Thursday, 13 November 2008

** செம்மன்குன்று முன்னகர்வு முறியடிப்பு: 30 படையினர் பலி! 50 அதிகமானோர் காயம்!

பூநகரி செம்மன்குன்று நோக்கிய சிறீலங்காப் படையினரின் முன்னகர்வும் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் சிறீலங்காப் படையினர் தரப்பில் 30க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 50க்கு அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.கடந்த திங்கட்கிழமை செம்மன்குன்றுப் பகுதியைக் கைப்பற்றும் நோக்குடன் கனரக ஆயுதங்களின் சூட்டாதரவுடன் சிறீலங்காப் படையினரின் 58வது படைப்பிரிவு முன்னகர்வுகளி்ல் ஈடுபட்டது.


செம்மன்குன்று முறியடிப்புத் தாக்குதல் / படம்; தமிழீழ தேசியத் தொலைக்காட்சி

படையினரின் முன்னகர்வுகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் கடும் எதிர்த் தாக்குதலைத் தொடுத்துள்ளனர். இதில் 58வது படைப்பிரிவு 11வது காலாட் பிரிவுக்கு பலத்த ஆளணிச் சேதாரங்கள் ஏற்பட்டுள்ளன.

இதன்போதே சிறீலங்காப் படையினர் தரப்பில் 30க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 50க்கு அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
pathivu.com
*****

No comments: