விடுதலை புலிகள் மேற்கொண்டுவரும் கடும் எதிர்த்தாக்குதல்களினால் சிறீலங்கா படையினர் திட்டமிட்டவாறு வன்னியில் முன்னேறி வல்வளைப்பில் ஈடுபட முடியவில்லை என AFP தெரிவித்துள்ளது.கிளிநொச்சி நகரம் எட்டும் தூரத்தில் இருப்பதாகவும், ஒரு சில நாட்களுக்குள் அது கைப்பற்றப்பட்டுவிடும் எனவும் சிறீலங்கா படையினர் கடந்த வாரம் தெரிவித்த போதும் புதுமுறிப்பு, அறிவியல்நகர் நோக்கிய முன்னகர்வு முயற்சியில் ஏற்பட்ட இழப்பினால் இது சாத்தியமற்றதாகியுள்ளது.
இதனால் சிறீலங்கா படையினர் திட்டமிட்டவாறு கிளிநொச்சி, முல்லைத்தீவில் படையினரால் முன்னேற முடியாது திணறி வருவதாக, களமுனைத் தகவல்கள் கூறுகின்றன.
எனினும் தற்போது வவுனியா நெடுங்கேணி ஊடாக புதிய களமுனை ஒன்றைத் திறப்பதற்காக புதிய படையணி ஒன்றையும் படையினர் உருவாக்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. படையினரது முன்னேற்ற தாமதத்திற்கு தற்போதைய கனமழையும் காரணம் என அனைத்துலக செய்தி நிறுவனமான AFP கூறுகின்றது.
இதேவேளை இன்று திங்கட்கிழமை முல்லைத்தீவு அம்பகாமம் பகுதியை தாம் கைப்பற்றி இருப்பதாக, சிறீலங்கா படையினர் அறிவித்துள்ள போதிலும், விடுதலைப் புலிகள் இந்த அறிவித்தல் பற்றிய பதில் கருத்து எதனையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
_________
Pathivu.com








No comments:
Post a Comment