Friday, 14 November 2008

** முதலமைச்சரும் ஆயுததாரியுமான பிள்ளையானின் செயலாளர் உட்பட இருவர் சுட்டுக்கொலை!

கிழக்கு மாகாண முதலமைச்சரும் ஆயுததாரியுமான பிள்ளையானின் செயலாளர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் கொழும்பு மாவட்டம் நுகேகொட அத்துறுகிரிய பகுதியில் மகிழுந்துந்தில் பயணித்த போதே இவ்விருவர் மீதும் ஆயுததாரிகளால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சடலத்தினுள் பிள்ளையானின் செயலாளரான களுவாஞ்சிக்குடியைச் சொந்த இடமாகக் கொண்ட 38 அகவையுடைய ரகு என்று அழைக்கப்படும் குமாரசுவாமி நந்தகோபன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவர் அவுஸ்ரேலியாவிலிருந்து கொழும்புக்கு வரவழைக்கப்பட்டு, இவரின் பெயரிலேயே கருணா குழுவினர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற கட்சியைப் பதிவு செய்திருந்தனர்.

கருணா - பிள்ளையான் முரண்பாடுகள் வலுவடைந்த நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் இராணுவத் தலைவராக கருணா செயற்படுவார் எனவும், கட்சியின் அரசியற் தலைவராக குமாரசுவாமி நந்தகோபன் செயற்படுவார் எனவும் பிள்ளையான் தரப்பில் அசாத் மெளலாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.கொல்லப்பட்ட மற்றவர் குமாரசுவாமி நந்தகோபனின் சாரதியான 29 அகவையடைய சமீர் ராஜ்குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.சம்பவ இடத்திற்கு பிள்ளையான் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
pathivu.com
*****

No comments: