விடுதலை புலிகள் நாடாத்திய அதிரடித் தாக்குதலினால் இரணைமடு பகுதியில் சிறிலங்கா படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட 2 கிலோ மீற்றர் முன்னரண் பகுதி மீட்க்கப்பட்டுள்ளதாக விடுதலை புலிகள் அறிவிப்பு.இன்று சனிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் விடுதலைப் புலிகளால் முறிகண்டியின் இரணைமடு பகுதியில் நடத்தப்பட்ட அதிரடித் தாக்குதலினால் சிறிலங்காப் படையினர் பலத்த இழப்புக்களுடன் பின்வாங்கி ஓடியுள்ளதாகவும் இரண்டு கிலோ மீற்றர் முன்னரண் பகுதியை புலிகள் மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சமரில் கொல்லப்பட்ட சிறிலங்கா படையினரின் 10 சடலங்களும் ஆயுததளபாடங்களும் மீட்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன் போது படையினருக்கு ஒத்துழைப்பாக வான்படையின் வானூர்திகள் செறிவான தாக்குதலை நடத்தின என விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 16ம் திகதி செவ்வாய்க்கிழமை சிறிலங்கா படையினரால் பிடிக்கப்பட்ட முன்னரணே விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
_________
Pathivu.com








No comments:
Post a Comment