
நண்பகல் 12 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை நடைபெற்ற அமைதிப்போராட்டத்தில் தமிழ் இளையோர் அமைப்பினரால் துண்டுபிரசுரம் மற்றும் மனித உரிமை சார்ந்த விவரணப்படம் அடங்கிய காணொளி ஆகியவற்றை அந்த வழியால் சென்ற மக்களுக்கு கொடுக்கப்பட்டது. நண்பகல் 3 மணியவில் இளையோர் அமைப்பின் உறுப்பினர்களால் UNICEF இன் இலண்டன் பிராந்திய துணை பொறுப்பாளிரிடம் கோரிக்கை மனு மற்றும் "சிறிலங்காவில் வாழும் தமிழ் சிறுவர்களுக்கு மனிதநேய உதவி UNICEF செல், பார், நடைமுறைப்படுத்து" என்று கோரிக்கை அடங்கிய பதாகையில் இளையோர் அமைப்பு உறுப்பினர்களால் கையொப்பமிடப்பட்டு கையளிக்கப்பட்டது.
இதில் முக்கியமாக தற்போது தாயகத்தில் நடக்கும் சம்பவங்களையும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் வடகிழக்கு மாவட்டங்களை விட்டு வெளியேறியதால் அங்கு மக்கள் படும் அவலத்தையும் பற்றி குறிப்பிடப்பட்டு மூன்று கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டது. அவை:1. போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் சிறுவர்களுக்கு அடிப்படை தேவையினை வழங்குதல்.
2. சிறிலங்காவில் நடக்கும் சிறுவர் மீதான வன்முறையினை உலகிற்கு ஊடகங்கள் ஊடாக தெரியப்படுத்துதல்.
3. சிறுவர்கள் மீதான மனித உரிமை மீறல்களை நிறத்தக்கோரி சிறிலங்கா அரசை வலியுறுத்துதல்.
ஆகிய கோரிக்கைகள் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டு இருந்தது.
_________
Pathivu.com








No comments:
Post a Comment