Friday, 19 December 2008

** மக்கள் குடியிருப்பு மீது சிறிலங்கா வான்படை தாக்குதல் ஆறு சிறார்கள் உட்பட 11 பொதுமக்கள் காயம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் பகுதி மக்கள் குடியிருப்புக்கள் மீது சிநிலங்கா வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் ஆறு சிறுவர்கள் உட்பட 11 பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர்.


இன்று வெள்ளிக்கிழமை காலை 9:45 மணி தொடக்கம் நண்பகல் 12:00 வரை இரண்டு தடவை சிறிலங்கா வான்படையின் மிக்-27 ரக வானூர்திகள் கடல் தொழிலில் ஈடுபடும் பொதுமக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன.


இதில் ஆறு சிறுவர்கள் உட்பட 11 பேர் படுகாய மடைந்துள்ளனர். பல வீடுகள் சேதமடைந்துள்ளன. காயமடைந்தர்களின் விபரங்கள்

பி.கேசியா (வயது 13)

சா.சுபாசினி (வயது 20)

கேசவன் (வயது 16)

மருதன் (வயது 22)

சித்திரா (வயது 05)

சாவித்திரி (வயது 15)

தேவப்பிரியா (வயது 16)

குபேரன் (வயமு 09)

நாகமணி (வயது 45)

தேவராசா (வயது 50)

மருதநாயகம் (வயது 32)

ஆகியார் கடுகாயமடைந்து சிகிச்சைக்காக முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை மிகவும் தாழ்வாக பறந்து வானூர்திகள் நடத்திய தாக்குதலினால் முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதிகளில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர தேர்வு எழுதிய மாணவர்கள் அச்சத்தினால் பாடசாலை சீருடைகளுடன் வீதியில் அங்குமிங்குமாக ஓடினர்.
________
Pathivu.com

No comments: