கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் பருவமழையினால் பல்வேறு இடங்களிலும் மீண்டும் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு வீதியின் மன்னாகண்டல், கெருடமடு ஆகிய பகுதிகளில் மழைநீர் வீயைக் குறுக்கறுத்துப்பாய்கின்றது. அத்துடன் புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியின் தேவிபுரம் மஞ்சள்பாலம், வள்ளிபுனம் காளிகோவில் ஆகிய இடங்களிலும் வெள்ளம் வீதியைக் குறுக்கறுத்துப்பாய்கின்றது.
இதனால் மக்கள் பெரும் சிரமத்தின் மத்தியிலே தமது பயணங்களை மேற்கொண்டனர். இவ்வாறு மழைநீர் பாயும் இடங்களில் மக்களுக்கான போக்குவரத்து உதவிகளைத் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினரும் தமிழீழ காவல்துறையினரும் மேற்கொண்டனர்.
_________
Sankathi.com
Subscribe to:
Post Comments (Atom)








No comments:
Post a Comment