கடந்த 25 வருடங்களாக சமாதானம் வேண்டும் என அனைத்துலச சமூகத்திடம் விடுத்த மன்றாட்டங்களுக்கு எதுவித சமிக்ஞைகளும் ஏற்படவில்லை என மன்னார் மறை மாவட்ட ஆயர் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார். மன்னார் செபஸ்ரியான் தேவாலயத்தில் நேற்று நள்ளிரவு நடந்த திருப்பலி ஆராதனையின் பின்னர் ஆற்றிய உரையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.வன்னியில் சிறிய பிரதேசத்தினுள் 3 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் பெரும் துன்பங்களை எதிர்கொண்டுள்ளனர். அவர்கள் எறிகணைகள் மற்றும் வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன நத்தாரை முன்னிட்டு போர்நிறுத்தத்தைக் கடைப்பிடிக்குமாறு தான் உள்ளிட்ட 5 ஆயர்கள் இணைந்து விடுத்த வேண்டுகோளை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருப்பது தமக்குக் கவலையளிக்கின்றது.
வன்னியில் இடம்பெயர்ந்துள்ள 3 இலட்சம் மக்களில் 40 ஆயிரம் பேர் மன்னார் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து சென்றவர்கள். அவர்கள் தங்களை வாழவிடுமாறு அழுது புலம்புவதாக அவர் மேலும் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
_________
Pathivu.com








No comments:
Post a Comment