நாட்டில் ஸ்திரத் தன்மையை ஏற்படுத்த சில உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகள் முயற்சிகளை மேற்கொள்வதாக சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.தேசிய சுதந்திர முன்னணியின் பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.விடுதலைப் புலிகளுக்கு எதிராக வடக்கில் முன்னெடுக்கப்படும் யுத்தத்தை நிறுத்தி உள் நாட்டில் அரசியல் ரீதியான ஸ்திரமற்ற நிலையை உருவாக்கப் பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகள் முயற்சிக்கின்றன.மது நிலைப்புக்காக விடுதலைப் புலிகளிடம் தங்கியிருக்கும் சில சக்திகள் அரசாங்கத்துக்குப் பிரச்சினைகளைத் தோற்றுவித்து நாட்டில் அரசியல் ரீதியான ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
_________
Pathivu.com








No comments:
Post a Comment