கடந்த 15ஆம் நாள் வவுனியாவிலுள்ள 57வது 59வது படைத் தலைமையகத்திற்கு மேற்கொள்ளப்பட்ட பயணத்தில் அமெரிக்கா, பிரித்தானியா, யப்பான், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸ், மாலைதீவு போன்ற நாடுகளின் தூதரகத்தைச் சேர்ந்த படைத்துறை அதிகாரிகள் உள்ளடங்கியிருந்தனர்.
இதன்போது விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல்கள் பற்றி தமது படை அதிகாரிகள் குறிப்பிட்ட நாடுகளின் படைத்துறை அதிகாரிகளுக்கு விளக்கம் அளித்திருப்பதாக, சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு இன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்போது விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல்கள் பற்றி தமது படை அதிகாரிகள் குறிப்பிட்ட நாடுகளின் படைத்துறை அதிகாரிகளுக்கு விளக்கம் அளித்திருப்பதாக, சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு இன்று தகவல் வெளியிட்டுள்ளது.

வன்னியில் இருந்து வவுனியாவிற்குச் சென்றுள்ள மக்களையும், தம்மிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களையும் இந்த படை அதிகாரிகள் சந்தித்திருப்பதாகவும் சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு கூறுகின்றது.
சிறீலங்கா படையினருக்கு பல்வேறு படைத்துறை உதவிகளை வழங்கிவரும் அனைத்துலக நாடுகள், தற்பொழுது களமுனைகளுக்கு நேரடியாகச் சென்று கள நிலவரங்களைக் கேட்டறியும் அளவிற்கு படைத்துறை ஊக்குவிப்பு வளர்ச்சியடைந்துள்ளது.
களமுனையில் சிறீலங்கா படையினருக்கு நேற்று பாரிய இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இவ்வாறான செய்தியை வெளியிடுவதன்மூலம் விடுதலைப் புலிகளையும், தமிழ் மக்களையும் உளவியல் தாக்கத்திற்கு உள்ளாக்கலாம் என சிறீலங்கா அரசும், படைத்துறையும் எண்ணுவதாகத் தெரிகின்றது.

வழமையாக உடனுக்குடன் செய்தி வெளியிடும் சிறீலங்கா அரசு, 15ஆம் நாள் இடம்பெற்ற இந்தப் பயணம் பற்றி செய்தியை வெளியிடாது தவிர்த்திருந்த போதிலும், அதனை வெளியிட வேண்டிய கட்டாயத்திற்கு களமுனை முடிவுகள் அவர்களைத் தள்ளியுள்ளன.
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களது இந்த ஆண்டிற்கான மாவீரர்நாள் கொள்கைப் பிரகடன உரையில், தமிழீழ விடுதலைப் புலிகள் சிறீலங்கா அரசுடன் மட்டுமன்றி, அனைத்துலகுடன் போர் புரிந்து வருவதாகக் கூறியிருந்தமை மீண்டும் நினைவூட்டத்தக்கது.
_________
Pathivu.com








No comments:
Post a Comment