இலங்கையில் போர் நிறுத்தம் மேற்கொள்வதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் சம்மதித்துள்ள நிலையில் போரை நிறுத்துமாறு சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு இந்திய மத்திய அரசிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் தா.பாண்டியன் நேற்று திங்கட்கிழமை கடிதம் அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு:
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலை தொடர்பாக நான் உங்களின் கவனத்திற்கு கொண்டு வரும் பொருட்டு இக்கடிதத்தை எழுதுகின்றேன்.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான போரை நிறுத்துமாறு தமிழ் நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த குரலில் வேண்டுகோள் விடுத்து வருகின்றன. இந்த போர் தமிழ்நாட்டில் பெரும் கவலையை தோற்றுவித்துள்ளது.

நோர்வேயின் அனுசரணையுடன் 2002 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டிலிருந்து 2008 ஆம் ஆண்டு சிறிலங்கா அரசு ஒரு தலைப்பட்சமாக விலகிக்கொண்டது நீங்கள் அறிந்ததே. இதனால் பல நாடுகள் விசனமடைந்ததுடன் சிறிலங்கா அரசை பேச்சுவார்த்தைக்கு மீள திரும்புமாறு கேட்டிருந்தன.
ஆனால், சிறிலங்கா அரசு வானூர்தி தாக்குதலையும், பீரங்கித் தாக்குதலையும் அதிகரித்திருந்தது. இதனால் பல பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், பெருமளவானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்த மனித அவலங்களுக்கு எதிராக தமிழக மக்கள் குரல் கொடுத்து வருவதுடன், போரை நிறுத்தும் படியும் கோரி வருகின்றனர்.
போரை நிறுத்தி ஒரு போர் நிறுத்தத்தை ஏற்படுத்தும் படியான ஒரு அழுத்தத்தை சிறிலங்கா அரசுக்கு பிரயோக்கிக்கும் படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நான் உங்களை கேட்டுக்கொள்கின்றேன்.
போரை நிறுத்தி ஒரு போர் நிறுத்தத்தை ஏற்படுத்தும் படியான ஒரு அழுத்தத்தை சிறிலங்கா அரசுக்கு பிரயோக்கிக்கும் படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நான் உங்களை கேட்டுக்கொள்கின்றேன்.
போர் நிறுத்தம் தொடர்பாக நாம் விடுதலைப் புலிகளுக்கு விடுத்த அழைப்புக்கு அவர்கள் உடனடியாகவே சாதகமான பதிலை தந்துள்ளனர்.
விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனின் அறிக்கையை நான் இதனுடன் இணைத்துள்ளேன்.
விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனின் அறிக்கையை நான் இதனுடன் இணைத்துள்ளேன்.
இலங்கையில் நடைபெற்று வரும் இனப்போரை நிறுத்துவதில் ஏற்படும் காலதாமதம் இந்தியாவின் பல பகுதிகளில் பல நெருக்கடிகளை தோற்றுவிக்கும். இந்திய மக்களின் சார்பாக இலங்கையின் இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என நாம் விரும்புகின்றோம். இதில் சாதகதான நிலை ஏற்படாவிட்டால் அது நீண்டகால நெருக்கடிகளை தோற்றுவிக்கலாம்.
இதனை அவசர கோரிக்கையாக ஏற்று உடனடியாக இலங்கையில் நடைபெறும் போரை நிறுத்தும் படி எமது கட்சி உங்களை கேட்டுக்கொள்கின்றது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அவசர கோரிக்கையாக ஏற்று உடனடியாக இலங்கையில் நடைபெறும் போரை நிறுத்தும் படி எமது கட்சி உங்களை கேட்டுக்கொள்கின்றது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
puthinam.com
*****

No comments:
Post a Comment