இன்று வெள்ளிக்கிழமை 10:00 மணியளவில் சென்னைக்கு அருகில் உள்ள பொன்னேரி நகரின் புரட்சிகர இளைஞர் முன்னணி, புரட்சிகர தொழிலாளர் முன்னணி, ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகள் இணைந்து இக் கொடும்பாவிகளை எரியூட்டியுள்ளனர்.
1. தமிழர்களை இழிவுபடுத்திய சிங்கள இனவெறி அரசின் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, இராஜபக்சே பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.2. சிங்கள அரசின் இனவெறிப் போரை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.
3. தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும்.
4. விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீக்க வேண்டும்.
5. சிங்கள இனவெறி அரசுக்கு எவ்வித உதவியும் செய்யக் கூடாது.
6. சிங்கள அரசுடனான உறவைத் துண்டித்துக் கொள்ள வேண்டும்.
7. இந்தியாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தை இழுத்து மூட வேண்டும்.

ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தே பொன்னேரி நகரின் பழைய பேரூந்து நிருத்தத்தில் இருந்து மகிந்த ராஜபக்ச மற்றும் சரத் பொன்சேகா ஆகியோரின் உருவ பொம்மைகள் பாடைகட்டி புதிய பேரூந்து நிலையம் வரை ஊர்வலமாக எடுத்துவந்து எரிக்கப்பட்டது.
_________
Pathivu.com








No comments:
Post a Comment