Tuesday, 23 December 2008

** கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை தாக்கியழிக்க விடுதலை புலிகள் திட்டம்!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் தாக்குதல் விமானங்கள் மீது தாக்குதல் நடத்தும் புலிகளின் திட்டம் குறித்த தகவல்கள் வெளியாகியிருப்பதாக சிறிலாங்கா புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை ஒரே நேரத்தில் தரை மற்றும் வான் வழியாக சென்று தாக்குதல் விமானங்கள் மீது தாக்குதல் நடத்தும் புலிகளின் திட்டம் தொடர்பான தகவல்கள் வெளியாகியிருப்பதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப்புலிகள் தமது இரண்டு விமானங்களில் விமான நிலையத்தை தாக்கி, படையினரின் கவனத்தை அதன் பால் ஈர்த்த பின்னர், விமான நிலையத்திற்குள் புகுந்து பாரிய அழிவுகளை ஏற்படுத்த புலிகள் திட்டமிட்டிருந்தனர் எனவும் அனுராதபுர விமான தளத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை ஒத்ததாக இந்த தாக்குதல் திட்டமிடப்பட்டிருந்தது எனவும் பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

அண்மையில் நீர்கொழும்பு மற்றும் வவுனியா பகுதியில் விடுதலை புலிகள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இருவரிடம் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து இத்தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, இத்தாக்குதலுக்கு 20 விடுதலை புலிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் புலனாய்வுப்பிரிவினர் தெரிவிக்கி்ன்றனர்.
_________
Pathivu.com

No comments: