தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு தினத்தை சிறப்பிக்கும் முகமாக தமிழீழ காவல்துறையினரும் மக்களும் இணைந்து நேற்று மக்கள் நலன்பேணும் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த வகையில் முல்லைத்தீவு காவல்துறைப் பணிமனைப் பொறுப்பாளர் ந.கிருஸ்ணகுமார் தலைமையில் முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் இடம்பெயர்ந்த மக்கள் தங்ககம் துப்பரவு செய்யப்பட்;டதுடன் மக்களின் பாவனைக்கு ஏற்ற வகையில் கிணறு ஒன்றும் சீரமைக்கப்பட்டது.
புதுக்குடியிருப்பு காவல்ப்பணிமனைப் பொறுப்பாளர் இராஐகோபால் தலைமையல் மந்துவில் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் இடம்பெயர்ந்த மக்கள் தங்ககத்தின் வளாகம் துப்பரவு செய்யப்பட்டது, உடையார்கட்டு காவல்பணிமனைப் பொறுப்பாளர் செ.ராஐh தலைமையில் காவல்த்துறை உறுப்பினர்களும் வைத்தியசாலைப் பணியாளர்களும் இணைந்து உடையார்கட்டு வைத்தியசாலை வளாகத்தை துப்பரவு செய்ததுடன் மழைநீர் தேங்கி இருந்த குழிகளையும், மண்போட்டுச் சீர் செய்தனர்.
விசுவமடு காவல்ப்பணிமனைப் பொறுப்பாளர் ஐ.சிவராசா தலைமையில் விசுவமடுப் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் வைத்தியசாலையின் முற்புற வீதி சீர்செய்யப்பட்டதுடன் நீர் வெளியேறும் வாய்க்காலும் அமைத்துக் கொடுக்கப்பட்டது.
தருமபுரம் காவல்ப்பணிமனைப் பொறுப்பாளர் ந.குணநாதன் தலைமையில் தருமபுரம் வைத்திய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பாதை அமைக்கும் பணிகள் இடம்பெற்றன. வட்டக்கச்சி காவல்பணிமனை துணைப்பொறுப்பாளர் பா.பிரபா தலைமையில் வட்டக்கச்சி வைத்தியசாலையின் வளாகம் துப்பரவு செய்யப்பட்டது. மருதங்கேணி காவல்பணிமனைப் பொறுப்பாளர் இ.திருக்குமரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பெருமழை காரணமாக சேதத்திற்குள்ளான மருதங்கேணிக்கும் புதுக்காட்டுக்கும் இடைப்பட்ட வீதி சீர்செய்யப்பட்டது.
காவல்த்துறையின் குற்றப் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர் தி.பகீரதன் தலைமையில் சுதந்திரபுரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் வீதியில் தேங்கி நின்ற மழைநீர்; வெட்டி விடப்பட்டு மக்களின் போக்குவரத்திற்கான இடையூறுகள் அகற்றப்பட்டு செப்பனிடப்பட்டது. பரந்தன் காவல்ப்பணிமனை துணைப்பொறுப்பாளர் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் புளியம்பொக்கணைச் சந்தியிலிருந்து கோவில் வரையான வீதி மக்கள் போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் சீர்செய்யப்பட்டது.
__________
Sankathi.com
Subscribe to:
Post Comments (Atom)








No comments:
Post a Comment