கொழும்பு புறநகரான வத்தளைப் பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் சிறீலங்காப் படை அதிகாரி உட்பட 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 10 படையினர் உட்பட 19 பேர் காயமடைந்துள்ளனர்.வத்தளை கேகித்த கோவில் வீதியில் உள்ள சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 நிமிடமளவில் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.கொல்லப்பட்ட படையினரில் ஆறு பேரும் ஊர்காவல் படையைச் சேர்ந்தவர்கள் எனவும் ஏனைய இருவரும் பொதுமக்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் 10 பேர் ஊர்காவல் படையைச் சேர்ந்தவர்கள் எனவும் ஏனைய 9 பேரும் பொதுமக்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.காயமடைந்தவர்கள் ராகம மற்றும் கொழும்பு தேசிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தென்னிலங்கையில் விடுதலைப் புலிகளின் தொடர்பான தகவல்கள் மற்றும் தாக்குதல்கள் குறித்த விடயங்களை அறிவதற்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு என சிவில் பாதுகாப்பு அமைப்பு சிறீலங்காப் படையினரால் உருவாக்கப்பட்டமை இங்கே குறிப்பிடத்தக்கது.
_________
Pathivu.com








No comments:
Post a Comment