Monday, 15 December 2008

** தமிழர்களின் கடல்ப்பிரதேசத்தை சிங்களப்படைகள் ஆள இடமளியோம் - வடமராட்சிக் கோட்டப் பொறுப்பாளர்!

தமிழர்களின் கடல்ப்பிரதேசத்தை சிங்களப்படைகள் ஆளஇடமளியோம். இவ்வாறு எமது தாயக நிலப்பரப்புக்களை ஆக்கிரமித்து வரும் எதிரிப்படைகளை மக்களின் துணையுடன் எமது பகுதிகளில் இருந்து விரட்டியடிப்போம் என கடற்புலிகளின் வடமராட்சிக் கோட்டப் பொறுப்பாளர் அண்ணாத்துரை தெரிவித்துள்ளார்.

இன்று ஆழியவளைப் பகுதியில் இடம்பெற்ற சமகால அரசியல்க் கருத்தூட்டல் நிகழ்விலேயே இவர் இவ்வாறு தெரிவித்தார். வடமராட்சி கோட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளர் மலரவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கடற்புலிகளின் மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் தமிழரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
__________
Sankathi.com

No comments: