கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்படும் பல்வேறு பாதுகாப்பு கெடுபிடிகளை கண்டித்தும், உண்ணாவிரதப் போரட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது காவல்துறை துப்பாக்கி பிரயோகம்.கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்படும் பல்வேறு பாதுகாப்பு கெடுபிடிகளை கண்டித்தும், தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், தமது சுதந்திரத்திர செயற்பாட்டைக் கட்டுப்படுத்துவதாகவும் தெரிவித்து பல்கலைகழக வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் இன்று வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு மாலை 4.00 மணியுடன் முடிவடையவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பிற்பகல் 2.00 மணியளவில் பல்கலைகழக வளாகத்திற்கு வந்த இராணுவத்தினர் மாணவர்களை வீடியோ எடுத்துள்ளனர். அந்த வேளையில் படையினருக்கும் மாணவர்களுக்கும் எற்பட்ட முறுகல் நிலையை அடுத்து கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மாணவர்களை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதில் மாணவன் ஒருவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாகவும் , சுமார் ஒரு மணித்தியாலயமாக பதற்றம் ஏற்பட்டதாகவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர். இதில் 1600க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாணவர்களின் கல்வி செயற்பாட்டிலும், இணைப்பாடவிதானத்திலும் பாதுகாப்பு என்ற போர்வையில் பல்வேறு கெடுபிடிகளை மேற்கொண்டுவருகின்றனர், விடுதி வசதியின்றி பல்கலைக்கழத்தை சூழவுள்ள பகுதியில் தங்கியிருக்கும் மாவணவர்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.நவம்பவர் மாதம் 11ம் திகதி பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டையடுத்து எவ்விதத்திலும் சம்பந்தப்படாத விவசாயப்பீட மூன்றாம்வருட மாணவன் சுப்பிரமணியம் சசிகரனை தொடாந்து மூன்று மாதங்களாக தடுத்து வைத்துள்ளதாகவும், இவரை விடுதலை செய்வதாக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.
இதேமாதம் 26ம் திகதி கல்லடியில் இடம்பெற்ற வெடிப்பில் அவ்வழியாக சென்ற இரண்டாம் வருட வர்த்தக முகாமைத்துவ மாணவன் உலகநாதன் சுரேஸ் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் பணம் வாங்கிவிட்டு குண்டுத்தாக்குதல் மேற்கொண்டதாக இவர் மீது பொலிஸார் வழக்கு தாக்குதல் ஒன்றையும் பதிவு செய்துள்ளனர். பாதுகாப்பு தரப்பினர் இவ்வாறு மாணவ சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்டும் வன்முறைகள் மாணவர்களின் கல்வியில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்
இந்த இரு மாணவர்களும் எவ்வித குற்றம் புரியாதவர்கள் எனவே இருவரும் விடுதலை செய்யப்படுவதுடன் இவ்வாறான அடக்கு முறைகளை பாதுகாப்பு தரப்பினர் மேற்கொள்வதை எதிர்காலத்தில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
எனவும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.போராட்டம் நடைபெறுவதற்கு முன்பாக அவ்விடத்திற்கு வந்த பொலிஸாரும், இராணுவத்தினரும் நீங்கள் கூடுதலாக கதைப்பதாகவும் உங்கள் அனைவரையும் சுடுவதாக மிரட்டியுள்ளனர். எனினும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பாக அனைத்து தரப்பினரிடம் அனுமதி பெற்றே இடம்பெறுவதாகவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
உலகநாதன் சுரேஸ் மட்டக்களப்பு "சிவானந்தியன் பட்டமுன் மாணவர் சங்கத்தின்" பொருளாளர் கருத்தரங்கு ஒன்றிக்காக சம்பவ தினத்திற்கு முந்தினம் பணம் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். அவரின் கையில் ரூபா 9 ஆயிரம் மட்டுமே இருந்தமை குறிப்பிடத்தக்து.
_________
Pathivu.com








No comments:
Post a Comment