ராஜீவ் காந்தி கொலையைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.இந்தத் தடை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீட்டிக்கப்படுவது வழக்கம். இடையில் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் மட்டும் மறுபரிசீலனை செய்யலாம் என அன்றைய உள்துறை அமைச்சர் அத்வானி அறிவித்தார். ஆனால் காங்கிரஸின் எதிர்ப்பு காரணமாக இந்த முடிவு கைவிடப்பட்டு, தடை நீட்டிக்கப்பட்டது.
அதன்படி, கடந்த மே 15ம் தேதி மேலும் 2 ஆண்டுகளுக்கு இந்த தடை நீட்டிக்கப்பட்டது.டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்ரம்ஜித் சென் தலைமையிலான சிறப்பு தீர்ப்பாயம், இத்தடையை ஆய்வு செய்தது.மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.பி.மல்கோத்ரா, புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் தடையை நீட்டிப்பதற்கான அவசியத்தை வலியுறுத்தினார்.புலிகளுக்கு ஆதரவாளர்களும் ஏஜென்டுகளும் இந்தியாவில் நிறைய உள்ளனர் என்றும், புலிகள் இயக்கத்தை செயல்பட அனுமதித்தால் இந்தியாவின் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்து ஏற்படும் என்றும் அவர் வாதிட்டார்.
புலிகள் இயக்கத்துக்கு தமிழ்நாட்டிலும் தென் மாநிலங்களிலும் வலுவான தொடர்புகள் உள்ளன. போதைப் பொருள் மற்றும் பெட்ரோல், டீசல் போன்ற பொருட்களை கடத்துவதற்கு தமிழகத்தை தளமாக பயன்படுத்துகின்றனர், என்றும் தெரிவித்தார் மல்கோத்ரா.இதை ஏற்று, புலிகள் இயக்கம் மீதான தடையை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்து நீதிபதி விக்ரம்ஜித் சிங் உத்தரவிட்டார்.
Thatstamil
******
Subscribe to:
Post Comments (Atom)








No comments:
Post a Comment