யாழ் கிளாலியில் சிறீலங்கா படையினர் மேற்கொண்ட முன்னகர்வு முயற்சி முறியடிக்கப்பட்டதில் 40 படையினர் பலியானதுடன், மேலும் 100க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.இது தொடர்பாக விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று அதிகாலை 2:00 மணிக்கு ஆரம்பித்த முன்னகர்வு முயற்சிக்கான தாக்குதல் காலை 9:30வரை நீடித்திருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
சிறீலங்கா படைகளின் 53வது டிவிசன் கொமாண்டோ படையணியின் எயார் மொபைல் பிரிகேட் கொமாண்டோ படையணியே முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்ட போதிலும், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஓர்மம் நிறைந்த தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாது பின்வாங்கியுள்ளது.
முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்ட படையினருக்கு பின்தள பீரங்கி, பல்குழல் சூட்டாதரவு வழங்கப்பட்டதுடன், ராங்கிகளும் முன்னேறும் படையினருடன் களமிறக்கப்பட்டிருந்தன.
முன்னகர்வு முறியடிப்பின்போது சிறீலங்கா படையினரது பெருமளவு ஆயுதங்களும், உடலங்களும் மீட்கப்பட்டிருப்பதாக, தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
_________
Pathivu.com








No comments:
Post a Comment