Thursday, 18 December 2008

** உயிரை வேலியாக வைத்து போராளிகள் போரிடுகின்றனர்

நிலங்களை விழுங்கிக்கொண்டு படைகள் நகரலாம். ஆனால் உயிரை வேலியாக வைத்து உங்கள் பிள்ளைகளான போராளிகள் போராடியிருக்கிறார்கள். போராடிக்கொண்டு வருகின்றார்கள்.இவ்வாறு, புதுக்குடியிருப்புக் கோட்டத்தில் இரணைப்பாலை வட்டத்தில் கடந்த 15ம் திகதி மாவீரர், போராளி குடும்பங்களுடனான சிறப்புக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போது புதுக்குடியிருப்புக் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் ச.இளம்பருதி தெரிவித்தார்.



அவர் தொடர்ந்து பேசும்போது, எத்தகைய இடர்கள் வந்தாலும் நம்பிக்கை இழக்காத மக்களால் நீங்கள் இருக்கவேண்டும். எதிரியின் படைக்கட்டமைப்புக்கள் உடைக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் எதிரிப்படைகள் எமது இலக்குகள் சிக்குண்டு அழியப்போகின்றார்கள். இதுதான் உண்மை. எமது மக்கள் தாக்குப்பிடித்துள்ளனர். அதனால் பெருமைக்குரிய மக்களாக எமது மக்களே இருக்கப்போகின்றார்களென அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வானது இரணைப்பாலை வட்ட அரசியல்துறைப்பொறுப்பாளர் து.செம்பருதி தலைமையில் இடம்பெற்றது.


இதில் கருத்துரையை புதுக்குடியிருப்பு கோட்ட தேசிய போரெழுச்சிக்குழு பொறுப்பாளர் திருமாறன் ஆற்றினார். இரணைப்பாலை வட்ட சிறப்புவேலைத்திட்டப் பொறுப்பாளர் நிலவனும் இதில் கலந்துகொண்டார்.
_________
Sankathi.com

No comments: