Sunday, 21 December 2008

** பொங்குதமிழ் நிகழ்விற்கு சிறிலங்காப்படையினர் தடை!

யாழ் பல்கலைக்கழகத்தில் பொங்குதமிழ் நிகழ்வுகள் நடத்தப்படக்கூடாதென்று சிறிலங்காப் படையினர் எச்சரித்துள்ளனர். யாழ் பல்கலைக்கழகத்தால் அடுத்தாண்டு சனவரியில் பொங்கு தமிழ் நிகழ்வு நடத்தமுடியாது.

அவ்வாறு நிகழ்வு நடந்தாலோ அல்லது சிறு நிகழ்வுகள் கூட இரகசியமாகக் கடைப்பிடிக்கப்பட்டாலோ அதற்கு பல்கலைக்கழக நிர்வாகமே பொறுப்புக் கூறவேண்டும் என்று பலாலி சிறிலங்காப் படைத் தலைமையகம் யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக 17.01.2001 இல் பொங்கு தமிழ் நிகழ்வு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
_________
Sankathi.com

No comments: