வன்னிக்களமுனையில் சிறப்பான முறையில் படப்பிடிப்புக்களை மேற்கொண்ட களப்படப்பிடிப்பாளர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. நேற்று புதுக்குடியிருப்பில் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வு ஒளிக்கலைப்பிரிவுப் பொறுப்பாளர் செந்தோழன் தலைமையில் இடம்பெற்றது.வன்னிக் களமுனையில் சிறிலங்காப் படையினரோடு தீரமிகு தாக்குதலில் ஈடுபடும் தாக்குதல் அணிகளோடு படையினரின் தாக்குதல்களுக்கு மத்தியில் களத்தில் படப்பிடிப்புகளை மேற்கொண்டு வரலாற்றுப் பதிவுகளை ஒளிக்கலைப் பிரிவு போராளிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந் நிகழ்வில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்கள் கலந்துகொண்டு களப்படப்பிடிப்பாளர்களுக்கு பரிசில்கள் வழங்கி மதிப்பளித்தார். இந்நிகழ்வில் விடுதலைப் புலிகளின் துறைசார் பொறுப்பாளர்கள், போராளிகள் கலந்து சிறப்பித்தனர். இதில் இன்னரசன், வல்லவன் புரட்சிவேந்தன், ஒளிக்கதிர், வைகைவேந்தன், சத்துருக்கன், பழனி, அருந்தவம், இயலினி, தமிழ்நிலா, கனிமதி, சங்கவி, மதுவிழி, தேசப்பிரியா ஆகிய களப்படப்பிடிப்பாளர்கள் மதிப்பளிக்கப்பட்டனர்.
_________
Sankathi.com
Sankathi.com








No comments:
Post a Comment