நான்காவது நாள் முறியடிப்புச சமர்/ படம்; தமிழீழத் தேசியத் தொலைக்காட்சிநான்காவது நாளாகவும் கோணாவிலை கைப்பற்றும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்ட முன்னகர்வுகளை போராளிகள் புதிய வியூகங்களை அமைத்து படையினருக்கு பலத்த இழப்புகளை ஏற்படுத்தியுள்ளனர்.
கோணாவிலைக் கைப்பற்றும் முன்னகர்வுகளில் இதுவரை 57 சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டதோடு, 100க்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தையும் சுட்டிக்காட்டத்தக்கது.இதேபோன்று நேற்று புதன்கிழமை காலை முதல் அக்கராயனிலிருந்து முட்கொம்பன் நேர்ககி சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னகர்களுக்கு எதிராக நத்தப்பட்ட முறியடிப்புச் சமரில் சிறீலங்காப் படையினர் தரப்பில் 20 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 20 படையினர் காயமடைந்துள்ளனர்.கடந்த வியாழக்கிழமை (06-11-2008) அன்றும் வெள்ளிக்கிழமை (07-11-2008) அன்றும் ஏ9 கண்டி நெடுஞ்சாலைமையக் கைப்பற்றும் நோக்குடன் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட வல்வளைப்பு நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது.
இதன்போது 45 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 100 படையினர் காயமடைந்துள்ளனர். மேலும் இரு சடலங்களும், படையக் கருவிகளும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
pathivu.com
*****








No comments:
Post a Comment