இது தொடர்பாக அந்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தற்போது வன்னியில் படையினர் மேற்கொண்டு வரும் "வன்னி நடவடிக்கைக்கு" எதிராக விடுதலைப் புலிகள் மேற்கொண்டு வரும் அனைத்து சமர்க்களங்களினதும் ஒருங்கிணைப்புத் தளபதியாக கேணல் தீபன் நியமிக்கப்பட்டுள்ளார்.
2002 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் வடபோர் முனை தளபதியாக கேணல் தீபனும் சிறிலங்காவின் யாழ். மாவட்ட தளபதியாக மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகாவும் இருந்த போது முகமாலையில் பிடிக்கப்பட்ட படம். (அருகில் லெப். கேணல் அறிவு, தளபதி லோறன்ஸ் மற்றும் விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன்)
இதுவரை காலமும் வடபோர் முனையின் கட்டளைத் தளபதியாகக் கடமையாற்றிய கேணல் தீபன், தற்போது வன்னிப் பெரும் போர்க்களத்தின் முழுப் படை நடவடிக்கைகளுக்குமான கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டு, நேரடியாக விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நெறிப்படுத்தல்களையும், ஆலோசனைகளையும் பெறுவதுடன், போர் நடவடிக்கைகள் தொடர்பான நிலவரங்களை நேரடியாக அவருடன் பகிர்ந்து செயற்படுகின்றார்.
பெரும் மண் அணைகளை அமைத்து முன்நகரும் படையினரை வழி மறித்து தாக்கியழிக்கும் உத்திகளை உருவாக்கி, அவற்றில் மிகுந்த தேர்ச்சி பெற்றவராக அவர் விளங்குகின்றார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.___________
Puthinam.com








No comments:
Post a Comment