சிறிங்காவின் வடகிழக்கு பகுதியில் இடம்பெற்றுவரும் மோதல்களினால் மோசமான சூழ்நிலை காணப்படுவதினால் அமெரிக்கர்கள் சிறிலங்காவிற்கான பயணத்தைத் தவிர்த்துக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக அந்நாட்டு இராஜாங்கத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் கடந்த ஜுன் மாதம் விடுத்த பயண எச்சரிக்கையை மீண்டும் நீடிப்பதாக சிறிலங்காவின் வடக்கில் இடம்பெற்றுவரும் போரினால் அச்சம் நிறைந்த பகுதியாகயுள்ளது. அத்துடன் கிழக்கு மாகாணத்துக்குச் செல்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் தெரிவித்துள்ளது.
வடமத்திய மகாணத்தின் ஏ-14 வீதியில் மதவாச்சியிலிருந்து ஹொரவ பொத்தான வரையிலான பகுதி, திருகோணமலை நகரம் மற்றும் ஏ-6 வீதி போன்றவற்றில் பயணிப்பதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் அமெரிக்க தனது பிரஜைகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சிறிலங்காவில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்த நிலையில் அங்கு தங்கியிருக்கும் அமெரிக்கர்கள் கொழும்பிலுள்ள தூதரகத்தில் பதிவுகளை மேற்கொள்ளுமாறும் அமெரிக்க இராஜங்கத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.
_________
Pathivu.com








No comments:
Post a Comment