Sunday, 21 December 2008

** மன்மோகன், சோனியா கொடும்பாவி எரிப்பை ஆட்சேபித்து காங்கிரஸ் ஆதரவாளர் நடத்திய மறியல் போராட்டத்தில் - தங்கபாலு மற்றும் தலைவர்கள் பொலீஸாரால் கைது!

மன்மோகன், சோனியா, தங்கபாலு ஆகியோரது கொடும்பாவிகள் சென்னையில் எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத் தின் பல பகுதிகளிலும் காங்கிரஸார் வீதி மறியல் போராட்டங்களை நடத்தினர். அதன் போது தமிழக காங்கிரஸ் தலைவர் தங்க பாலு உட்பட நூறுக்கும் மேற்பட்ட காங் கிரஸார் கைது செய்யப்பட்டனர்.

விடுதலைப்புலிகளை ஆதரித்தும் இந் திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரைக் கொச்சப்படுத்தியும் பேசியதாக பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் டி.எஸ். மணி திரைப்பட இயக்குநர் சீமான் ஆகியோர் வெள்ளியன்று கைது செய்யப்பட்டனர்.

இதைக் கண்டித்து மன்மோகன், சோனியா தங்கபாலு ஆகியோரின் கொடும்பாவிகளை பெரியார் தி.க.வினர் சென்னை ராயப் பேட்டை மணிக்கூண்டு அருகே நேற்று எரித்தனர். அதனைக் கண்டித்து காங்கிர ஸார் அண்ணாசாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதனை அடுத்து காங்கிரஸாருக்கும் பெரியார் தி.க.வினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சுழல் உருவானது. இதனால் ராயப்பேட்டை, சுத்தியமூர்த்திபவன் மற்றும் அண்ணாசாலை பகுதிகளில் பொரிஸார் குவிக்கப்பட்டனர். மறியலில் ஈடுபட்ட காங்கிரஸாரை பொலிஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

வீதி மறியலின்போது திருமாவளவனைக் கைது செய்ய வலியுறுத்தி காங்கிரஸார் கோஷமிட்டதைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சத்தியமூர்த்திபவன் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திடீரென அவர்கள் சத்தியமூர்த்திபவன் அலுவலகத்தின் உள்ளே புகுந்து ரகளையில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கிரஸார் மீண்டும் வீதி மயிறலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

திருமாவளவனை கைது செய்யக் கோரி தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தலைமையில் தேனியில் காங்கிரஸார் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட தங்கபாலு, ஆருண் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸாரை பொலிஸார் கைது செய்தனர்.
_________
Uthayan.com

No comments: