சிறிலங்கா வான்படையினர் நேற்று அதிகாலை முதல் மாலைவரை வன்னிப்பகுதியில் வட்டக்கச்சி, மாத்தளன், முள்ளிவாய்க்கால் மக்கள் குடியிருப்புக்கள் மீது நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியானார். சிறுவன் உட்பட எட்டுப்பேர் படுகாயமடைந்துள்ளனர்.
வட்டக்கச்சி கட்சன் வீதி ஒன்றைக் கைப்பிள்ளையார் கோவிலடியில் மக்கள் குடியிருப்புக்கள்மீது சிறிலங்கா வான்படை வானூர்திகள் நேற்று முற்பகல் குண்டுத்தாக்குதலை நடத்தின. இதில் துணுக்காயிலிருந்து இடம்பெயர்ந்துவந்த தங்கியிருந்த பசுபதி ஞானச்சந்திரன் (45) என்பவர் அவ்விடத்திலேயே கொல்லப்பட்டுள்ளார்.
கனகரத்தினம் தீபன் (20) சிவராஜா சஞ்சீவன் (08) ஆகியோர் படுகாயமடைந்தனர் முல்லைத்தீவு மாத்தளன் பகுதியில் சிறிலங்கா வான்படை குண்டுவீச்சு வானூர்திகள் நேற்றுக்காலை 5.00 மணிக்கும் 3.35 மணிக்கும் பாராவெளிச்சக் குண்டுகளை ஏவி தாக்குதலை நடாத்தின.
இதில் ஆனந்தபுரம் புதுக்குடியிருப்பைச்சேர்ந்த ஏழுபிள்ளைகளின் தந்தையான அழகராசா (55) அவரது சகோதரர் இரணைப்பாலை புதுக்குடியிருப்பைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான பனாண்டோ (35) ஆகியோர் காயமடைந்துள்ளனர். இரண்டு வாடிகள் இத்தாக்குதலில் எரிந்துள்ளன. ஆழிப்பேரலை நிர்மாண வீடுகள், படகுகள் இரண்டு சேதமடைந்தன.
இதேவேளை முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டவர்கள் குடியிருப்புக்கள் மீது நேற்றுக்காலையும் மாலையும் சிறிலங்கா வான்படை வானூர்திகள் குண்டுவீச்சுத்தாக்குதல்களை நடாத்தியுள்ளன. நேற்று மாலை 5.45 மணிக்கு நடாத்தப்பட்ட தாக்குதலில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நாகராசா என்பவரின் மீன்வாடி எரிந்தழிந்துள்ளது படுகாயமடைந்தவர்களில் ஒருவர் இராமச்சந்திரன் (78) என்பவர் எனத் தெரியவந்துள்ளது ஏனையோரின் பெயர் விபரங்கள் கிடைக்கப்பெறவில்லை.எறிகணை வீச்சில் முன்பள்ளி ஆசிரியை உட்பட இருவர் காயமடைந்தனர்.
சிறிலங்கா இராணுவத்தினர் வட்டக்கச்சி மக்கள் குடியிருப்புக்களை இலக்குவைத்து நேற்றுக்காலை முதல் எறிகணை வீச்சுக்களை மேற்கொண்டதில் இருவர் காயமடைந்ததுடன் கால்நடைகளும் இறந்துள்ளன.
வட்டக்கச்சி ஆறுமுகம் வீதி, சிவிக்சென்றர் பகுதிகளை நோக்கி மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதலில் வீதியால் சென்றுகொண்டிருந்த முன்பள்ள ஆசிரியையான முகுந்தன் புஸ்பகுமாரி (34) மற்றும் நடராசா சுரேஸ் (22) ஆகியோர் காயமடைந்து வட்டக்கச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
_________
Sankathi.com
Subscribe to:
Post Comments (Atom)








No comments:
Post a Comment