்.
_______________________

** நத்தார் தினத்தில் மாதா கோவில் மீது வான் தாக்குதல்

நத்தார் தினத்திற்கு மக்கள் தயாராகி வரும் நிலையில் சிறிலங்கா வான்படை இன்று மாதா ஆலயம் மீது தாக்குதல் நடத்தி அந்த ஆலயத்தை அழித்துள்ளது. பரந்தன் - முல்லைத்தீவு வீதியில் பரந்தன் சந்தியில் இருந்து 600 மீற்றர் தூரத்தில் உள்ள கோலி கோர்ஸ் கொன்வென்ற் - Holy Cross Convent ஆலயம் மீதே தாக்குதலை நடத்தியுள்ளது.


இந்தத் தாக்குதலுக்கு படையினர் பரசூட் மூலம் தாக்கும் கிளஸ்ரர் குண்டுகளை பயன்படுத்தியுள்ளனர். இதன்போது மாதா கோவில் முற்றாக சேதமடைந்ததுடன், மாதாவின் திருவுருவச் சிலையும் உடைந்து நொருங்கியுள்ளது.

இப்பகுதியில் கிளஸ்ர் ரக பரும் அழிவை ஏற்படுத்தக்கூடிய, சர்வதேசத்தில் தடை விதிக்கப்பட்ட குண்டுகளைப் பாவித்துள்ள போதும், படை நடவடிக்கை காரணமாக மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்துள்ளதால், உயிரழிப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன.

எனினும், வீடுகளும், பயன்தரும் மரங்களும் அழிந்து போயுள்ளதுடன், 50 வரையான மாடுகளும் மற்றும் விலங்குகளும் பலியாகியுள்ளன. அத்துடன், ஏராளமான மாடுகள் படுகாயங்களுடன் அப்பகுதியெங்கும் முனகிக்கொண்டு கிடப்பதாக எமது களச் செய்தியாளர் தெரிவிக்கின்றனர்.

___________
_____________ari attac for matha kovil by SLAF -

இதேவேளை, இன்று காலை முதல் குஞ்சுப் பரந்தனில் இருந்து முன்னேற முனையும் சிறிலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.
__________
Sankathi.com

** கிளிநொச்சியில் சிங்கள இராணுவம் பெரும் மரணப்பொறியில் சிக்கியுள்ளது! பா.நடேசன்

கிளிநொச்சியில் சிறிலங்கா இராணுவம் பெரும் மரணப்பொறி ஒன்றுக்குள் அகப்பட்டுக்கொண்டுள்ளது. அங்கு முன்னேறிவருகின்ற இராணுவத்திற்கு என்ன நடக்கிறது என்பது உங்களுக்குத்தெரியும். இவ்வாறு வருகின்ற படைகள் முற்றாக அழிக்கப்படும்பொழுதான் முழுத்தேசமும் விடுவிக்கப்படும். இவ்வாறு நேற்றுக் காலை தருமபுரத்தில் முன்னாள் மாணவர் அமைப்புப் பொறுப்பாளர் மேஜர் முரளி அவர்களின் 21 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் தமிழீழ அரசியல்துறைப்பொறுப்பாளர் பா.நடேசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அவர்மேலும் தெரிவிக்கையில், எங்களுடைய விடுதலைப்போராட்ட வரலாற்றில் மேஜர் முரளி ஆற்றிய பங்கு என்ன என்பது எல்லோரும் அறிந்தவிடயமாகும். அவர் லண்டனுக்குச் சென்று பின்பு அங்கிருந்து எமது இயக்கத்திற்கு வந்து இணைந்து மாணவர் அமைப்புப் பொறுப்பாளராக மட்டுமல்ல இயக்கத்திலுள்ள முக்கியமான செயற்பாடுகளிலும அவர் தன்னை அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்திவந்துள்ளார்.

அந்தக்காலத்தில் மேஜர் முரளி தேசியத்தலைவரிடமும் அரசியல் ஆலோசகர் பாலா அண்ணா அவர்களுடனும் மிக நெருக்கமாகப் பழகியவர். அதுமட்டுமல்ல அவர்களுடன் அரசியல் தொடர்பான விடயங்களை கலந்துரையாடுவதுடன் அதனை மக்கள் மத்தியில் கொண்டு சென்று மக்கள் எல்லோரையும் கவக்கூடிய வகையில் அரசியல் பணிகளையும் மேற்கொண்டார்.

முரளி உந்தப் பிரதேசத்திற்குச் சென்றாலும் மக்கள் எல்லோர் மனங்களையும் கவரக்கூடிய ஒருபோராளியாகச் செயற்பட்டார். அவருடைய தனித்துவமான பண்புதான் மாணவர் அமைப்பினைக் கட்டியெழுப்பி தற்பொழுத அவ்வமைப்பு மாணவர்கள் மத்தியிலான கல்வி, அரசியல் வேலைத்திட்டம், மாணவர்களை அரசியல்ரீதியாக அணிதிரட்டுதல் போன்ற செயற்பாடுகளைச் செய்கிறது என்றால் மேஜர் முரளியின் செயற்பாடுகளைச் செய்கிறது என்றால் மேஜர்முரளியின் ஆரம்பகால திட்டமிட்ட செயற்பாடுளே அதற்குக் காரணமாகும்.

அவருடைய தனிச்சிறப்பும் ஆற்றலும் எங்களுடைய தேசத்திற்கு பெரும் செல்வாக்கைப் பெற்றுத்தந்தது. தேசியத்தலைவரின் சிந்தனை, செயற்திறன், ஆளுமை என்பவற்றை முரளியின் ஊடாக மக்கள் கண்டறிந்து கொண்டனர். இவ்வாறான அவரது செயற்பாடுகளால்தான் மக்கள் தம்மை போராட்டத்துடன் அர்ப்பணித்து நிற்கிறார்கள். இதற்கு ஆரம்பகாலப் பொராளிகள், பொறுப்பாளர்கள் சிறப்பாகச் செயற்பட்டதுதான் முக்கிய காரணம். மாணவர் அமைப்பு என்பது ஒரு முக்கியமான கட்டமைப்பு.

மாணவர் சமூகத்தின் பங்களிப்பு இல்லாமல் சமூகமேம்பாடோ, சமூகப்புரட்சியோ அல்லது தேசிய விடுதலை இயக்கத்தையோ வளர்த்தெடுப்பது என்பது முடியாதது. தமிழீழ விடுதலைப்போராட்டத்தை உலகம் ஒருதேசிய விடுதலைப்Nபுhராட்டமாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றது. இதற்கு உண்மையில் தமிழீழத்தில் இருக்கின் றமாணவர் சமூகத்தின் பங்கு என்பதும் அளப்பரியது. ஏனென்றால் போராளிகளாக இணைகின்றவர்கள் இளம் வயதை உடையவர்களர்தான் ஆரம்பகாலத்தில் சிங்கள அரச பயங்கரவாதச் செயற்பாடுகள் தமிழ் இனத்தின் மாணவர் சமூகத்தை நோக்கியவையாகத்தான் இருந்தது.

எங்களுடைய மாணவர்களுடைய கல்வியைச் சீரழிப்பதும், பொருளாதார வாழ்வைச் சீர்குலைப்பதும் சமூகபொருளாதார அரசியல் வாழ்விலிருந்து மாணவர்களை அப்புறப்படுத்துவதும் கல்வி அறிவற்ற மாணவர்களை அப்புறப்படுவத்துவதும் கல்வி அறிவற்ற மாணவர் சமூகமாக அவர்களை உருவாக்குவதன்மூலமாகவும் சிறிலங்கா அரசு தனது பயங்கரவாதத்தை அரங்கேற்றிவந்துள்ளது. இதற்கெதிராகத்தான் எங்களுடைய விடுதலைப்போராட்டம் தோற்றம் கொண்டது. அந்தக் காலத்தில் பெரியளவு பாதிக்கப்பட்டது எங்களுடைய இளம் சமூகமே. எந்தவொரு இனமும் கல்வி அறிவு இல்லையென்றால் அந்த இனத்தின் மேம்பாடு தொடர்பாகவோ விடுதலை தொடர்பாகவோ சிந்திக்கமுடியாத நிலை தோன்றும்.
சிந்திக்கமுடியாத நிலையை உருவாக்குவதற்குத்தான் மாணவர்களின் வளர்ச்சிக்கு அத்திவாரமாக இருக்கின்ற கல்வி மீதும் சிங்கள அரச பயங்கரவாதம் கைவைத்தது. எங்களுடைய கல்விமீது பலவிதமான நெருக்குவாரங்களைக் கொண்டுவந்து எங்களது மாணவர் சமூகத்தைக் கல்வி அறிவற்ற சமூகமாகக் கொண்டுவரவேண்டும் என்பதில் சிங்களப் பேரினவாத அரசு திட்டமிட்டு செயற்பட்டுவந்தது.

இவ்வாறு தமிழ் சமூகத்தின் இளம் சந்ததிக்கு எவ்வளவுதான் நெருக்கடிகள் ஏற்பட்டாலும நாங்கள் மாணவர் அமைப்பு, கல்வியில் மட்டுமல்ல சமூகம் சார்ந்த பொது அறிவுகொண்ட அரசியல் மயப்படுத்தப்பட்ட மாணவர் சமூகமாக வளர்த்தெடுப்பதன் ஊடாகத்தான் தேசப்பற்றையம் வளர்த்தெடுக்கலாம். அந்தப்பணியைத்தான் இன்று மாணவர் அமைப்பு செய்கின்றது.

சமூக நலன்சார்ந்த, அரசியல் மயப்படுத்தப்பட், பரந்த கல்வி அறிவுள்ள மாணவர் சமூகத்தைக் கட்டியெழுப்பவேண்டும் என்பதற்காகத்தான் மாணவர் அமைப்பு தொடர்ந்தும் செயற்பட்டுவருகின்றது. இன்றைக்கு சிங்கள இராணுவம் எல்லாப்பக்கத்திலும் வந்து முற்றுகையிட்டு நிற்கின்றது. சிங்கள இராணுவம் மிகவும் பலவீனமடைந்து இயலாதநிலையில் தான் இருக்கின்றது.
கிளிநொச்சியில் அண்மைக்காலத்தில் நடக்கின்ற சண்டைகளை எடுத்துப்பார்த்தால் தெரியும். பெரிய இழப்புக்களை சிங்கள இராணுவம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றது. உண்மையில் நாங்கள் நூறு அல்லது நூற்றைம்பது இராணுவம் கொல்லப்பட்டுள்ளது என்று சொன்னாலும், சிங்கள ஊடகங்கள் அண்மையில் நடந்த சண்டையில் 400 இராணுவம் கொல்லப்பட்டும் 900 க்கும்மேற்பட்டோர் காயப்பட்டு களமுனைகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றன.

கடந்தகலாத்தில் சிங்கள இராணுவம் என்ன செய்தது. எங்களுடைய இளம் மாணவர்களைக் கொன்று குவிப்பதும் இளம் மாணவர்களின் சமூகப்பொருளாதார வாழ்வைச் சிதைப்பதிலுமாகத்தான் அதன் செயற்பாடு தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்தது. அதன் உச்சக்கட்டமாக அமைந்ததுதான் தற்போதைய பாரிய இராணுவ நடவடிக்கைகள். இந்த நடவடிக்கைகளும் பாரிய தோல்விகளை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது.

தற்பொழுது கிளிநொச்சியில் இராணுவம் பெரிய மரணப்பொறி ஒன்றுக்குள் அகப்பட்டுக்கொண்டுள்ளது. அங்கு முன்னேறி வருகின்ற இராணுவத்திற்கு என்ன நடக்கிறது என்று உங்களுக்கு தெரியும். இவ்வாறு வருகின்ற படைகள் முற்றாக அழிக்கப்படும் பொழுதுதான் முழுத்தேசமும் விடுவிக்கப்படும். இன்றைக்கு சிங்கள இராணுவத்தின் சண்டையிடுகின்ற படையணிகளான 53,55,57,58 போன்ற முன்னணிப்படையணிகள் அழிக்கப்பட்டுவருகின்றன.
இவற்றை இங்கே அழிப்பதுதான் இலகுவானது. இவர்களை நீண்ட தூரம் யாத்திரை சென்று அழிப்பதைவிட இந்த மண்ணிலே வைத்து முடிவுகட்டவேண்டும். இதில் நீங்கள் தெளிவா இருக்கவேண்டும். இந்தநேரத்தில் மாணவர் சமூகமான நீங்கள் அரசியல் ரீதியாக சிந்தித்துப் பார்க்கவேண்டும். எங்களைவிட் நீண்ட காலம்போராடிய தேசிய இனங்களிலும் மாணவர்களின் பங்கு என்ன என்பதை நீங்கள் அறிந்திருக்கவேண்டும்.

சமகாலத்திலே கல்வியோடு போராட்டக்கல்வியையும் கற்றுககொண்டு புரட்சிகரமான மாணவர் சமூகம் புரட்சிகரமான சமூகமாக வளர்ந்தால் இந்தத்தேசம் விடுதலைக்காகக் கொடுத்த விலையின் பயன்பாட்டை எல்லா மக்களுக்கும் தேசத்தின் விடுதலையை சமமாக அனுபவிக்கக்கூடிய சமூகக் கட்டமைப்பை உருவாக்கக்கூடிய ஒரு பணி உங்களால்தான் முடியும்.
மேஜர் முரளியின் இந்நிகழ்வில் நாங்கள் எல்லோரும் விடுதலைப்போராட்டம் தொடர்பான களநிலமைகளை வைத்துக்கொண்டு எல்லோரும் முற்றுமுழுதாகப் பங்களிப்போமானால் வெகுவிரைவில் விடுதலையை வென்றெடுக்கலாம். ஏனென்றால் களநிலமை எங்களுக்கு இன்று சாதகமாக மாறிக்கொண்டிருக்கின்றது.

சிங்கள அரசிற்கு எதிராக மனிதஉரிமைகள் தொடர்பாக ஏராளமான நாடுகள் குரல் கொடுக்க ஆரம்பிததுவிட்டன. எங்களுடைய குரலைக்கேட்பதற்கு உலகம் வந்துவிட்டது. தமிழகமக்கள்மட்டுமல்ல ஏனைய மக்கள்கூட எங்கள் நிலமையை விளங்கி குரல்கொடுக்கின்றார்கள். குறிப்பாக தமிழ் நாட்டில் மட்டுமல்ல வடஇந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்கள்கூட எங்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கின்றார்கள்.

இந்த நேரத்தில் குறிப்பாக இங்கே இருக்கின்ற மாணவர் சமூகம் முழுப்பலத்தோடு ஒரே சக்தியாக இயக்கத்தைப் பலப்படுத்தவேண்டும். நீங்கள் பல வழிகளில் பங்களிக்கலாம். களமுனைகளில் மட்டுமல்ல ஏனைய விடயங்களில் கூட பங்களிக்கலாம் மேஜர் முரளியின் ஞாபகார்த்த தினத்தில் மாணவர் சமூக நலன்சார்ந்த சமூக விடுதலை சார்ந்த பட்டறிவோடு இந்த விடுதலைப்போராட்டத்தின் பங்களிகளாக எல்லோரும் பங்களித்து விரைவாகத் தமிழீழத்தை வென்றெடுப்போம் இவ்வாறு அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்கள் தனதுரையில் குறிப்பிட்டுள்ளார்.
_________
Sankathi.com

** வலிந்த தாக்குதலைத் தொடங்குவதற்கு உரிய நேரத்துக்காகக் காத்திருக்கிறோம் - அரசியல்துறைப் பொறுப்பாளர்

ஒரு தேசத்தின் விடுதலைப் போராட்டம் என்பது ஒரு நகரத்தை மட்டும் மையமாகக் கொண்டது அல்ல. நிலப்பகுதிகளை இழப்பதும், மீளக் கைப்பற்றுவதும் பொதுவானது தான். எமது விடுதலைப் போராட்ட இலட்சியத்தை வென்றெடுக்கும் வரையில் தொடர்ந்து போர் நகரங்கள் உருவாக்கப்படும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்துள்ளார்.

'றொய்ட்டர்' செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: அமைதிப் பேச்சுக்களுக்கு முன்னர் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நிபந்தனையை நிராகரிக்கிறோம். தற்போதைய சூழ்நிலையில் அதாவது ஆயுதங்களை விடுதலைப் புலிகள் கைவிட்டு விட்டு சரணடைய வேண்டுமென்று கோரி வரும் நிலையில் பேச்சுவார்த்தைகள் என்பது சாத்தியம் அல்ல.

போரில் எமக்கு இழப்புக்கள் ஏற்பட்ட போதும் இலங்கையின் 32 பில்லியன் டொலர் பொருளாதாரத்தைச் சீர்குலைப்பதே எமது இலக்காகும். எமது தற்காப்புத் தாக்குதல் நடவடிக்கையின் ஒருபகுதி இலங்கையின் பொருளாதாரத்தை நிர்மூலப்படுத்துவதும் ஆகும். பொருளாதாரம் நிர்மூலமாக்கப்படும் போதுதான் தமிழ் மக்களுக்கு எதிரான அரசின் இனப்படுகொலையும் பலவீனப்படுத்தப்படும்.

கிளிநொச்சி போர்க்களத்தில் படையினருக்கு நாங்கள் பாடம் கற்பிப்போம். எமது வலிந்த தாக்குதல் நடவடிக்கையைத் தொடங்குவதற்கு உரிய நேரம், இடத்துக்காகக் காத்திருக்கிறோம். 2008ஆம் ஆண்டில் 2,250 போராளிகளை நாங்கள் இழந்திருக்கின்றோம்.

ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதில் எமக்கு எதுவித சிக்கலும் இல்லை. நாங்கள் இழந்த பகுதியை மீண்டும் கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது என்றார்.
_________
Sankathi.com

Tuesday 23 December 2008

** இப்போரில் நாங்கள் வெல்வது உறுதி : சிங்களப்படைக்கு எமது மண்ணிலேயே சமாதி கட்டுவோம்

"இந்தப் போரில் நாங்கள் வெல்லுவோம். சிங்களப்படைகளுக்கு எமது மண்ணிலேயே சமாதி கட்டப்படும்" இவ்வாறு மணலாறு கட்டளைப பணியக ஆளுகைப் பொறுப்பாளர் சிவதேவன் தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்து விசுவமடுவில் இயங்கும் முரளி முன்பள்ளி சிறார்கள், பெற்றோர்கள் சார்பாக ஆயிரம் உலர்உணவுப்பொதிகளை மணலாறுப் போராளிகளுக்கு வழங்கும் நிகழ்விலும், முன்பள்ளிக் கல்வியை முடித்துப் பாடசாலைக்குச் செல்லும் பிள்ளைகளை வழியனுப்பும் நிகழ்விலும் நேற்றுக்காலை கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

முன்பள்ளி வளாகத்தில் ஆசிரியர் எஸ்.பரஞ்சோதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மைச்சுடரினை தமிழர்புனர்வாழ்வுக்கழக துணைநிறைவேற்றுப்பணிப்பாளர் நரேன் ஏற்றிவைக்க, தேசியக்கொடியை பிரமந்தனாறு வட்டப்பொறுப்பாளர் விடுதலை ஏற்றினார்.

இந்நிகழ்வில் மணலாறு கட்டளைப்பணியக ஆளுகைப்பொறுப்பாளர் உட்பட பல போராளிகளும் கலந்துகொண்டனர். களமுனைப்போராளிகளுக்கு வழங்குவதற்கான ஆயிரம் உலருணவுப்பொதிகளை முன்பள்ளிச் சிறார்களிடம் இருந்து ஆளுகைப் பொறுப்பாளர் பெற்றுக்கொண்டார். அந்தப் பொதிகளில் உங்களுக்கு என்றும் பக்கபலமாக இருக்கும் முரளி முன்பள்ளி சிறார்கள் என எழுதப்பட்ட வாசகங்களும் இணைக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து ஆளுகைப் பொறுப்பாளர் உரையாற்றுகையில் இந்தக் குழந்தைகள் என்னைப் பார்த்து இந்த கொடிய போரை எங்களிடம் விட்டுவிடுவீர்களா? என்று கேட்பது போல் இருக்கிறது. எமது போராளிகள் மணலாற்றில் சேற்றிலும் சகதியிலும் வெள்ளத்திலும் நின்று பகைவனை எதிர்த்து அர்ப்பணிப்போடு போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்போரில் நாங்கள் வெல்வது உறுதி. சிங்களப்படைகளுக்கு எமது மண்ணிலேயே சமாதிகட்டப்படும் என்றார்.

களமுனைப்போராளிகளுக்கான வாழ்த்துரையை முன்பள்ளி மாணவி அருட்குமரன் ஆதித்தியா வாசித்துக் கையளித்தார். பாடசாலைக் கல்வியில் காலடிவைக்கப்போகும் சிறார்களுக்கு பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்பட்டதுடன் வாழ்த்துரைகளும் இடம்பெற்றன. கருத்துரைகளை விசுவமடுப்பிரதேச தமிழர்புனர்வாழ்வுக்கழக பணிப்பாளர் க.ஜெயசசிங்கம், கிளிநொச்சி வலய ஓய்வுபெற்ற உதவிக் கல்விப்பணிப்பாளர்களான சி.சிவநாதன், பொல் தில்லைநாதன் ஆகியோர் நிகழ்த்தினர். முன்பள்ளி ஆசிரியை நன்றியுரை வழங்கினார் இந்நிகழ்வில் பெருமளவிலான பெற்றோர்கள் முன்பள்ளி ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தனர்.
__________
Sankathi.com

** கொங்கிரசுக்கு எதிராக தமிழகத்தில் வலுப்பெறும் போராட்டங்கள்!

ஈழத் தமிழர்களுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வரும் கொங்கிரஸ் கட்சியின் பிரமுகர்களுக்கு எதிராக தமிழ்நாட்டில் போராட்டம் வலுவடைந்து வருகின்றது. கொங்கிரஸ் பிரமுகர்களின் உருவம் பொம்மைகளையும், உருவப்படங்களையும் எரித்து தமது எதிர்ப்புக்களை வெளியிட்டு வரும் நிலையில், தற்போது போராட்டங்களும் முனைப்புப் பெறத் தொடங்கியுள்ளன.


இந்நிலையில் இன்று சென்னையில் மக்கள் எழுச்சி இயக்கம் பேச்சுரிமைக்கும் எழுத்துரிமைக்கு எதிராக செயற்படும் தமிழக கொங்கிரஸ் கட்சியைக் கண்டித்தும், இந்திய அரசைக் கண்டித்தும் எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளது. இந்நிகழ்வில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.


விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்படுவதாகக் கூறிக்கொண்டு தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயற்படுபவர்களை அடக்கியொடுக்கும் நடவடிக்கையில் கொங்கிரஸ்கட்சியின் தமிழகக் கிளை தீவிரமாக ஈடுபட்டள்ளதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இவர்களது குற்றச்சாட்டின் பேரிலேயே பொது உடமைக் கட்சியின் தலைவர் பெ.மணியரசன், கொளத்தூர் மணி, இயக்குநர் சீமான் ஆகியோர் கைது செய்து சிறை வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
_________
Sankathi.com

** வன்னியில் இடம்பெயர்ந்தவாக்கு போதியளவு உணவுப் பொருள்கள் இல்லை மனித உரிமைகள் கண்காணிப்பகம்.

வன்னியில் விடுதலைப் புலிகளுக்கும், சிறிலங்கா படைகளுக்கும் இடையில் நடந்துவரும் மோதல்களினால் 200,000 அப்பாவிப் பொதுமக்கள் பெரும் உணவு உட்பட பல அவலத்தை எதிர் நோக்கிவருவதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்தள்ளது.

வன்னியில் கடந்த செப்டம்பர் மாதம் மோதல்கள் உக்கிரமடைந்ததையடுத்து மனிதநேயப் பணியாளர்கள் வன்னிக்குச் செல்ல அரசாங்கம் தடைவிதித்துள்ளதால் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள மக்களுக்கு போதியளவு உணவு, கூடாரங்கள் மற்றும் சுத்தமான நீர் இன்றி பாதிக்கப்பட்டிருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இடம்பெயர்ந்தவர்களில் 40 வீதமானவர்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களே அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. நவம்பர் மாதம் ஏற்பட்ட சூறாவளி மற்றும் மழை வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளபோதும், அவர்களுக்கு தற்காலிக கூடாரங்களைக் கூட எடுத்துச்செல்ல அரசாங்கம் அனுமதி வழங்கவில்லையென அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டுப்பாடற்ற பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து அரசாங்கக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குவந்திருக்கும் மக்கள் சிறைச்சாலையில் அடைத்துவைக்கப்பட்டிருப்பதைப் போல தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்தியப் பணிப்பாளர் பிரட் அடம்ஸ் கூறினார்.
_________
Pathivu.com