யாழ், ஐ.சி.ஆர்.சி தொண்டு நிறுவன அலுவலகத்தில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் இனம் தெரியாத ஆயுததாரிகளினால் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் சுட்டுக் கொலை.இன்று செவ்வாக்கிழமை காலை 7.10 மணியளவில் ஐ.சி.ஆர்.சி அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த வேளையில் யூஎன்எச்ஆர் நிறுவனத்திற்கு முன்பாக வைத்து இவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் கரவெட்டி வடமராட்சி பகுதியைச் சேர்ந்த 45 அகவையுடைய சுந்தரலிங்கம் ஞானகதரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொல்லப்பட்டவரின் சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் காவல்துறையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
_________
Pathivu.com








No comments:
Post a Comment