Sunday 30 November 2008

** வன்னி வெள்ள அகதிகளுக்கு உதவ மனிதநேய அமைப்புகளை அனுமதிக்க வேண்டும்-மனித உரிமைகள் கண்காணிப்பகம்

நிஷா சுறாவளி ஏற்படுத்திய பெருவெள்ளத்தினால் வன்னியில் இடம்பெயர்ந்து அவலப்படும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வேண்டிய அவசர, அவசிய சேவைகளை வழங்குவதற்கு வசதியாக, வன்னிக்குள் செல்வதற்கு மனிதநேய அமைப்புகளுக்குக் கடந்த செப்ரெம்பரில் விதித்த தடையை இலங்கை அரசு உடனடியாக நீக்கவேண்டும் என நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) கோரியிருக்கின்றது.

ஐ.நா. மற்றும் ஏனைய குழுவினர் மீதான தடையை இலங்கை அரசு இப்போதே நீக்கவேண்டும் என்ற தலைப்பில் அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையிலேயே இப்படிக் கோரப்பட்டிருக்கின்றது.
_____________

** சரத் பொன்சேகாவின் பதவிக்காலமும் யுத்தமும்

எழுதியவர் - ஜெயராஜ்
சிறிலங்காவின் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத்பொன்சேகா அதிகம் பெருமைப்பட்டுக் கொள்வதாகவே தெரிகின்றது. கஜபாகு ரெஜிமண்டின் 25ம் ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர், இதில் தன்னைப் பெருமைப்படுத்திக்கொள்ளும் வகையில் இரு விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

01. விடுதலைப் புலிகள் 80 வீதம் தோற்கடிக்கப்பட்டுவிட்டனர்.


02. எனது பதவிக்காலத்திற்குள் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்துவிடுவேன்.

இவற்றைத் தவிர வேறுசில விடயங்களையும் பேசியுள்ள அவர், விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க- அதாவது போரில் வெற்றிபெற நான் அவசியம், என்னைவிட்டால் வேறு யாராலும் முடியாது என்ற தொனியிலும் பேசியுள்ளார். முதலில், விடுதலைப் புலிகளை 80 வீதம் தோற்கடித்துவிட்டதான விடயத்திற்கு வருவோம். இதுவரையில், 12,000 புலிகளை அதாவது வடக்குக் களமுனையில் கொன்றதன் மூலம் இது நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது சரத் பொன்சேகாவின் வாதமாகும். அத்தோடு வன்னிப் பெருநிலப்பரப்பின் மேற்குப் பகுதியின் பெரும் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருப்ப தானது அவரது இப்பேச்சிற்கு அடிப்படையும் உள்ளது.

இதில் 12,000 விடுதலைப் புலிகளைக் கொன்றதென்ற சரத் பொன்சேகா தெரிவிக்கும் கணக்கைச் சமன் செய்வதென்பது மிகவும் கடினமானதொன்றாகும். ஏனெனில் 2007 இன் ஆரம்பத்தில் வடக்கில் அதாவது வன்னிப் பெருநிலப்பரப்பில் இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டபோது, ஆறாயிரம் விடுதலைப் புலிகளே உள்ளதாகவும், அதில் 4000 பேர் வரையிலேயே போரிடும் வலு உள்ளவர்கள் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.

தற்பொழுது, 12,000 விடுதலைப் புலிகளைக் கொன்றுவிட்டதாகவும், இன்னமும் 4000 வரையில் புலிகள் இருப்பதாகவும் அவர் கூறும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் இவரது புள்ளிவிபரத்தைச் சமன்பாடு செய்ய அவராலேயே முடியும். இது ஒருபுறம் இருக்க, 80 சதவீதமான விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுவிட்டனர். அன்றி 80 சதவீதம் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டனர் எனின், கிளிநொச்சி போன்ற இடங்களை ஆக்கிரமித்து கொள்வதற்குச் சிறிலங்காப் படைத்தரப்பிற்கு ஏற்படும் காலதாமதம் ஏன்?

சிறிலங்கா இராணுவத் தளபதி சரத்பொன் சேகா, வெற்றிபெறாத யுத்தத்தில் வெற்றி பெற்றுவிட்டதாகவும், தம்மால் தான் அது சாத்தியமானது எனவும் பேசிக்கொள்ளலாம். ஆனால், சரத்பொன்சேகா யுத்தத்தில் வெற்றி பெற்றுவிட்டாரா? பெறுவாரா? என்பதெல்லாம் ஒருபுறம் இருக்க, சரத்பொன்சேகாவிற்கு யுத்தத்திற்கென சிறிலங்கா அரசால் வழங்கப் பட்ட ஒத்துழைப்புப் போன்று வேறு யாருக்கும் இது வரை வழங்கப்பட்டதுண்டா? அன்றி இனி வழங்கப்படத்தான் முடியுமா? என்ற கேள்விக்குப் பதில் தேடுதல் என்பது முக்கியமானது. முதலில், சிறிலங்காவின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள மகிந்த ராஜபக்ச இது வரையில் சிறிலங்காவில் ஆட்சி அதிகாரத் திற்கு வந்தவர்களில் தீவிர இனவாதியாகும். மேலும் குறிப்பிட்டுக் கூறுவதானால், தீவிர இன வாத அரசாங்கம் ஒன்று ஆட்சி அதிகாரத்தில் உள்ளது.

இவ் இனவாத அரசாங்கம் யுத்தத்தில் வெற்றிபெறுவதற்காக அதாவது தமிழர்களைத் தோற்கடிப்பதற்கும் அழிப்பதற்கும் நாட்டின் அனைத்து வளங்களையும், அதிகாரங்களையும் ஆயுதப் படைத்தரப்பிற்கு தாரை வார்க்கத் தயாராகவுள்ளது. இதனை அதிகரித்துச் செல் லும் இராணுவச் செலவீடுகளே வெளிப்படுத்தப் போதுமானதாகும். அத்தோடு, இராணுவத் தளபதி தனது விருப் பத்திற்கு ஏற்ப படையணிகளை உருவாக்கவும், பதவி உயர்வுகளையும் நியமனங்களையும் வழங்குவதற்கான ஒத்துழைப்பும் அரசினால் வழங்கப்பட்டு வருகிறது. எடுத்துக்காட்டாகக் கூறுவதானால் 2007 இன் ஆரம்பத்தில் அதாவது மார்ச்சில் 57ஆவது டிவிசன் படையணியை உருவாக்கி வன்னியின் மேற்கில் களமுனை யைத் திறந்த சரத்பொன்சேகா 2007 டிசம்பரில் 58வது டிவிசன் படையணியை உருவாக்கிக் களத்தில் இறக்கினார்.

இதனையடுத்து 59, 61, 62வது எனப் படையணிகளை உருவாக்கிக் கொண்டிருக்கும் சரத்பொன்சேகா, யுத்தச் செலவீனத்தையும், ஆளணியினையும் தனது விருப்பிற்கும் தேவைக்கும் என்ற வகையில் அதிகரிக்கவும் பயன்படுத்தவும் வாய்ப்புப் பெற்றவராக உள்ளார். இது ஒருபுறம் இருக்க சிறிலங்கா அரசிற்கு ஆயுத தளவாடங்கள், பயிற்சிகள், உளவுத்தகவல்கள் என் பனவற்றுடன் தேவைப்படின் படைநடவடிக்கைக்கு ஒத்துழைக்கவும் பல நாடுகள் முண்டியடித்த வண்ணமுள்ளன. பிராந்திய மற்றும், பூகோள நலன்பாற்பட்டதாக இந்நாடுகளின் செயற்பாடுகள் இருப்பினும், சிறிலங்கா இராணுவத்திற்கு போதிய ஒத்துழைப்பு ஏன் தேவைக்கதிகமான ஒத்துழைப்புக்கூடக் கிடைக்கப்பெற்றது என்று கூடக் கூறலாம். இந்த வகையில் பார்க்கையில், சரத்பொன் சேகாவிற்குச் சிறிலங்காத் தரப்பிலிருந்து இதுவரையில் கிடைக்கப்பெறாத ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்கப்பெற்றது என்பதே நிதர்சனமாகும். இந்நிலையில் சரத்பொன்சேகா யுத்தத்தை எந்தவிதத் தடங்கலுமின்றி நடத்திச் செல்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

இவ்வாறு வழங்கப்பட்ட வாய்ப்பின் உச்சமே, யுத்தம் குறித்து ஊடகங்களின் வாய்கள் அடைக்கப்பட்டமையும், களமுனையில் ஏற்படும் இழப்புக்களை வெளியிடுவதில்லை என்ற அரசாங்கத்தின் தீர்மானமுமாகும். இதன் மூலம், சரத் பொன்சேகாவிற்கு என்ன விலை கொடுத்தும் யுத்தத்தை நடத்தலாம் என்ற வாய்ப்பு வழங்கப்பட்டது. இது இராணுவ ஆட்சி நடைபெறும் நாட்டிலுள்ள தலைவர் ஒருவர் பெற்றுக்கொள்ளும் அதிகாரத்திற்கு ஒப்பானதொன்றாகும்.

இத்தகையதொரு நிலையில், இராணுவத் தளபதி சரத்பொன்சேகா யுத்தத்தில் விடுதலைப் புலிகளின் இழப்புக்கள் என ஒரு பெரும் எண்ணிக்கையைக் கூறிக்கொண்டு பெரும் சாதனை புரிந்துவிட்டதாகப் பெருமைப்பட்டுக் கொள்வதில் என்ன இருக்கின்றது. அவர் கூறுவது போன்று விடுதலைப் புலிகள் இழப்புக்களைச் சந்தித்துள்ளார்களா? அன்றி இராணுவம் தான் இழப்புக்கள் இன்றி சண்டைகளில் நொந்துபோகாமல் சிதைவுறாமல் போரிட்டு வருகின்றதா? அவ்வாறானால், சரத் பொன்சேகா மீண்டும், மீண்டும் புதிய புதிய படையணிகளை உருவாக்க வேண்டியதான தேவை ஏன் வந்தது? கிளிநொச்சியை இதுவரை ஆக்கிரமிக்க முடியாமல் போவது ஏன்? 80 வீதம் தோற்கடிக்கப்பட்ட புலிகளை விரட்டியடிக்க அன்றிக் கொன்றொழிக்க காலதாமதம் ஏன்?

இதனால் யுத்தத்தில் சரத் பொன்சேகா சாதித்தது எதுவாக இருப்பினும், அவரின் சாத னையாகச் சில விடயங்கள் எஞ்சியிருக்கும் என்றே கொள்ளமுடியும். இதில், முதலாவதாக இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட நீண்ட இரா ணுவ நடவடிக்கை ஒன்றைப் பெயர் குறிப்பிடாது நடத்தியதோடு, இலக்குக் குறிப்பிடாமலும் நடத்தி முடிவில் ஆக்கிரமித்த பகுதிக்கான நடவடிக்கை எனக் கூறி வெற்றிப் பெருமிதம் கொள்ளுதல். இரண்டாவதாகக் குறுகிய காலப்பகுதிக்குள் அதாவது, இரண்டு வருட காலத்திற்குள் ஐந்து படையணிகளை ‘டிவிசன்களை' உருவாக்கி களமிறக்கியமையும் அவரது இச்சாதனைப் பட்டியலில் சேரக்கூடும்.

சரத்பொன்சேகா கூறும் இரண்டாவது விட யத்திற்கு வருவோம். இது எனது பதவிக் காலத்திற்குள் விடுதலைப் புலிகளைத் தோற் கடித்து விடுவேன் என்பதாகும். இதில் முதல் எழும் கேள்வியானது எந்தப் பதவிக்காலத்திற்குள் என்பது. அதாவது, இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் தற்போதைய பதவிக் காலம் முடியவடையும் இவ்வருடம் டிசம்பர் 17ம் திகதிக்குள்ளா? அன்றி சனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் வழங்கப்படும் ஓராண்டுப் பதவி நீடிப்புக்குள்ளா? அன்றி கால எல்லை எண்ணி நீடிக்கக்கூடிய பதவிக் காலத்திற்குள்ளா? அதாவது சிறிலங்கா இராணுவத் தலைமைப்பதவி தனக்கு ஆயுட்காலப் பதவியாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலா?
ஏனெனில், இப்பதவிக்காலத்திற்குள் எனின், இன்னமும் ஒருமாத காலத்திற்குள் புலிகள் தோற்கடிக்கப்பட வேண்டும். அவ்வாறு சரத்பொன்சேகா எண்ணியிருக்கமாட்டார். ஓராண்டு பதவி நீடிப்பிற்குள் எனில் அதுவும் போதுமானதாக இருக்காது. சிலவேளை, வருடங்கள் இருபது வரையில் புலிகளின் போராட்டம் நீடிக்கவே செய்யும் எனச் சரத் பொன்சேகா தெரிவித்த கருத்திற்கமைவாக 20 வருடகால பதவி நீடிப்பு வழங்கப்படின், அதாவது ஆயுட்காலப் பதவி நீடிப்பில் இது சாத்தியமாகக் கூடுமா?

ஆனால், இராணுவத் தளபதி சரத்பொன் சேகாவிற்கு இவை புரியாதவையல்ல. புரியாது இருந்திருப்பினும் வன்னிக் களமுனையின் தற்போதைய நிலைமை - அதாவது சிறிலங்கா இராணுவம் சந்தித்துவரும் நாளாந்த இழப்புக்கள், கிழக்கில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் அதிகரிப்பு என்பன அவருக்குப் புரியவைத்திருக்கும். இந்த நிலையில் சரத் பொன்சேகாவின் புலிகள் எண்பது வீதம் தோற்கடிக்கப்பட்டு விட்டனர். பதவிக் காலத்திற்குள் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவேன் என்பதெல்லாம் தனது பதவிக் காலத்தை நீடிப்பதற்கான அரசிடமான வலியுறுத்தலாகவே கொள்ள வேண்டியதொன்றாகவுள்ளது.

அதாவது விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்கத் தன்னைவிட்டால் வேறு தளபதிகள் இல்லை என்ற தொனியில் - தன்னால் செய்ததாகக் கூறப்படும் சாதனைகளின் அடிப்படையில் தனது பதவிக் காலத்தை நீடித்துச் செல்வதற்கான பிரகடனங்களாகவே சரத்பொன்சேகாவின் அறிப்புக்கள் நோக்கப்படத்தக்கவையாக இருத்தல் வேண்டும். இதற்கு அப்பால், யுத்தம் குறித்த சரியான மதிப்பீடுகள் அதாவது யுத்தத்தில் சிறிலங்காப் படைத்தரப்பின் இழப்புக்கள் யுத்தத்தில் செலவிடப்படும் வளங்கள், யுத்தத்தினால் சிறிலங்கா குறிப்பாகச் சிங்கள மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் என்பன மதிப்பீடு செய்யப்படுமானால் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவின் இராணுவ வெற்றிகள் குறித்துக் கேள்விகள் எழுவது தவிர்க்கப்பட முடியாததாகிவிடும்.

எடுத்துக்காட்டாகக் கிழக்கை மீட்டுவிட்டோம் என்ற பெரும் பிரகடனத்துடன் வடக்கில் யுத்தத்தை நடத்திக்கொண்டிருக்கும் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகா தற்பொழுது கிழக்கையும் திரும்பிப்பார்க்க வேண்டியதான நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்பட்டுள்ளார். இன்று கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும், சில சமயங்களில் அவற்றிற்கு வெளியில் அம்பாந்தோட்டை, மொனறாகலை மாவட்டங்களிலும் விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் இடம்பெற்றுவருகின்றன. இவற்றைப் புறம் தள்ளிவிட்டு, சிறிலங்கா இராணுவத் தளபதியால் யுத்தத்தின் வெற்றி குறித்து எவ்வாறு பேசமுடியும்.

வன்னிக் களமுனையில், சிறிலங்காப் படைத்தரப்பு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டிருப்பினும், அதற்காகப் பெரும்விலை கொடுத்து வருகின்றது. கடந்த ஒரு வாரகாலத்திற்குள் வன்னியில் புலிகளின் பல முறியடிப்புத் தாக்குதலில் பல டசின் இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கில் காயமடைந்துள்ளனர். குறிப்பாகக் கடந்த ஆறாம் திகதி பனிச்சங்குளம், கிழவன்குளம், முற்கொம்பன் பகுதியிலும் 09ம், 11ம், 12ம் திகதிகளில் கோணாவிலிலும், 10ம், 12ம் திகதிகளில் செம்மன்குன்றிலும் சிறிலங்காப் படைத்தரப்புச் சந்தித்த இழப்புக்களை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட முடியும். இத்தகைய இழப்புக்களைச் சிறிலங்காப் படைத்தரப்பால் எவ்வளவு காலத்திற்கு மூடி மறைத்துவிட முடியும்? இழப்புக்களை எவ்வளவு காலத்திற்குத் தாங்கிக்கொள்ள முடியும்.

செய்தித் தணிக்கை மூலம் இது மறைக்கப்பட்டாலும், எதிர்க்கட்சியினர் வெளியிடும் தகவல்கள் மூலமும், அரசாங்கம் விடும் தப்பியோடிய இராணுவத்தினருக்கான பொது மன்னிப்பு அறிவித்தல்கள் மற்றும், தப்பியோடியோர் மீதான நடவடிக்கை தொடர்பான தகவல்களும் சிறிலங்கா இராணுவம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை வெளிப்படுத்தும் குறிகாட்டிகளாகக் கொள்ளத்தக்கவையாகும். இத்தகையதொரு நிலையில் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகா மகிந்த ராஜபக்ச குடும்பத்தின் ஆசியுடன் மக்களுக்கும், இலங்கைக்கும் அழிவைக் கொடுக்க முடியுமே ஒழிய வெற்றியையோ அமைதியையோ தேடிக்கொடுக்க முடியாது.
______________________

** மும்பாய் தாக்குதல் எதிரொலி: இந்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பட்டீல்- எம்.கே.நாராயணன் பதவி விலகல்!

இந்தியாவின் வர்த்தக நகரங்களில் ஒன்றான மும்பாயில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான இந்திய அரசாங்கத்தின் உள்துறை அமைச்சர் சிவராஜ் பட்டீல், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே நாராயணன் ஆகியோர் தமது பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.

பொறுப்புள்ள அமைச்சர் என்ற அடிப்படையில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளுக்கு பதில் சொல்லும் வகையில் தனது பதவியிலிருந்து விலகியுள்ளதாக அமைச்சர் சிவராஜ் பட்டீல் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார் என புதுடில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, மும்பாய் தாக்குதலின் எதிரொலியாக தனது பாதுகாப்பு ஆலோசகர் பதவியிலிருந்து விலகிய எம்.கே நாராயணன் இந்தியாவின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த இருவரும் தமது பதவி விலகல் கடிதங்களை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கையளித்துள்ளனர்.

அதேவேளை, இந்திய பாதுகாப்பு மற்றும் உல்லாச பயண துறைகளுடன் தொடர்புபட்ட வேறு பல உயரதிகாரிகளும் தமது பதவிகளிலிருந்து விலகவுள்ளதாக புதுடில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
___________
Puthinam.com

Saturday 29 November 2008

** இன்றைய விமானத்தாக்குதலில் சர்வதேசத்தில் தடை செய்யப்பட்ட கொத்தணி குண்டுகள் பாவிப்பு!

இன்று வன்னியில் இலங்கை விமானப்படையினர் நடத்திய வான் தாக்குதலில் சர்வதேசத்தில் தடைசெய்யப்பட்ட கொத்தணி குண்டுகள் பாவித்தமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கொத்தணி (கிளெஸ்ரர்) ரக ஒரு குண்டில் இருந்து சுமார் 500, 600 வரையான குண்டுகள் வெடித்துச் சிதறும் தன்மை கொண்டது. இக்குண்டுகள் உடனடியான சேதத்தை மட்டுமல்ல அவை வெடிக்காத நிலையிலும் பின்னர் சேதத்தையும் அழிவுகளையும் ஏற்படுத்தக் கூடியது. சர்வதேசத்தால் தடை செய்யப்பட்ட கொத்தணிக் குண்டுகள் அண்மையில் இஸ்ரேல் லெபனான் மீதான தாக்குதலின் போது பாவித்தது குறிப்பிடத்தக்கது.

__________________

** கிளிநொச்சியில் இடம்பெயர்ந்தோர் தங்கியிருந்த முகாம் மீது வான்தாக்குதல்: சிறுவன் உட்பட மூவர் பலி; 18 பேர் காயம்!

கிளிநொச்சி மாவட்டம் தருமபுரத்தில் உள்ள இடம்பெயர்ந்தோர் தங்கியிருந்த முகாம் மீது சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் ஐந்து வயது சிறுவன் உட்பட மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 18 பேர் படுகாயமடைந்துள்ளனர்.



தருமபுரத்தில் உள்ள இடம்பெயர்ந்தோர் தங்கியிருந்த முகாம் மீது இன்று சனிக்கிழமை அதிகாலை 1:35 நிமிடமளவில் சிறிலங்கா வான்படையின் கிபீர் ரக வானூர்திகள் குண்டுத் தாக்குதலை நடத்தின. இதில் ஐந்து வயது சிறுவன் உட்பட மூவர் கொல்லப்பட்டனர். 18 பேர் காயமடைந்தனர்.




படுகாயமடைந்தவர்களில் பத்து வயதுக்கு உட்பட்ட ஏழு சிறார்களும் ஏழு பெண்களும் அடங்குவர். படுகாயமடைந்த அனைவரும் தருமபுரத்தில் உள்ள கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுதர்சன் சிவகுமார் (வயது 05), முதியவரான இராமன் இராமசாமி (வயது 80) ஆகியோர் மருத்துவமனையில் உயிரிழந்துள்னர். சம்பவ இடத்தில் கொல்லப்பட்டவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.


தாக்குதலுக்கு உள்ளாகிய இந்த இடம்பெயர்ந்தோர் முகாம், அண்மையில் சிறிலங்கா அரசாங்கத்தினால் "பதுகாப்பு வலயம்" என அறிவிக்கப்பட்ட பகுதிக்குள் அமைந்திருக்கின்றது என்பது கவனிக்கப்பட வேண்டியதாகும்.
போரிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ளவதற்காக, இந்தப் பிரதேசத்தில் போய் தங்கியிருக்குமாறு அண்மையில் வன்னி வாழ் மக்களுக்கு சிறிலங்கா அரசு அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
_____________

** உலகையே உலுக்கியுள்ள மும்பை தீவிரவாத தாக்குதல்!

உலகையே உலுக்கியுள்ள மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவம் 60 மணி நேரங்களைக் கடந்து இன்று காலையில் முடிவுக்கு வந்தது.


தீவிரவாதிகளின் பிடியிலிருந்து நாரிமன் ஹவுஸ் மற்றும் ஓபராய் ஹோட்டல் ஆகியவை மீட்கப்பட்டு விட்டன. அங்கிருந்த தீவிரவாதிகள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டனர். இன்று காலை வரை தாஜ் ஹோட்டலை மீட்கும் முயற்சி நடந்தது. இன்று காலை 3 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்று தாஜ் ஹோட்டலையும் என்.எஸ்.ஜி. படையினர் மீட்டனர்.

நேற்று நடந்த என்.எஸ்.ஜி. அதிரடி நடவடிக்கையில் நாரிமன் ஹவுஸ் மற்றும் ஓபராய் ஹோட்டல் ஆகியவை முழுமையாக மீட்கப்பட்டன. நாரிமன் ஹவுஸில் நடந்த சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஐந்து பிணையாளிகளை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்று விட்டனர்.

தற்போது நாரிமன் ஹவுஸ் முழுவதும் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது. அங்கு யாரேனும் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனரா என்பது குறித்து நள்ளிரவைத் தாண்டியும் தீவிர சோதனையில் என்.எஸ்.ஜி. கமாண்டோக்கள் ஈடுபட்டிருந்தனர். ஓபராய் ஹோட்டல் நேற்று மதியவாக்கில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்கு வந்தது. அங்கு 30 பிணையாளிகள் கொல்லப்பட்டிருந்தனர்.

தீவிரவாதத் தாக்குதலில் மொத்தம் 160 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இவர்களில் 16 பேர் பாதுகாப்புப் படையினர் ஆவர். தீவிரவாதிகள் 11 பேரும் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டனர். ஒருவன் மட்டும் பிடிபட்டுள்ளான். தாஜ் ஹோட்டல் இன்று காலை மீட்பு இந்த நிலையில் தாஜ் ஹோட்டலில் தொடர்ந்து தீவிரவாதிகள் பதுங்கியிருந்தனர். அங்கு ஒருவன் மட்டும் இருப்பதாக கருதப்பட்டது. ஆனால் 3 பேர் இருப்பதாக பின்னர் தெரிய வந்தது.

500க்கும் மேற்பட்ட அறைகளைக் கொண்ட தாஜ் ஹோட்டலில் பதுங்கியிருந்த 3 தீவிரவாதிகளையும் உயிருடன் பிடிக்க என்.எஸ்.ஜி. படையினர் தீவிரமாக முயன்றனர். தாஜ் ஹோட்டலின் வெளிப் பகுதி முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இருப்பினும் உள்ளே சென்று அறை அறையாக சோதனை போட முடியாத அளவுக்கு தீவிரவாதிகள் தொடர்ந்து சுட்டுக் கொண்டிருந்தனர்.

தாஜ் ஹோட்டலின் லே அவுட் முழுவதும் தீவிரவாதிகளுக்கு முன்பே முழுமையாக தெரிந்திருப்பதால் பாதுகாப்புப் படையினரை திணறடித்து வந்தனர். மேலும் போதிய அளவுக்கு ஆயுதங்களும் அவர்களிடம் இருந்ததால், உள்ளே சென்று தாக்குதல் நடத்த முடியாமல் என்.எஸ்.ஜி. படையினர் திணறினர். இந்த நிலையில் இன்று காலை கையெறி குண்டுகளையும், சரமாரியான துப்பாக்கிச் சூட்டையும் நடத்தி 3 தீவிரவாதிகளையும் என்.எஸ்.ஜி. படையினர் கொன்றனர். இதன் மூலம் தாஜ் ஹோட்டல் கிட்டத்தட்ட மீட்கப்பட்டு விட்டது.

அங்கு தற்போது தீவிரவாதிகள் யாரும் இல்லை என்று ராணுவம் தெரிவித்துள்ளது. தற்போது ஒவ்வொரு அறையாக தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
____________________

Friday 28 November 2008

** தெற்கைப் போர்த் தீவிரத்தில் ஆழ்த்தும் கருத்துருவாக்கிகள்!

பௌத்த - சிங்களப் பேரினவாதத்துக்குள் புதைந்து கிடக்கும் தென்னிலங்கைச் சிங்களம், சிறுபான்மையினராக அடக்கப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டு, அவல வாழ்வுக்குள் தள்ளப்பட்டிருக்கும் தமிழினத்தின் நீதியான - நியாயமான - அபிலாஷைகளைப் புரிந்துகொள்ளப் போவதில்லை என்பது தெளிவு.

அப்படி சிறுபான்மையினரின் நியாயமான அபிலாஷைகளைத் தென்னிங்கை மக்களைப் புரிந்துகொள்ள விடாமல் தடுத்து, பேரினவாத மிதப்புடன் கூடிய மாயைக்குள் - ஒரு திமிர்ச் செருக்குப் போக்குக்குள் - அவர்களை வைத்திருக்கும் கைங்கரியத்தை அறிவார்ந்த சிங்களத் தரப்பு வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றது.

இலங்கை இனப்பிரச்சினை தீர்க்கப்பட முடியாத நீண்ட கால இழுபறியாக நீடிப்பதற்கு, இவ்வாறு உண்மைகளையும் யதார்த்தங்களையும் தென்னிலங்கை மக்கள் புரிந்துகொள்ள முடியாதவாறு இனவாத வலைப் பின்னலுக்குள் அவர்களை சிக்க வைத்திருக்கும் தென்னிலங்கை ஊடகத் தரப்பு உள்ளிட்ட படித்த வர்க்கமே பிரதான காரணமாகும்.
சிங்கள, பௌத்த பேரினவாதம் தென்னிலங்கையின் தேசிய சித்தாந்தமாக இன்று வியாபித்து நிற்கையில் சிங்களத்தின் மூளையத்தை அந்தக் கருத்தாதிக்கமே சிறைப்பிடித்து வைத்திருக்கிறது. சிங்களத்தின் மனவமைப்பில் ஆழமாகப் பொறிக்கப்பட்டுள்ள இந்த இனவெறித் திமிர், சிறுபான்மையினர் தரப்பு நியாயங்களைப் புரிந்துகொள்ளவிடாது சிங்களத்தை மறைத்து நிற்கின்றது.

இந்தத் தடவை புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் ஆற்றிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மாவீரர் தின உரை குறித்துத் தென்னிலங்கை ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளும், திரிப்பு வேலைகளும் கூட இவ்வாறு சிங்களத்தின் மனவமைப்பைத் திசை திருப்பும் எத்தனைங்கள்தாம்.

வழமையாக தமது மாவீரர் தின உரையில் சில விடங்களையப் புலிகளின் தலைவர் பொதுவாகக் கூறுவது உண்டு. இவ்விடயத்தில் தமது இயக்கத்தின் கொள்கை நிலைப்பாட்டை இவ்வாறு திரும்பத் திரும்ப அவர் வலியுறுத்துகின்றமை புதுமையானதல்ல.

*நாங்கள் சமாதான விரோதிகள் அல்லர்; யுத்த வெறியர்களும் அல்லர்.

*அமைதிப் பேச்சுக்கும், சமாதான வழித் தீர்வு முயற்சிகளுக்கும் நாம் எப்போதும் தயார்.

*யுத்தத்தை நிறுத்தி சமாதான வழியில் தீர்வு காண நாங்கள் காத்திருக்கின்ற போதிலும், இந்த யுத்தத்தை சிங்கள அரசுதான் எம்மீது வலிந்து திணித்துள்ளது.

- இது போன்ற கருத்துக்களை கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாகவும் தனது மாவீரர் தின உரையில் புலிகளின் தலைவர் வெளிப்படுத்தியே வந்துள்ளார். இவை புதுமையானவை அல்ல. ஆனால் முன்னரெல்லாம் இக்கருத்தை - சமாதான வழித் தீர்வுக்கான தனது விருப்பை - பிரபாகரன் வெளியிட்டபோது அவற்றை தென்னிலங்கை ஊடகங்கள் முன்னிலைப்படுத்தி பிரசுரிப்பதில்லை.
மறுபக்கத்தில் யுத்தத்துக்கும் தாங்கள் தயார் என்ற ரீதியில் பிரபாகரன் கூறும் கருத்தையே முன்னிலைப்படுத்தி, யுத்தத்துக்கான மோச சூழ்நிலையை உருவாக்கிக் கொடுப்பதிலேய அவை கண்ணும் கருத்துமாக இருந்து வந்தன.

இந்தத் தடவையும் கூட பிரபாகரன் இந்த இரண்டு பக்கக் கருத்துக்களையுமே வெளியிட்டிருக்கின்றார்."தவிர்க்க முடியாத தேவையின் நிர்ப்பந்தமாக ஆயுதப் போராட்டத்தை வரித்துக்கொண்ட போதும், நாம் எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குப் போரை நிறுத்தி, அமைதி வழியில் தீர்வு காணவே விரும்புகிறோம்.

இதற்கு எமது விடுதலை இயக்கம் என்றுமே தயாராக இருக்கிறது. நாம் சமாதான வழிமுறைகளுக்கு என்றுமே எதிரானவர்கள் அல்லர்." - என்று கூறியுள்ள பிரபாகரன் வேறு ஒரு விடயத்தையும் சொல்லியிருக்கின்றார்.
"இன்றைய சவால்கள் எவையும் எமக்குப் புதியவையும் அல்ல, பெரியவையும் அல்ல. இந்தச் சவால்களை நாம் எமது மக்களின் ஒன்று திரண்ட பலத்துடன் எதிர்கொண்டு வெல்வோம்." - என்றும்

"தமிழரின் சுதந்திர இயக்கம் என்ற வகையில், நாம் எமது மண்ணில் சிங்கள ஆக்கிரமிப்பிற்கோ, சிங்கள ஆதிக்கத்துக்கோ என்றுமே இடமளிக்கப் போவதில்லை. எத்தனை சவால்களுக்கு முகம் கொடுத்தாலும், எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும், எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும், நாம் தமிழரின் சுதந்திர விடிவுக்காகத் தொடர்ந்து போராடுவோம். வரலாறுவிட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி, சிங்கள ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்." - என்று கூறியிருக்கின்றார் பிரபாகரன்.

இப்படித் தம் மீது திணிக்கப்பட்ட யுத்தத்தை எதிர்கொள்ளவும் தயார், அதை நிறுத்தி அமைதி வழியில் - சமாதான நெறியில் - தீர்வு காணவும் தயார் என இரண்டு பக்கக் கருத்துகளையும் பிரபாகரன் ஒவ்வொரு மாவீரர் தினச் செய்தியிலும் தெரிவித்து வருகையில் - இவ்வளவு காலமும் அச்செய்திகளில் அவர் வெளியிட்டு வந்த சமாதான அழைப்புப் பற்றிய தகவலை முன்னிலைப்படுத்தாமல் புறமொதுக்கி வந்த தென்னிலங்கை ஊடகங்கள் இந்த முறை மட்டும் அதைத் தூக்கிப் பிடித்து "யுத்தத்தை நிறுத்தக் கோருகிறார் பிரபாகரன்" எனவும், "யுத்தத்தை நிறுத்த விரும்புகிறார் பிரபாகரன்" எனவும் தலைப்பிட்டுச் செய்திகள் பிரசுரித்திருக்கின்றன.

புலிகளை அடியோடு அழித்தொழித்து, இல்லாமல் செய்யும் இராணுவ நடவடிக்கைகளில் அரசுப் படைகள் வெற்றிகரமாக நடைபோடுகின்றன என்ற எண்ணம் நீடிக்கையில் - வேறு வழியின்றி யுத்தத்தை நிறுத்த பிரபாகரன் கெஞ்சுகின்றார் என்ற மாயை நிலையை உருவாக்கவும் -அதன் மூலம் வெற்றி உறுதி என்ற நம்பிக்கையில் முழுப் போர்த் தீவிரத்தில் தென்னிலங்கையை உற்சாகப்படுத்தித் தமிழர் தாயகத்துக்கு எதிரான அந்தப் போரில் தெற்கை முழு மூச்சில் ஈடுபட வைப்பதுமே இத்தகைய திரிப்புச் செய்திகளின் பின்புலமாகும்.

தெற்கில் கருத்துருவாக்கிகளான ஊடகங்கள், பிரபாகரன் சுட்டிக்காட்டுவது போன்று இவ்வாறு போரியல் தீவிரத்தில் சிங்களத்தை மூழ்கடித்திருக்கும் போது அமைதி வழித் தீர்வு சாத்தியமற்றதே.
___________
Uthayan.com

** லண்டனில் நடைபெற்ற தேசிய நினைவெழுச்சி நாளில் தமிழின உணர்வாளரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆற்றிய உரை.(ஒலி)


** விடுதலைப் புலிகள் தாக்குதலில் பொத்துவிலில் நான்கு அதிரடிப் படையினர் பலி!

பொத்துவில் வனப்பகுதிக்குள் இன்று நண்பகல் 11-50 மணியளவில் ஊடுருவி தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட விசேட அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடாத்திய தாக்குதலில் 4 விசேட அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளனர் மேலும் ஒரவர் படுகாயமடைந்துள்ளதாக அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

** கிழக்கில் ஒரு கோர இனக்கருவறுப்புப் படுகொலையை சிங்களப் படைகள் அரங்கேற்றுகின்றன - விடுதலைப் புலிகள்

அப்பாவி பொதுமக்களை கொலைவேறியாட்டம் செய்யும் சிங்கள அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்.எமது அன்பார்ந்த தென்தமிழீழ மக்களே!மாவீரர்களின் இலட்சியக் கனவை சுமந்து, எமது தனிப்பெரும் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வழிநடத்தலில், தமிழீழம் முழுவதும் எழுச்சி கொண்டுள்ள இவ்வேளையில், மீண்டும் ஒரு கோர இனக்கருவறுப்புப் படுகொலை நடவடிக்கையை, தென்தமிழீழ மண்ணில் சிங்களப் படைகள் அரங்கேற்றியுள்ளன.

தென்தமிழீழத்தில் எமது வேங்கைகளின் வீரம்செறிந்த தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாது, திக்குமுக்காடி வரும் சிங்கள இனவெறிப் படைகள், தமது கையாலாகாத்தனத்தை மீண்டும் அப்பாவித் தமிழ் உறவுகள் மீது காண்பித்து வருகின்றன. இதன் வெளிப்பாடாகவே, நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு குடும்பங்கள் உட்பட பதினைந்து அப்பாவிப் பொதுமக்களை வயது வேறுபாடின்றி தமது கோரப் பற்களுக்கு சிங்களப் படைகளும், அவற்றின் ஒட்டுக்குழுக்களும் இரையாக்கியுள்ளன.

அப்பாவிப் பொதுமக்களை சிங்களப் படைகள் படுகொலை செய்வது இது முதற்தடவையல்ல. இவ்வாறான கொடூரங்களை, கடந்த காலங்களிலும் பல தடவைகள் எமது தென்தமிழீழ மண் சந்தித்துள்ளது. கிழக்கின் விடியல் என்ற மகிந்தவின் கொக்கரிப்பிற்கு முடிவு கட்டி, சிங்களப் படைகளை தென்தமிழீழ மண்ணை விட்டு ஓடோட விரட்டியடிப்பதற்கு, நாம் எல்லோரும் உறுதி பூண்டு நிற்கும் இவ்வேளையில், எம் மக்களின் உயிர்களைப் பலியெடுத்து தமது கோழைத்தனத்தை சிங்கள இனவெறி அரசும், அதன் கைக்கூலிப் படைகளும், ஒட்டுக்குழுக்களும் கட்டவிழ்த்து விட்டுள்ளன.சிறிலங்கா இராணுவத்தினரும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக்குழுவினரும் நடாத்திய கொலைவேறியாட்டத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
சிங்களப்படைகள் மீது நடாத்தப்படும் தாக்குதல்களுக்கு எதுவுமே அறியாத அப்பாவி மக்களை படுகொலை செய்து பழிதீர்ப்பது எந்தவகையிலுமே நியாயமாகாது என்பதனை சிங்களப்படைகளும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக்குழுக்களும் புரிந்து கொள்ளவேண்டும்.

தென்தமிழீழத்தில் தொடர்ந்துகொண்டுள்ள அப்பாவி மக்களின் படுகொலைகளுக்கான முழுப்பொறுப்பையும் சிங்களதேசமே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதோடு, அப்பாவி பொதுமக்கள் மீதான படுகொலைச் சம்பவங்களை இனிமேலும் தொடராமல் சிங்கள தேசம் உடனடியாக நிறுத்தவேண்டும்.

"புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்

அரசியல்துறை
தமிழீழ விடுதலைப் புலிகள்;
மட்டக்களப்பு மாவட்டம்.
தமிழீழம்.
_________
Pathivu.com

Thursday 27 November 2008

*** தமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர்நாள் உரை! (ஒலி வடிவில்)

-----------------------

** பிரித்தானிய நினைவெழுச்சி நாளில் 40,000ற்திற்கு மேற்பட்ட மக்கள்!


பிரித்தானியாவின் தமிழ் தேசிய நினைவெழுச்சி நாள் 2008 நிகழ்ச்சிகள் அந்நாட்டின் மிகப்பெரிய உள்ளரங்கமான ExCel மண்டபத்தில் மதியம் 12 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகின. 40,000ற்திற்கு மேற்பட்ட மக்கள் வணக்கம் செய்வதற்காக காலை 10 மணி முதலே வந்து குவிந்திருந்தனர்.


ஈகைச்சுடரை மாவீரர் லெப்.கேணல் வைகுந்தனின் தாயாரான திருமதி யோகராணி மனோகரராசா அவர்கள்ஏற்றிவைத்தார். தொடர்ந்து, மண்டபம் இருளில் ஆழ சுடர்வணக்கம் நடைபெற்றது.மிகநீண்ட வரிசைகளில் மக்கள் ஒரு மணிநேரத்திற்கு மேலாகக் காத்திருந்து மலர்வணக்கம் செலுத்தினர்.



இடையிடையே கவிதைகள் மற்றும் அரங்க நிகழ்வுகளும் இடம்பெற்றன. பிரித்தானிய பழமைவாதக் கட்சியின் இல்பேட் தெற்கு வேட்பாளர் டோபி பொன்டில் உரையாற்றினார். அவர் தனதுரையில் தமிழ் மக்களின் ஒருமைப்பாடு பற்றிப் பேசினார்.பிரித்தானியப் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் உரையாற்றினர். அத்துடன் தமிழகத்தில் இருந்து வருகை தந்திருந்த மறுமலர்ச்சி திராவிடக் கழகப் பொதுச் செயலர் வைகோ அவர்கள் சிறப்புரையாற்றினார்.
___________________

*** தமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர்நாள் உரை!

தலைமைச் செயலகம்
தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழம்
கார்த்திகை 27, 2008.

எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!
இன்று மாவீரர் நாள்.

தமிழீழத் தாய்நாட்டின் விடிவிற்காகத் தமது இன்னுயிரை ஈகம்செய்து, எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் எம்முயிர் வீரர்களை நாம் நினைவுகூர்ந்து கௌரவிக்கும் புனிதநாள்.


ஆண்டாண்டு காலமாக அந்நிய ஆதிக்கப் பிடிக்குள் அடங்கிக்கிடந்த எமது தேசத்தைஇ ஆக்கிரமிப்பாளர்களுக்கு அடிபணியாத அடங்கா மண்ணாக மாற்றிவிட்ட எமது வீரமறவர்களைப் பூசித்து வணங்கும் திருநாள்.

எமது தேசம் விடுதலை பெற்று, எமது மக்கள் சுதந்திரமாகஇ தன்மானத்துடன் வாழவேண்டும் என்ற சத்திய இலட்சியத்திற்காக மடிந்த எமது மானவீரர்களை எமது நெஞ்சப் பசுமையில் நிறுத்திக்கொள்ளும் தேசியநாள்.

எமது மாவீரர்கள் இந்த மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தாயக விடுதலைக்காகத் தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை அவர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை. எந்த ஒரு தேசத்திலும் எந்த ஒரு காலத்திலும் நிகழாத அற்புதமான அர்ப்பணிப்புக்களை எமது மண்ணிலே எமது மண்ணுக்காக எமது மாவீரர்கள் புரிந்திருக்கிறார்கள்.

இந்த மண்ணிலேதான் எமது மாவீரர்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்தார்கள். இந்த மண்ணிலேதான் அவர்களது பாதச்சுவடுகள் பதிந்திருக்கின்றன. அவர்களது மூச்சுக்காற்றும் கலந்திருக்கிறது. இந்த மண்ணிலேதான் எமது இனம் காலாதிகாலமாக,கொப்பாட்டன்இபாட்டன் என தலைமுறை தலைமுறையாக வாழ்ந்துவருகிறது. எமது இனச் சரித்திரம் நிலைபெற்ற இந்த மண்ணை ஆழமாகக் காதலித்து, இந்த மண்ணிற்காகவே மடிந்து, இந்த மண்ணின் மடியிலேயே எமது மாவீரர்கள் படுத்துறங்குகிறார்கள். அவர்கள் பள்ளிகொள்ளும் இந்த மண் எமக்கேயுரித்தான மண். எமக்கே சொந்தமான மண். இந்த வரலாற்று மண்ணை ஆக்கிரமித்து, அடக்கியாளச் சிங்களம் திமிர்கொண்டு நிற்கிறது; தீராத ஆசை கொண்டு நிற்கிறது.
மனித துயரங்களெல்லாம் அடங்காத, அருவருப்பான ஆசைகளிலிருந்தே பிறப்பெடுக்கின்றன. ஆசைகள் எல்லாம் அறியாமையிலிருந்தே தோற்றம்கொள்கின்றன. ஆசையின் பிடியிலிருந்து மீட்சிபெறாதவரை சோகத்தின் சுமையிலிருந்தும் விடுபடமுடியாது. மண்ணாசை பிடித்து, சிங்களம் அழிவு நோக்கிய இராணுவப் பாதையிலே இறங்கியிருக்கிறது. உலகத்தையே திரட்டிவந்து எம்மோடு மோதுகிறது. இராணுவ வெற்றி பற்றிய கனவுலகில் வாழ்கிறது. சிங்களத்தின் இந்தக் கனவுகள் நிச்சயம் கலையும். எமது மாவீரர் கண்ட கனவு ஒருநாள் நனவாகும். இது திண்ணம்.

எனது அன்பான மக்களே!

என்றுமில்லாதவாறு இன்று தமிழீழத் தேசம் ஒரு பெரும் போரை எதிர்கொண்டு நிற்கிறது. இப்போர் வன்னி மாநிலமெங்கும் முனைப்புப்பெற்று உக்கிரமடைந்துவருகிறது. சிங்கள அரசு இராணுவத்தீர்வில் நம்பிக்கைகொண்டு நிற்பதால், இங்கு இப்போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து விரிவாக்கம் கண்டுவருகிறது.

தமிழரின் தேசிய வாழ்வையும் வளத்தையும் அழித்து, தமிழர் தேசத்தையே சிங்கள இராணுவ இறையாட்சியின் கீழ் அடிமைப்படுத்துவதுதான் சிங்கள அரசின் அடிப்படையான நோக்கம். இந்த நோக்கத்தைச் செயற்படுத்திவிடும் எண்ணத்தில், தனது போர்த்திட்டத்தை முழுமுனைப்போடு முன்னெடுத்துவருகிறது. தனது முழுப் படைப்பலத்தையும் ஆயுதபலத்தையும் ஒன்றுதிரட்டி, தனது முழுத் தேசிய வளத்தையும் ஒன்றுகுவித்து, சிங்களத்தேசம் எமது மண்மீது ஒரு பாரிய படையெடுப்பை நிகழ்த்திவருகிறது. சிங்கள இனவாத அரசு ஏவிவிட்டிருக்கும் இந்த ஆக்கிரமிப்புப் போரை எதிர்த்து, எமது விடுதலை வீரர்கள் வீராவேசத்தோடு போராடிவருகின்றனர். உலகின் பல்வேறு நாடுகளும் தமிழ் இனஅழிப்புப் போருக்கு முண்டுகொடுத்து நிற்க, நாம் தனித்து நின்று, எமது மக்களின் தார்மீகப் பலத்தில் நின்று, எமது மக்களின் விடிவிற்காகப் போராடி வருகிறோம்.

இன்று எமது விடுதலை இயக்கம் மிகவும் கடினமான, நெருக்கடிகள் நிறைந்த ஒரு வரலாற்றுப் பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. உலகின் எந்தவொரு விடுதலை இயக்கமுமே சந்தித்திராத பல சரிவுகளை, பல திருப்பங்களை, பல நெருக்கடிகளை நாம் இந்த வரலாற்று ஓட்டத்திலே எதிர்கொண்டிருக்கிறோம். எமது பலத்திற்கு மிஞ்சிய பாரிய சக்திகளையெல்லாம் நாம் எதிர்கொண்டிருக்கிறோம். வல்லமைக்கு மிஞ்சிய வல்லாதிக்க சக்திகளோடு நேரடியாக மோதியிருக்கிறோம். அலையலையாக எழுந்த எதிரியின் ஆக்கிரமிப்புக்களையெல்லாம் நேருக்கு நேர் நின்று சந்தித்திருக்கிறோம். பெருத்த நம்பிக்கைத் துரோகங்கள், பெரும் நாசச் செயல்கள் என எமக்கு எதிராகப் பின்னப்பட்ட எண்ணற்ற சதிவலைப் பின்னல்களையெல்லாம் தனித்துநின்று தகர்த்திருக்கிறோம். புயலாக எழுந்த இத்தனை பேராபத்துக்களையும் மலையாக நின்று எதிர்கொண்டோம். இவற்றோடு ஒப்புநோக்குகையில், இன்றைய சவால்கள் எவையும் எமக்குப் புதியவையும் அல்ல, பெரியவையும் அல்ல. இந்தச் சவால்களை நாம் எமது மக்களின் ஒன்றுதிரண்ட பலத்துடன் எதிர்கொண்டு வெல்வோம்.
சிங்களத்தேசம் ஆக்கிரமித்து அடிமைகொள்ளத் துடிக்கும் இந்த மண் அதற்கு என்றுமே சொந்தமானதன்று. இந்த மண் எமக்குச் சொந்தமான மண்; பழந்தமிழர் நாகரீகம் நீடித்து நிலைபெற்ற மண்; வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே எமது மூதாதையர் வாழ்ந்து வளர்ந்த மண். இந்த மண்ணிலேதான் எமது ஆதிமன்னர்கள் இராச்சியங்களும் இராசதானிகளும் அமைத்து அரசாண்டார்கள். எமது இன வேர் ஆழவேரோடியுள்ள இந்த மண்ணிலே, நாம் நிம்மதியாக, கௌரவமாக, அந்நியரின் அதிகார ஆதிக்கமோ தலையீடுகளோ இன்றி, எமது வாழ்வை நாமே அமைத்து வாழவிரும்புகிறோம். ஆங்கிலேயக் காலனியாதிக்கம் அகன்று, சிங்கள ஆதிக்கம் எம்மண் மீது கவிந்த நாள் முதல், நாம் எமது நீதியான உரிமைகளுக்காக அகிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் போராடிவருகிறோம்.

சுயநிர்ணய உரிமைக்கான எமது இந்த அரசியல் போராட்டம் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துச்செல்கிறது. இந்த நீண்ட படிநிலை வரலாற்றில், வௌ;வேறு காலகட்டங்களில் வௌ;வேறு வடிவங்களாக எமது போராட்டம் வளர்ச்சியும் முதிர்ச்சியும் கண்டுவந்திருக்கிறது. ஆரம்பத்தில் அமைதியாக, மென்முறை வடிவில், சனநாயக வழியில் அமைதி வழிப்போராட்டங்கள் வாயிலாக எமது மக்கள் நீதிகேட்டுப் போராடினார்கள். அரசியல் உரிமை கோரி, தமிழ் மக்கள் தொடுத்த சாத்வீகப் போராட்டங்களைச் சிங்கள இனவாத அரசு ஆயுத வன்முறை வாயிலாக மிருகத்தனமாக ஒடுக்கமுனைந்தது. அரச ஒடுக்குமுறை கட்டுக்கடங்காமல் உக்கிரம் அடைந்து, அதன் தாங்கமுடியாத கொடுமைகளை எமது மக்கள் சந்தித்தபோதுதான், வரலாற்றின் தன்னியல்பான விதியாக எமது விடுதலை இயக்கம் பிறப்பெடுத்தது. சிங்கள இனவாத அரசின் ஆயுதப் பயங்கரவாதத்திலிருந்து எமது மக்களைப் பாதுகாக்கவே நாம் ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கப்பட்டோம். ஆயுத வன்முறை வழியை நாம் விரும்பித் தேர்வுசெய்யவில்லை. வரலாறுதான் எம்மிடம் கட்டாயமாகக் கையளித்தது.
தவிர்க்கமுடியாத தேவையின் நிர்ப்பந்தமாக ஆயுதப் போராட்டத்தை வரித்துக்கொண்ட போதும், நாம் எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குப் போரை நிறுத்தி, அமைதி வழியில் தீர்வுகாணவே விரும்புகிறோம். இதற்கு எமது விடுதலை இயக்கம் என்றுமே தயாராக இருக்கிறது. நாம் சமாதான வழிமுறைகளுக்கு என்றுமே எதிரானவர்கள் அல்லர். அதேநேரம் நாம் சமாதானப் பேச்சுக்களிற் பங்குபற்றத் தயங்கியதும் இல்லை. சமாதான வழிமுறை தழுவி, எமது மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க, திம்புவில் தொடங்கி, ஜெனீவா வரை பல்வேறு வரலாற்றுச் சூழல்களிற் பேச்சுக்களிற் பங்குபற்றிவந்திருக்கிறோம். எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குச் சமாதான வழியில் தீர்வுகாண நாம் முழுமனதுடனும் நேர்மையுடனும் செயற்பட்டபோதும் பேச்சுக்கள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன. சிங்கள அரசுகளின் விட்டுக்கொடாத கடும்போக்கும், நாணயமற்ற அரசியல் அணுகுமுறைகளும் இராணுவவழித் தீர்விலான நம்பிக்கைகளுமே இந்தத் தோல்விகளுக்குக் காரணம்.

பிரமிப்ப+ட்டும் போரியற் சாதனைகளைப் படைத்து, சிங்கள ஆயுதப் படைகளின் முதுகெலும்பை முறித்து, படைவலுச் சமநிலையை எமக்குச் சாதகமாகத் திருப்பியபோதும், நாம் நோர்வேயின் அனுசரணையிலான அமைதிப் பேச்சுக்களிற் கலந்துகொண்டோம். போருக்கு முடிவுகட்டி, ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்த அமைதிப் பேச்சுக்களில் நேர்மையுடனும் பற்றுறுதியுடனும் பங்குகொண்டோம். ஆயுதப் படைகளின் அத்துமீறிய செயல்களையும் ஆத்திரமூட்டும் சம்பவங்களையும் பொறுத்துக்கொண்டு, அமைதி பேணினோம். இத்தனையையும் நாம் செய்தது, சிங்கள இனவாத அரசு எமது மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று நீதி செய்யும் என்ற நம்பிக்கையினாலன்று. சிங்கள அரசின் சமாதான முகமூடியைத் தோலுரித்துக்காட்டி, சமாதானத்தில் எமக்குள்ள பற்றுறுதியை உலகத்திற்கு வெளிப்படுத்தவே நாம் பேச்சுக்களிற் கலந்துகொண்டோம்.
உலக அரங்கிற் பல்வேறு நாடுகளின் தலைநகரங்களில் அரங்கேற்றப்பட்ட இந்த அமைதிப் பேச்சுக்கள், தமிழ் மக்களின் அன்றாட அவசர வாழ்க்கைப் பிரச்சினைகளையோ இனப்பிரச்சினையின் மூலாதாரப் பிரச்சினைகளையோ தீர்ப்பவையாக அமையவில்லை. புலிகள் இயக்கத்தைப் பலவீனப்படுத்தி, தமிழர் தேசத்தையும் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றுவதற்கே சிறீலங்கா அரசு இப்பேச்சுவார்த்தைகளைப் பயன்படுத்தியது. பேச்சு என்ற போர்வையில், சிங்கள அரசு தமிழர் தேசம் மீது ஒரு பெரும் படையெடுப்பிற்கான ஆயத்தங்களைச் செய்தது. போர் ஓய்வையும் சமாதானச் சூழலையும் பயன்படுத்தி, தனது நலிந்துபோன பொருளாதாரத்தை மீளக்கட்டி, தனது சிதைந்துபோன இராணுவப் பூதத்தை மீளவும் தட்டியெழுப்பியது. பெருந்தொகையில் ஆட்சேர்ப்பு நிகழ்த்தி, ஆயுதங்களைத் தருவித்து, படையணிகளைப் பலப்படுத்தி, போர் ஒத்திகைகளைச் செய்தது. தமிழர் தேசம் சமாதான முயற்சியில் ஈடுபட்டிருக்க, சிங்களத்தேசம் போர்த் தயாரிப்பு வேலைகளிலேயே தன்னை முழுமையாக அர்ப்பணித்தது.
இதேநேரம், சமாதான முயற்சிகளின் காவலர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்திய உலக நாடுகளில் ஒரு பகுதியினர் அவசரப்பட்டு அதிரடி நடவடிக்கையில் இறங்கியமை, சமாதான முயற்சிகளுக்கே ஊறுவிளைவிப்பதாக அமைந்தது. எமது சுதந்திர இயக்கத்தை இந்நாடுகள் ஒரு பயங்கரவாதக் குழுவாகச் சிறுமைப்படுத்திச் சித்திரித்தன் தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் வரிசையில் பட்டியலிட்டு, எம்மை வேண்டத்தகாதோராக, தீண்டத்தகாதோராக ஒதுக்கி ஓரங்கட்டின் புலம்பெயர்ந்து வாழும் எம்மக்கள் மீது வரம்புமீறிய வரையறைகளை விதித்து, கட்டுப்பாடுகளைப் போட்டு, எமது விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக அவர்கள் முன்னெடுத்த அரசியற் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டைகள் போட்டன் தாம் வாழும் நாடுகளின் அரசியற்சட்டவிதிகளுக்கு அமைவாக, நீதிநெறி வழுவாது எம்மக்கள் மேற்கொண்ட மனிதாபிமானப் பணிகளைக் கொச்சைப்படுத்தின் சிங்கள அரசின் இனஅழிப்புக்கு ஆளாகி, மனிதப் பேரவலத்திற்கு முகம்கொடுத்து நின்ற தமது தாயக உறவுகளைக் காக்க எமது மக்கள் முன்னெடுத்த மனிதநேய உதவிப்பணிகளைப் பெரும் குற்றவியற்செயல்களாக அடையாளப்படுத்தின் தமிழ் மக்களின் பிரதிநிதிகளையும் தமிழின உணர்வாளர்களையும் கைதுசெய்து, சிறைகளிலே அடைத்து, அவமதித்தன. இந்நாடுகளின் ஒருபக்கச்சார்பான இந்த நடவடிக்கைகள்;, பேச்சுக்களில் நாம் வகித்த சமநிலை உறவையும் சமபங்காளி என்ற தகைமையையும் வெகுவாகப் பாதித்தன. இது சிங்களத்தேசத்தின் இனவாதப்போக்கை மேலும் தூண்டிவிட்டது. சிங்கள இனவாத சக்திகள் உசாரடைந்து, எமக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தின. இது சிங்கள தேசத்தை மேலும் இராணுவப் பாதையிலே தள்ளிவிட்டது.

சிங்களத்தேசம் சமாதானக் கதவுகளை இறுகச் சாத்திவிட்டுத் தமிழர்தேசத்தின்மீது போர் தொடுத்தது. சர்வதேசத்தின் அனுசரணையோடு கைச்சாத்தான போர்நிறுத்த ஒப்பந்தத்தையும் ஒருதலைப்பட்சமாகக் கிழித்தெறிந்தது. அப்போது சமாதானம் பேசிய உலகநாடுகள் ஒப்புக்குத்தானும் இதனைக் கண்டிக்கவில்லை; கவலைகூடத் தெரிவிக்கவில்லை. மாறாக, சில உலகநாடுகள் சிங்கள தேசத்திற்கு அழிவாயுதங்களை அள்ளிக்கொடுத்து, இராணுவப் பயிற்சிகளையும் இராணுவ ஆலோசனைகளையும் இலவசமாக வழங்கிவருகின்றன. இதனால்தான் சிங்கள அரசு தமிழருக்கு எதிரான இனஅழிப்புப் போரைத் துணிவுடனும் திமிருடனும் ஈவிரக்கமின்றியும் தொடர்ந்துவருகிறது.

இன்று சிங்களத்தேசம் என்றுமில்லாதவாறு இராணுவ பலத்திலும் இராணுவ அணுகுமுறையிலும் இராணுவவழித் தீர்விலும் நம்பிக்கைகொண்டு செயற்படுகிறது. தமிழர் தாயகத்தில் இராணுவ மேலாதிக்கத்தை நிலைநாட்டி, ஆயுத அடக்குமுறையின் கீழ்த்; தமிழர்களை ஆட்சிபுரியவேண்டும் என்ற அதன் ஆசை அதிகரித்திருக்கிறது. இதனாற் போர் தீவிரம்பெற்று, விரிவுபெற்று நிற்கிறது. இந்தப் போர் உண்மையில் சிங்கள அரசு கூறுவது போல, புலிகளுக்கு எதிரான போரன்று. இது தமிழருக்கு எதிரான போர்; தமிழினத்திற்கு எதிரான போர்; தமிழின அழிப்பை இலக்காகக் கொண்ட போர்; மொத்தத்தில் இது ஓர் இனஅழிப்புப் போர்.

இந்தப் போர் எமது மக்களைத்தான் பெரிதும் பாதித்திருக்கிறது. போரின் கொடூரத்தை மக்களுக்கு எதிராகத் திருப்பிவிட்டு, மக்கள் மீது தாங்கொணாத் துன்பப்பளுவைச் சுமத்தி, மக்களைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராகத் திருப்பிவிடலாம் என்ற நப்பாசையிற் சிங்கள அரசு செயற்பட்டுவருகிறது. பாதைகளை மூடி, உணவையும் மருந்தையும் தடுத்து, எமது மக்களை இறுக்கமான இராணுவ முற்றுகைக்குள் வைத்துக்கொண்டு, கண்மூடித்தனமான குண்டுவீச்சுக்களையும் எறிகணைவீச்சுக்களையும் நடாத்திவருகிறது. சொந்த நிலத்தை இழந்து, அந்த நிலத்தில் அமைந்த வாழ்வை இழந்து, அகதிகளாக அலையும் அவலம் எம்மக்களுக்குச் சம்பவித்திருக்கிறது. பிறப்பிலிருந்து இறப்புவரை சதா துன்பச்சிலுவையைச் சுமக்கின்ற மக்களாக எம்மக்கள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். நோயும் பிணியும் உடல்நலிந்த முதுமையும் சாவுமாக எம்மக்களது வாழ்வு சோகத்தில் தோய்ந்து கிடக்கிறது. எமது மக்களின் உறுதிப்பாட்டை உடைத்துவிடவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு எமது எதிரியான சிங்கள அரசு இன்று எம்மக்கள் மீது எண்ணற்ற கொடுமைகளைப் புரிந்துவருகிறது. பெரும் அநீதிகளை இழைத்துவருகிறது. உலகில் எங்குமே நிகழாத கொடூரமான அடக்குமுறைகளைப் பிரயோகிக்கிறது. எமது தேசத்தின் மீது ஒரு பெரும் பொருண்மியப்போரை தொடுத்து இ எம்மக்களின் பொருளாதார வாழ்வைச் சிதைத்து அவர்களது நாளாந்தச்சீவியத்தைச் சீர்குலைக்கின்ற செயலிலே இறங்கியிருக்கிறது. சிறீலங்காப்படைகளின் கட்டுப்பாட்டிலுள்ள தமிழீழ நிலப்பரப்பில் மாதந்தோறும் நூற்றுக்கணக்கானோர் காணாமற்போகின்றனர்; கொல்லப்படுகின்றனர். சிங்களப்பகுதிகளில் தமிழர் காணாமற் போவதும் கொல்லப்படுவதும் வழமையான நிகழ்ச்சியாகிவிட்டது.
இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள தமிழர் பகுதிகளிலே ஒரு மறைமுகமான இனஅழிப்புக் கொள்கை இன்று வேகமாகச் செயற்படுத்தப்படுகிறது. சாவும் அழிவும் இராணுவ அட்டூழியங்களும் சொந்த மண்ணிலேயே சிறைப்பட்ட வாழ்வுமாக எம்மக்கள் நாளாந்தம் அனுபவிக்கும் துயரம் மிகக்கொடியது. கைதுகளும் சிறைவைப்புக்களும் சித்திரவதைகளும் பாலியல் வல்லுறவுகளும் கொலைகளும் காணாமல்போதல்களும் புதைகுழிகளுக்குள் புதைக்கப்படுவதுமாக ஒரு நச்சுவட்டத்திற்குள் எமது மக்களது வாழ்வு சுழல்கிறது. இருந்தபோதும், எமது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை. சுதந்திர தாகம் கொண்டு, எழுச்சிகொண்ட எம்மக்களை எந்தத் தடைகளாலும் எதுவும் செய்துவிடமுடியாது. ஆகாயத்திலிருந்து வீழும் குண்டுகளாலும் அவர்களது விடுதலை வேட்கையை அழித்துவிடமுடியாது. எம்மக்கள் துன்பச்சிலுவையைச் சதா சுமந்து பழகியவர்கள். அழிவுகளையும் இழப்புக்களையும் நித்தம் சந்தித்து வாழ்பவர்கள். இதனால் அவர்களது இலட்சிய உறுதி மேலும் உரமாகியிருக்கிறது. விடுதலைக்கான வேகம் மேலும் வீச்சாகியிருக்கிறது.

பெரும் போருக்கு முகம்கொடுத்தவாறு, நாம் இத்தனை காலமாக இத்தனை தியாகங்களைப் புரிந்து போராடி வருவது எமது மக்களின் சுதந்திரமான, கௌரவமான, நிம்மதியான வாழ்விற்கேயன்றி வேறெதற்காகவுமன்று. உலகத் தமிழினத்தின் ஒட்டுமொத்தப் பேராதரவோடு நாம் இந்தப் போராட்டத்தை நடாத்திவருகிறோம். அதுமட்டுமன்று, எமது போராட்டம் எந்தவொரு நாட்டினதும் தேசிய நலன்களுக்கோ அவற்றின் புவிசார் நலன்களுக்கோ பொருளாதார நலன்களுக்கோ குறுக்காக நிற்கவில்லை. எமது மக்களது ஆழமான அபிலாசைகளும் எந்தவொரு தேசத்தினதும் எந்தமக்களினதும் தேசிய நலன்களுக்குப் பங்கமாக அமையவில்லை. அத்தோடு இந்த நீண்ட போராட்ட வரலாற்றில், நாம் திட்டமிட்டு எந்தவொரு தேசத்திற்கு எதிராகவும் நடந்துகொண்டதுமில்லை.

எமது விடுதலை இயக்கமும் சரி எமது மக்களும் சரி என்றுமே உலக நாடுகளுடனும் எமது அண்டை நாடான இந்தியாவுடனும் நட்புறவை வளர்த்துச் செயற்படவே விரும்புகிறோம். இதற்கான புறநிலைகளை உருவாக்கி, நட்புறவுப் பாலத்தை வளர்த்துவிடவே சித்தமாக இருக்கிறோம். எமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, காத்திரமான உறவுகளைக் கட்டியெழுப்புவதற்குக் காத்துநிற்கிறோம். எம்மைத் தடைசெய்துள்ள நாடுகள், எமது மக்களது அபிலாசைகளையும் ஆழமான விருப்பங்களையும் புரிந்துகொண்டு, எம்மீதான தடையை நீக்கி, எமது நீதியான போராட்டத்தை அங்கீகரிக்கவேண்டுமென அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.
இன்று இந்திய தேசத்திலே பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன. அங்கு அடங்கிக்கிடந்த எமது போராட்ட ஆதரவுக்குரல்கள் இன்று மீளவும் ஓங்கிஒலிக்கின்றன. எமது போராட்டத்தை ஏற்றுக்கொள்கின்ற ஏதுநிலைகள் வெளிப்படுகின்றன. கனிந்துவருகின்ற இந்தக் காலமாற்றத்திகேற்ப, இந்தியப் பேரரசுடனான அறுந்துபோன எமது உறவுகளை நாம் மீளவும் புதுப்பித்துக்கொள்ள விரும்புகிறோம். அன்று, இந்தியா கைக்கொண்ட நிலைப்பாடுகளும் அணுகுமுறைகளும் தலையீடுகளும் ஈழத்தமிழருக்கும் அவர்களது போராட்டத்திற்கும் பாதகமாக அமைந்தன. இனவாத சிங்கள அரசு தனது கபடநாடகங்களால் எமது விடுதலை இயக்கத்திற்கும் முன்னைய இந்திய ஆட்சிப்பீடத்திற்குமிடையே பகைமையை வளர்த்துவிட்டது. இந்தப் பகைப்புலத்தில் எழுந்த முரண்பாடுகள் மேலும் முற்றிப் பெரும் போராக வெடித்தது. இதன் ஒட்டுமொத்த விளைவாக எமது மக்கள் பெரும் அழிவுகளைச் சந்திக்க நேர்ந்தது.

நாம் எமது இலட்சியத்தில் உறுதியாக நின்ற காரணத்தினால்தான் எமது இயக்கத்திற்கும் இந்திய அரசிற்கும் பிணக்கு ஏற்பட்டது. எனினும் இந்தியாவை நாம் ஒருபோதும் பகைச்சக்தியாகக் கருதியதில்லை. இந்தியாவை எமது நட்புச் சக்தியாகவே எமது மக்கள் என்றும் கருதுகிறார்கள். எமது தேசியப் பிரச்சினை விடயத்தில் இந்தியப் பேரரசு ஒரு சாதகமான நிலைப்பாட்டை எடுக்கும் எனப் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.
காலமும் கடல் கடந்த தூரமும் எம்மைப் பிரிந்து நிற்கின்றபோதும், எமது மக்களின் இதயத்துடிப்பை நன்கறிந்து, தமிழகம் இந்தவேளையிலே எமக்காக எழுச்சிகொண்டு நிற்பது தமிழீழ மக்கள் அனைவருக்கும் எமது விடுதலை இயக்கத்திற்கும் பெருத்த ஆறுதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது. எம்மக்களுக்காக ஆதரவுக் குரல் எழுப்பி, அன்புக்கரம் நீட்டும் தமிழக மக்களுக்கும் தமிழகத் தலைவர்களுக்கும் இந்தியக் தலைவர்களுக்கும் இந்தச் சந்தர்ப்பத்திலே எமது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.இதேநேரம் எமது தமிழீழத் தனியரசுப் போராட்டத்திற்கு ஆதரவாக வலுவாகக் குரலெழுப்புவதோடு, இந்தியாவிற்கும் எமது இயக்கத்திற்கும் இடையிலான நல்லுறவிற்குப் பெரும் இடைஞ்சலாக எழுந்துநிற்கும் எம்மீதான தடையை நீக்குவதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.

எனது அன்பான மக்களே!

சிங்கள அரசியல் உலகத்தில் பெரும் மாற்றங்களோ திருப்பங்களோ நிகழ்ந்துவிடவில்லை. அங்கு அரசியல், போராகப் பேய்வடிவம் எடுத்துநிற்கிறது. அன்பையும் அறத்தையும் போதித்த புத்த பகவானைப் போற்றி வழிபடும் அந்தத் தேசத்திலே இனக்குரோதமும் போர்வெறியும் தலைவிரித்தாடுகின்றன. அங்கு போர்ப் பேரிகைகளைத்தான் எம்மால் கேட்கமுடிகிறது. போரைக் கைவிட்டு, அமைதி வழியிற் பிரச்சினையைத் தீர்க்குமாறு அங்கு எவரும் குரல்கொடுக்கவில்லை. சிங்களத்தின் அரசியல்வாதிகளிலிருந்து ஆன்மீகவாதிகள் வரை, பத்திரிகையாளர்களிருந்து பாமரமக்கள் வரை போருக்கே குரல்கொடுக்கிறார்கள்.
தமிழர் தேசம் போரை விரும்பவில்லை. வன்முறையை விரும்பவில்லை. அகிம்சை வழியில் அமைதி வழியில் நீதி வேண்டிநின்ற எம்மக்களிடம் சிங்களத்தேசந்தான் போரைத் திணித்திருக்கிறது. எமது பிராந்தியத்தைச் சேர்ந்த சார்க் நாட்டுத் தலைவர்கள் கொழும்பிலே கூடியபோது, எமது தேசத்தின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி நாம் அறிவித்த பகைமைத் தவிர்ப்பையும் ஏற்கமறுத்து, அதனை ஏளனஞ்செய்து போரைத் தொடர்ந்து நிற்பதும் சிங்களத்தேசந்தான். ஏற்றுக்கொள்ளவே முடியாத அவமதிப்பூட்டும் நிபந்தனைகளை விதித்துப் போரைத் தொடர்வதும் சிங்களத்தேசந்தான்.
சிங்களத்தேசம் ஒரு பெரும் இனஅழிப்புப் போரை எமது மண்ணிலே நிகழ்த்திவருகிறது. இந்த உண்மையை மூடிமறைத்து, உலகத்தைக் கண்கட்டி ஏமாற்ற சிங்கள அரசுகள் காலங்காலமாகப் பல்வேறு அரசியல் நாடகங்களை அரங்கேற்றிவருகின்றன. வட்டமேசை மாநாட்டில் தொடங்கி, இன்று அனைத்துக்கட்சிக் கூட்டம் என இந்த ஏமாற்று நாடகத்தின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. கடந்துசென்ற இந்த நீண்ட காலஓட்டத்தில், சிங்கள அரசுகள் உலகத்தை ஏமாற்றியதைத் தவிர, தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு உருப்படியான எந்தவொரு தீர்வினையும் முன்வைக்கவில்லை. மாறாகச் சிங்களத்தேசம் தனது படைக்கலச் சக்தியால் தமிழர் நிலங்களைப் பற்றியெரிய வைத்திருக்கிறது. தமிழரது அமைதியைக் கெடுத்து, அவர்களது நிலத்தில் அமைந்த வாழ்வை அழித்து, அவர்களை அகதிகளாக அலையவைத்திருக்கிறது. தமிழரின் மூலாதாரக் கோரிக்கைகளை ஏற்கமறுத்து, தமிழர் தேசத்தை இரண்டாகப் பிளந்து, அங்குத் தமிழர் விரோத ஆயுதக்குழுக்களை ஆட்சியில் அமர்த்தி, இராணுவப் பேயாட்சி நடாத்துகிறது. புலிகளைத் தோற்கடித்த பின்னர்தான் தமது தீர்வுத்திட்டத்தை அறிவிப்போம் எனக்கூறிக்கொண்டு, போரை நடாத்துகிறது. தமிழர்களைக் கொடுமைப்படுத்திக் கொன்றொழித்த பின்னர், சிங்களம் யாருக்குத் தீர்வை முன்வைக்கப்போகிறது? தமிழரின் உண்மையான பிரதிநிதிகளை, அவர்களது பேரம்பேசும் சக்தியை அழித்துவிட்டு, எப்படிச் சிங்களம் தீர்வை முன்வைக்கப்போகிறது? தமிழரின் வரலாற்றுச் சொத்தான தாயக நிலத்தையே ஏற்கமறுக்கும் சிங்களம், எப்படி எமது மக்களுக்கு ஒரு நீதியான தீர்வை முன்வைக்கப்போகிறது?
தமிழரின் தேசியப் பிரச்சினை விடயத்தில், சிங்களம் அடக்குமுறை என்ற ஒரே பாதையில்தான் சென்றுகொண்டிருக்கிறது. இராணுவ வன்முறைப் பாதையைக் கைவிட்டு, சிங்களம் நீதி வழங்கும் என எமது மக்கள் வைத்திருந்த சிறிய நம்பிக்கையும் இன்று அடியோடு அழிந்துவிட்டது. சிங்களத்தேசத்திலே கடந்த அறுபது ஆண்டுகளாக நிகழாத அரசியல் மாற்றம் இனிவரும் காலங்களில் நிகழ்ந்துவிடப்போவதுமில்லை, அப்படி நம்பி ஏமாறுவதற்கு எமது மக்களும் தயாராக இல்லை.

பூமிப்பந்திலே ஈழத்தமிழினம் ஒரு சிறிய தேசமாக இருக்கின்றபோதும் நாம் பெரும் வலிமை வாய்ந்த ஒரு சக்திமிக்க இனம். தன்னிகரற்ற ஒரு தனித்துவமான இனம். தனித்துவமான மொழியையும் பண்பாட்டு வாழ்வையும் வரலாற்றையும் கொண்ட ஒரு பெருமைமிக்க இனம். இப்படியான எமது அருமை பெருமைகளையெல்லாம் அழித்து, தமிழீழத்தேசத்திலே தமிழரின் இறையாண்மையைத் தகர்த்துவிட்டு, இராணுவப் பலத்தாற் சிங்களம் தனது இறையாண்மையைத் திணித்துவிடத் துடிக்கிறது. தமிழரின் சுதந்திர இயக்கம் என்ற வகையில், நாம் எமது மண்ணில் சிங்கள ஆக்கிரமிப்பிற்கோ சிங்கள ஆதிக்கத்திற்கோ என்றுமே இடமளிக்கப்போவதில்லை.

எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காகத் தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.

இந்த வரலாற்றுச் சூழமைவில், தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி, எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன். அத்துடன், தங்களது தாராள உதவிகளை வழங்கித் தொடர்ந்தும் பங்களிக்குமாறும் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன். இந்த சந்தர்ப்பத்திலே தேச விடுதலைப் பணியைத் தீவிரமாக முன்னெடுத்துவருகின்ற புலம்பெயர்ந்து வாழும் எமது இளைய சமுதாயத்தினருக்கும் எனது அன்பையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்துச் சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்கள் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோமென உறுதியெடுத்துக்கொள்வோமாக.

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"


வே. பிரபாகரன்
தலைவர்
தமிழீழ விடுதலைப் புலிகள்.
___________

** மாவீரர்கள் அனைவருக்கும் தமிழீழ தேசியத் தலைவர்- தளபதிகள் முதன்மைச் சுடரேற்றி வணக்கம்

தாயக விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்கள் அனைவருக்கும் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களும் தளபதிகள் மற்றும் பொறுப்பாளர்களும் முதன்மைச்சுடரை ஏற்றி வணக்கம் செலுத்தியுள்ளனர்.


தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் மாவீரர் நாள் உரையை இன்று வியாழக்கிழமை பிற்பகல் 5:40 நிமிடத்துக்கு நிகழ்த்தினார்.

தொடர்ந்து மாவீரர்கள் அனைவரையும் ஒன்று சேரப்போற்றும் தூயவேளை 6.05 நிமிடத்துக்கு நினைவொலி எழுப்பல் மூலம் தொடங்கியது.
எங்கும் எழுப்பப்பட்ட நினைவொலியில் மாவீரர்களின் வீரம் ஒலித்து தாய் மண்ணை நிரப்பியது.


தொடர்ந்து 6.06 நிமிடத்துக்கு மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது.
6.07 நிமிடத்துக்கு தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் மாவீரர்களுக்கான முதன்மைச்சுடரை ஏற்றி வணக்கம் செலுத்தினார்.

சமவேளையில் மாவீரர் துயிலுமில்லங்கள், மாதிரி மாவீரர் துயிலுமில்லங்கள், மாவீரர் மண்டபங்கள், ஒழுங்கமைக்கப்பட்ட இடங்களில் தளபதிகள் மற்றும் பொறுப்பாளர்கள் முதன்மைச்சுடர்களை ஏற்றினர்.

அதேவேளை, மக்களும் சுடர்களை ஏற்றி எங்கள் தாயக விடுதலைக்காக தம்மை ஈந்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர்.

மக்களின் வீடுகளிலும் சுடர்களை ஏற்றப்பட்டன. சிறிலங்கா படை வல்வளைப்புப் பகுதிகளில் மக்கள் தமது அகங்களில் சுடர்களை ஏற்றினர்.
இதேவேளை, புலம்பெயர் நாடுகள் அனைத்திலும் மாவீரர்களுக்கு நினைவொலி எழுப்பப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு சுடர்கள் ஏற்றப்பட்டன.

அம்பாறை மாவட்டத்தில்...

அம்பாறை மாவட்டம் பொத்துவில் சிறப்பாக அமைக்கப்பட்ட இடமொன்றில் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெற்றன.

அம்பாறை மாவட்ட சிறப்புத்தளபதி கேணல் ராம் ஈகைச்சுடரேற்றி மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினார்.

கஞ்சிகுடிச்சாறு பகுதியில் சிறப்பாக அமைக்கப்பட்ட இடமொன்றில் அம்பாறை மாவட்ட தளபதி நகுலன் ஈகைச்சுடரேற்றி மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில்...

மட்டக்களப்பில் தரவை துயிலுமில்லத்துக்கு தளபதி உமாராம்

தாண்டியடி துயிலுமில்லத்துக்கு மாவடி மும்மாரிக் கோட்ட படையப் பொறுப்பாளர் கலைமருதன்

மாவடி மும்மாரியில் மாவடி மும்மாரிக் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் பொன்மதன்

வாகரைப்பகுதியில் ஆண்டாங்குளம் துயிலுமில்லத்துக்கு ஆண்டான்குளம் கோட்டப் படையப் பொறுப்பாளர் புஸ்பன்

கரடியனாற்றுப் பகுதியில் கரடியனாற்று கோட்ட படையப் பொறுப்பாளர் மோகன்

ஆகியோர் முதன்மைச்சுடர்களை ஏற்றினர்.

வன்னியில்...

கிளிநொச்சி நகரில் உள்ள கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் தளபதி கேணல் தீபன் விசுவமடு மாவீரர் துயிலுமில்லத்தில் மட்டக்களப்பு மாவட்ட சிறப்புத்தளபதி கீர்த்தி

முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் தளபதி கேணல் சொர்ணம்

அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் கடற்புலிகளின் மகளிர் சிறப்புத்தளபதி பூரணி

உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் கடற்புலிகளின் துணைத்தளபதி விநாயகம்

முல்லைத்தீவு கடலில் கடற்புலிகளின் சிறப்புத்தளபதி கேணல் சூசை

வட்டக்கச்சி மாதிரி மாவீரர் துயிலுமில்லத்தில் செஞ்சோலைப் பொறுப்பாளர் சுடர்மகள்

கண்டாவளை மாதிரி மாவீரர் துயிலுமில்லத்தில் சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணி சிறப்புத்தளபதி விமல்

உடையார்கட்டு மாதிரி மாவீரர் துயிலுமில்லத்தில் படைய தொடக்கப் பயிற்சிக்கல்லூரி சிறப்புத்தளபதி கேணல் ஆதவன்

புதுக்குடியிருப்பு மாதிரி மாவீரர் துயிலுமில்லத்தில் தமிழீழ நிதித்துறைப் பொறுப்பாளர் தமிழ்க்குமரன்

ஒட்டுசுட்டான் மாதிரி மாவீரர் துயிலுமில்லத்தில் தளபதி கேணல் ஜெயம்

மட்டக்களப்பு-அம்பாறை மாவீரர் மண்டபத்தில் ஜெயந்தன் படையணி ஆளுகைப் பொறுப்பாளர் பவான்

இம்ரான்-பாண்டியன் படையணி மாவீரர் மண்டபத்தில் கிளிநொச்சி கட்டளைத்தளபதி வேலவன்

லெப். கேணல் குட்டிசிறீ மோட்டார் படையணி மாவீரர் மண்டபத்தில் படையணி நிர்வாகப் பொறுப்பாளர் கலைச்செல்வன்

ஆகியோர் முதன்மைச்சுடர்களை ஏற்றினர்.
சிறிலங்கா படை வல்வளைப்பால் தமது மண்ணை இழந்து இடம்பெயர்ந்த மக்கள் மாதிரி மாவீரர் துயிலுமில்லங்களில் தமது உறவுகளுக்காக உணர்வெழுச்சியுடன் சுடர்களை ஏற்றி வழிபட்டனர்.

தாய்மண்ணில் தமது உறவுகளுக்கு சுடர்களை ஏற்ற வேண்டும் என்ற உறுதியை எடுத்து அவர்கள் மாவீரர்களின் உணர்வில் கலந்திருந்தனர்.
சுடர்களின் ஒளியில் மாவீரர்களின் ஈகம் சுடர்விட்டது.கிளிநொச்சி நகரினை இன்று கைப்பற்றி தமது சிங்கக்கொடியினை ஏற்றுவதற்கு சிறிலங்கா படைத்தரப்பு திடசங்கற்பம் பூண்டு கடந்த சில நாட்களாக கடுமையாக பல முன்நகர்வு முயற்சிகளினை மேற்கொண்டிருந்தது. இம் முயற்சிகள் யாவற்றினையும் விடுதலைப் புலிகள் முறியடித்து புலிகளின் தளபதிகளில் ஒருவரான கேணல் தீபன் கிளிநொச்சி நகரில் உள்ள கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் முதன்மைச் சுடரினை ஏற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
___________
Puthinam.com

** தமிழர் - சிங்களவர்களை பிரித்து வைக்க வேண்டிய பொறுப்பு பிரித்தானியாவிற்கே உள்ளது - வைகோ

தமிழர் - சிங்களவர்களை பிரித்து வைக்க வேண்டிய தார்மீக பொறுப்பு பிரித்தானியாவிற்கே உள்ளது என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலர் வைகோ பிரித்தானியாவில் இடம்பெற்ற பிரித்தானிய அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.



நேற்று முன்தினம் பிரித்தானிய வந்திருந்த வைகோ அவர்கள் நேற்று நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினர். 1833ம் ஆண்டு இலங்கையை ஆக்கிரமித்த பிரித்தானியா தங்களின் ஆட்சி வசதிக்காக சிங்கள மக்களின் தேசத்தையும் தமிழ் மக்களின் தேசத்தையும் ஒன்றாக இணைத்து ஆட்சி நடத்தினார்கள். 1948ம் ஆண்டு நாட்டைவிட்டு வெளியேறும் போது பெரும்பான்மை சிங்கள இனத்திடம் மட்டும் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு திரும்பிவிட்டார்கள்.


பிரித்தானியாவின் இந்த நடவடிக்கையே தமிழ் மக்களின் இத்தனை அவலங்களுக்கும் காரணம் என்பதை தெளிவு படுத்தியவர், இந்த நிலைமைக்கு காரணமான பிரித்தானியா தமிழ் மக்களுக்கான நீதி கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டியது அவர்களின் தார்மீக கடமை என்றும் எடுத்துக் கூறினார்.
இதேவேளை, நாளை பிரித்தானியாவில் இடம்பெறும் தமிழ் தேசிய மாவீரர் நாள் நினைவு நிகழ்விலும் வைகோ அவர்கள் பங்கேற்று உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
_________
Sankathi.com

** தேசியத் தலைவரின் பணிப்பின் பேரில் பிறந்த நாள் வாழ்த்து நிகழ்ச்சிகள் நிறுத்தம்

சிங்கள இனவெறி அரசின் ஆக்கிரமிப்புப் போரினால் தமிழீழ மக்கள் துயருரும் இந்த வேளையில் தனது பிறந்த நாள் நிகழ்ச்சிகள் எதனையும் நடத்த வேண்டாம் என தமிழீழ தேசியத் தலைவர் பணித்ததற்கு அமைய பிறந்த நாள் வாழ்த்து நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

தமிழீழ தனியரசுக்கான விடுதலைப் போராட்டத்தை தலைமை ஏற்று வீச்சாக முன்நகர்த்திக் கொண்டிருக்கும் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் இன்று 54 ஆவது அகவை காண்கிறார்.
வழமையாக அவரது பிறந்த நாள் வாழ்த்து நிகழ்வுகள் மக்களாலும் போராளிகளாலும் முன்னெடுக்கப்படுவது உண்டு. ஆனால், இம்முறை அந்த வகை வாழ்த்து நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என தேசியத் தலைவர் பணித்துள்ளார்.

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபகாரன் அவர்களின் பிறப்பு தமிழினத்தின் எழுச்சிக்கானதாகியுள்ளது.

தமிழ் இனத்தின் விடுதலைக்கான எழுச்சி நாளே தேசியத் தலைவரின் பிறந்த நாள் ஆகும். 2500-க்கும் அதிகமான ஆண்டுகள் தமிழ் இனத்தின் அடிமை வரலாற்றில் தமிழினம் விடுதலை பெற வேண்டும் என்ற எண்ணத்தை நம்பிக்கையுடன் கட்டி எழுப்பி அதன் செயல் வடிவமாக ஆயுதப் போராட்டத்தை வளர்த்தெடுத்து இன்று உலகில் தமிழ் இனத்தை தலைநிமிர வைத்து அவர்களுக்கு முகவரியைப் பெற்றுக்கொடுத்துள்ளார் தேசியத் தலைவர் என்று ஒட்டுமொத்த உலகத் தமிழினமும் தமிழறிஞர்களும் பதிவு செய்துள்ளனர்.

உலகில் தமிழனுக்கு என்று நவீன முப்படைகளையும் கட்டி எழுப்பியுள்ள தலைவராகவும்- உலக விடுதலைப் போராட்டங்களின் வரலாற்றில் முப்படைகளையும் கொண்ட ஒரேயொரு விடுதலை அமைப்பாக விடுதலைப் புலிகள் அமைப்பை கட்டி எழுப்பியவராகவும் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் விளங்குகின்றார்.

சிங்களப் பேரினவாத அரசாங்கமானது தனது லட்சத்துக்கும் அதிகமான படையினரை கொண்டு உலக வல்லாண்மைகளின் துணையோடு அதிநவீன முப்படைகளையும் கொண்டு தமிழ் இனத்தை அழிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்ற வரலாற்றில் இந்தப் பெரும் படையினை எதிர்கொண்டு தமிழினத்தை காத்து வருகின்றார் தேசியத் தலைவர்.
தேசியத் தலைவரின் போரியல் நுட்பம் உலகத்தில் உள்ள படைத்துறை நிபுணர்களால் இன்று வியந்து பார்க்கப்படுகின்றது.

சிறிலங்கா படைகளுடன் போரிட்ட அதேவேளை, 1987 ஆம் ஆண்டு தொடக்கம் 1990 ஆம் ஆண்டு வரை இந்திய வல்லரசுப் படைகளை நேரடியாக எதிர்கொண்டு வெற்றி பெற்று தமிழினத்தின் விடுதலைப் படையை உலகத்தால் வியப்புறப் பார்க்க வைத்த தேசியத் தலைவர் இன்று தமிழனுக்கு என்று ஒரு மரபு போர்ப்படையை வைத்துள்ள பெருமையையும் பெற்றுக்கொடுத்துள்ளார்.

உலகு எங்கும் வாழும் ஒன்பது கோடி தமிழர்களின் முகமாக தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் விளங்குகின்றார்.இன்று சிங்களப் பேரினவாத அரசும் இயற்கையும் தமிழ் இனத்தை இடம்பெயரச்செய்து சொல்லொண்ணா அவலங்களுக்குள் தள்ளியுள்ளன.இந்த அவலங்களின் மத்தியில் இந்த இனத்துக்கு உறுதியையும் நம்பிக்கையையும் பெற்றுக் கொடுத்துள்ளார் தேசியத் தலைவர்.
__________
Puthinam.com

Wednesday 26 November 2008

-
-
-
தமிழீழத் தேசியத் தலைவருக்கு 54வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.





---------------------------_--வடமராட்சி கிழக்கு மக்கள்
-
-
-
-
-******************************************************************
-******************************************************************
-

** இயக்குநர்கள் சீமான், அமீருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் இரத்து - ராமநாதபுரம் நீதிமன்றம் உத்தரவு

பிணையில் விடுவிக்கப்பட்ட திரைப்பட இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை ராமநாதபுரம் செசன்சு நீதிமன்றம் இரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்து தமிழ் திரையுலகினர் சார்பில் ராமேசுவரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோர் இந்திய இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதனை தொடர்ந்து கடந்த 24.10.2008 அன்று சீமான், அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 30.10.08 அன்று இவர்களுக்கு நிபந்தனையின் அடிப்படையில் பிணை வழங்கப்பட்டது. நீதிமன்ற நிபந்தனையின் படி இவர்கள் மதுரையில் தங்கியிருந்து தினமும் நீதிமன்றத்தில் கையெழுத்து போட்டு வந்தனர்.

இந்த நிலையில் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை தளர்த்தக்கோரி ராமநாதபுரம் மாவட்ட செசன்சு நீதிமன்றத்தில் சீமான், அமீர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு ராமநாதபுரம் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, "சீமான், அமீர் ஆகியோர் பிரபல இயக்குநர்களாக இருந்து வருகின்றனர். அமீர் சொந்தமாக 'யோகி' என்ற படத்தை தயாரித்து இயக்கி வருவதுடன் அந்த படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இதனால் இவர்களது சினிமா தொழில் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே நிபந்தனைகளை இரத்து செய்ய வேண்டும்'' என்று அவர்களது வழங்கறிஞர்கள் வாதிட்டனர்.

இதனை ஏற்றுக்கொண்ட மாவட்ட நீதிபதி ஜெயபாலன், இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை முழுவதுமாக இரத்து செய்து உத்தரவிட்டார். நிபந்தனைகள் இரத்து செய்யப்பட்டதால் இருவரும் மீண்டும் சென்னை சென்று வழக்கமான பணிகளில் ஈடுபடுவார்கள் என்று அவர்களது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
__________
Sankathi.com

** வன்னியில் கடும் மழையிலும் எழுச்சியுடன் மாவீரர் நாள் நிகழ்வுகள் ஆரம்பம்

தமிழீழ விடுதலைக்காய் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்ய மாவீரர்களை நினைவு கோரும் முதலாம் நிகழ்வுகள் வன்னிப் பிரதேசத்தில் எழுச்சியுடம் ஆரம்பமாகியுள்ளன.இன்று செவ்வாய்க்கிழமை காலை 8:30 மணிக்கு திருவுருவப்படங்களுக்கு ஈகைச்சுடரேற்றல், மலர்வணக்கம், அகவணக்கம் செலுத்தி மாவீரர் நாள் நிகழ்வுகள் ஆரம்பமாகின. சிவப்பு, மஞ்சள் வர்ண கொடிகள் கட்டப்பட்டு மாவீரர்களின் திருவுருவப் படங்கள் கொண்ட மாவீரர் மண்டபங்களுக்கு கடும் மழையிலும் பொதுமக்கள் சென்று தமது வணக்கத்தைச் செலுத்தியுள்ளனர்.

போராளிகளின் முகாங்களில் பொதுச்சுடரேற்றல், தேசியக் கொடியேற்றல், திருவுருவப்படங்களுக்கு ஈகைச்சுடரேற்றல், மலர்வணக்கம், அகவணக்கம், உறுதியுரை எடுத்தல் மாவீரர் நாள் நிகழ்வுகள் ஆரம்பமாகின.மாவீரர் துயிலும் இல்லங்களில் நாளை காலை 8:30 மணிக்கு ஏற்றப்படும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மாவீரர் நாள் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.
________
Pathivu.com

Tuesday 25 November 2008

** வன்னியில் கடும் மழையால் இடம்பெயர்ந்த மக்கள் பாதிப்பு


வன்னியில் கடந்த மூன்று நாட்களாக பெய்துவரும் தொடர் மழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இவ்வெள்ளப்பெருக்குக் காரணமாக இடம்பெயர்ந்து தற்காலிக குடியிருப்புக்களில் தங்கியிருந்த மக்கள் மீண்டும் இடம்பெயரவேண்டி அவலநிலை ஏற்பட்டுள்ளது.




புளியம்பொக்கணை, தருமபுரம், சுண்டிக்குளம், பிரமந்தனாறு, விசுவமடு புதுக்குடியிருப்பு முதலான பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்களின் குடியிருப்புக்குள் வெள்ளம் பாய்ந்ததில் அம்மக்களின் உடமைகள் சேதமானதோடு தற்காலிக குடிசைகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இக்குடியிருப்புக்களிலிருந்து வெளியேறிய மக்கள் அருகிலுள்ள பாடசாலை கட்டங்களில் தங்கியுள்ளனர்.





இதேவேளை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை வேறு இடங்களுக்கு கொண்டுசென்று தங்கவைக்கும் பணிகளில் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு ஈடுபட்டுவருகின்றது. மழைவெள்ளம் காரணமாக போக்குவரத்துப் பாதைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. பல பாதைகளை ஊடறுத்து வெள்ளம் பாய்கின்றதை பரந்தன் முல்லைத்தீவு பிரதான சாலையான ஏ-35 சாலையில் பல இடங்களில் காணமுடிகின்றது.
ஏனைய சிறுபாதைகளும் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட நிலையில் மக்கள் போக்குவரத்து செய்யமுடியாதநிலை ஏற்பட்டுள்ளது. இம் மழைவெள்ளம் காரணமாக நேற்று பாடசாலைகள் பல இயங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
__________
Sankathi.com

** தமிழீழ மாவீரர் நாள் போற்றப்பட வேண்டிய பண்பாடாகட்டும் - மாவீரர் பணிமனை

தமிழீழ மாவீரர் நாள் போற்றப்பட வேண்டிய பண்பாடாகட்டும் என மாவீரர் பணிமனை இன்று வெளியிட்டுள்ள மாவீரர்நாள் தொடர்பான செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எமது தாயகமாம் தமிழீழ நாட்டின் தேசிய நாட்களில் மாவீரர் நாள் மிக முக்கியமானதாகும். மாவீரர் நாள் என்பது தமிழீழ விடிவிற்காகவும், உயாவிற்காகவும் உழைத்து உயிரைத் தற்கொடையாக ஈந்து இந்த மண்ணுக்கே உரமாகிவிட்டவர்களினதும், எமது மூச்சுடன் கலந்து கலந்து விட்டவர்களினதுமாகிய நினைவு நாளாகும்.

உங்கள் உயிலும் மேலான குழந்தைகளும், எமது சக போராளிகளுமான இம்மாவீரர்களின் தியாகம் அவர்களின் உணர்வுகள், இலட்சியதாகம், கனவுகள் என்பன எம்மால் மறக்கப்பட முடியாதவையாகும். புனிதத்தன்மை வாய்ந்ததுமாகும். காலம் காலமாக நினைவு கூர்ந்து என்றும் போற்றப்பட வேண்டியவையாகும். இம்மாவீரர்களின் நினைவுகள் என்றும் எம்மை வழிநடத்தும் உந்து சக்தியாக இருக்கும்.

மாவீரர்களது இத்தகைய நினைவுகூரல் என்பது ஒரு நிகழ்வாக மட்டும் இருந்து விடாது எமது நாட்டு மக்களின் வரலாற்றுச் சுவடியாகவும் பண்பாட்டிற்குரியவையாகவும் வளர்ந்து வர வேண்டும். இதனைத் தத்துவார்த்தமாகவும் வளர்த்து வர வேண்டும் எனவும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
__________
Sankathi.com

** கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் மறியல் போராட்டம்: பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணகாணோர் கைது!

இலங்கையில் ஈழத் தமிழர்கள் மீதான சிறீலங்கா அரசின் படுகொலைகளைக் கண்டித்தும், போரை நிறுத்தக் கோரியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சாலை மறியலில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் தமிழகக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.



இலங்கையில் ஈழத் தமிழர்கள் மீதான சிறீலங்கா அரசின் படுகொலைகளைக் கண்டித்தும், இந்திய மத்திய அரசு இலங்கை அரசுக்கு அழுத்தத்தை கொடுத்து போரை நிறுத்தக் கோரியும் இன்று செவ்வாய்க்கிழமை கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகத் தலைவர் தா.பாண்டியன் தலைமையில் பல்வேறு கட்சிகளும் இணைந்து தமிழகம் முழுவதும் சாலை, மற்றும் தொடருந்து மறியல் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.




சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட தா.பாண்டியன், இந்திய கம்யூனிஸ்டு தேசியக் குழு உறுப்பினர் நல்லகண்ணு, ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்பட 500‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டுள்ளனர்.
இதேபோ‌ல் த‌ஞ்சை‌, ‌திருவாரூ‌ர், ஈரோடு, ‌திருநெ‌ல்வே‌லி, தூ‌த்து‌க்குடி, மதுரை, ‌திரு‌ச்‌சி, கோய‌ம்பு‌த்தூ‌ர், ஈரோடு, கா‌‌ஞ்‌சிபுர‌ம், ‌திருவ‌ள்ளூ‌ர், சேல‌ம், நாகை உ‌ள்பட த‌மிழக‌ம் முழுவது‌ம் இ‌ன்று நட‌ந்த ர‌யி‌ல் ம‌ற்று‌ம் சாலை ம‌றிய‌லி‌ல் ஆ‌‌யிர‌க்கண‌க்கானோ‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டுள்ளனர்.
_________
Pathivu.com