வன்னியில் விடுதலைப் புலிகளுக்கும், சிறிலங்கா படைகளுக்கும் இடையில் நடந்துவரும் மோதல்களினால் 200,000 அப்பாவிப் பொதுமக்கள் பெரும் உணவு உட்பட பல அவலத்தை எதிர் நோக்கிவருவதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்தள்ளது.வன்னியில் கடந்த செப்டம்பர் மாதம் மோதல்கள் உக்கிரமடைந்ததையடுத்து மனிதநேயப் பணியாளர்கள் வன்னிக்குச் செல்ல அரசாங்கம் தடைவிதித்துள்ளதால் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள மக்களுக்கு போதியளவு உணவு, கூடாரங்கள் மற்றும் சுத்தமான நீர் இன்றி பாதிக்கப்பட்டிருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இடம்பெயர்ந்தவர்களில் 40 வீதமானவர்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களே அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. நவம்பர் மாதம் ஏற்பட்ட சூறாவளி மற்றும் மழை வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளபோதும், அவர்களுக்கு தற்காலிக கூடாரங்களைக் கூட எடுத்துச்செல்ல அரசாங்கம் அனுமதி வழங்கவில்லையென அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்டுப்பாடற்ற பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து அரசாங்கக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குவந்திருக்கும் மக்கள் சிறைச்சாலையில் அடைத்துவைக்கப்பட்டிருப்பதைப் போல தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்தியப் பணிப்பாளர் பிரட் அடம்ஸ் கூறினார்.
_________
Pathivu.com








No comments:
Post a Comment