சிறிலங்கா வான்படையின் விமானங்கள் பரந்தன், மற்றும் முருகாணந்த பாடசாலைக்கு அருகாமையில் பொதுமக்கள் குடியிருப்புகள் மீது நடாத்திய வான் தாக்குதலில் ஒரு பெண் கொல்லப்பட்டு 12 பேர் காயமடைந்துள்ளனர்.இன்று புதன்கிழமை காலை 8.00 மணியளவில் இடம்பெற்ற தாக்குதலில் தாக்குதலில் நிர்மலன் 15, எஸ். ராகுலன் 21, செல்வராசா குலேந்திரன் 33, ஜெயசூரி 38, சோமசுந்தரம் சந்திரகுமார் 43,அன்னக்கொடி சந்திரமேரி 43, வெள்ளைச்சாமி அன்னக்கொடி 49, எஸ். பாலசுந்தரம் 51, வயதுடைய சுப்ரமணியம் 52, சந்தரபோஸ் 52, றஞ்சிதமலர் 58, சரவணபவானந்தன் 62 ஆகியோர் காயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர் ஆசிர்வாதம், மரியம்மா, சிவானந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றன.
இதேவேளை தர்மபுரம் வைத்தியசாலையில் இரத்தத்திற்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியசாலை நிருவாகம் தெரிவித்துள்ளது.
_________
Pathivu.com








No comments:
Post a Comment