Sunday, 14 December 2008

** கடுங் குளிர், மழையின் மத்தியிலும் பிரான்சில் ஆயிரக் கணக்கான தமிழ் மக்கள் ஒன்று கூடல்!

தமிழர் தாயகப்பகுதியில் சிறிலங்கா அரசு தொடர்ந்தும் இனஅழிப்பை முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில் பிரான்சில் வாழும் ஈழத்தமிழர்களின் எழுச்சிக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும் தொடர்ந்தும் அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. ஆனால் இம்முறை பிரெஞ்சுக் காவல்துறையால் தமிழ் மக்களின் எழுச்சிப் பேரணிக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பிரான்சின் புகழ்பெற்ற பகுதியான ஈபிள் கோபுரம் முன்பாக நேற்று சனிக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் ஆரம்பமான இப்பேரணி ஆயிரக்கணக்கான மக்களின் உணர்வெழுச்சியுடன் உலகின் கண்களை ஈர்ப்பதாக அமைந்தது.


பிரெஞ்சுத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவால் ஒழுங்கு செய்யப்பட்ட இப்பேரணியில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கடுங்குளிரையும் இடையிடையே வேகமெடுத்துப்பெய்த மழையையும் பொருட்படுத்தாது உணர்வுடன் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
_________
sankathi.com

No comments: