Tuesday, 11 November 2008

** திண்டுக்கல்லில் பெரும் எழுச்சியோடு ஈழத் தமிழர் ஆதரவுப் பேரணி

தமிழ்நாட்டில் உள்ள திண்டுக்கலில் ஈழத் தமிழர் துயர்துடைப்பு குழுவின் சார்பாக முன்னெடுக்கப்பட்ட ஈழத் தமிழர் ஆதரவு அமைதிப்பேரணி மக்களின் பேராதரவோடு நடைபெற்றது.

திண்டுக்கல் குமரன் பூங்காவில் தொடங்கி மணிக்கூண்டு தந்தை பெரியார் சிலை வரை இந்தப் பேரணி நடைபெற்றது.

இந்தப் பேரணியில் ஆசிரியர்கள்- மாணவர்கள்- கிறிஸ்தவ கன்னியர்கள் என பல தரப்பினரும் தன்னார்வத்தோடு கலந்து கொண்டு ஈழத் தமிழ் தொப்புள்கொடி உறவுகளின் விழிநீர் துடைக்க தாய் தமிழகத்தின் கைகள் நீளாது என்ன செய்யும் என பதிவு செய்தனர்.

பெரியார் திராவிடர் கழகத்தின் ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்ட இந்த பேரணியில் தமிழ் உணர்வோடு ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

puthinam.com

No comments: