Monday, 24 November 2008

** பிரான்சில் சிங்களவர்களின் பொய்ப் பிரச்சாரத்திற்கு எதிராக தமிழர்கள் போராட்டம்!


பிரான்சில் இன்று நடைபெற்ற சிங்கள மக்களின் போராட்டத்திற்கு எதிராக தமிழ் மக்கள் ஆர்பாட்டத்தினை நடத்தியுள்ளனர். பிரான்சின் தலைநகர் பரிசிலுள்ள ரொக்கடரோ ஈபிள் கோபுரம் அமைந்துள்ள பகுதியில் சிங்கள அரசு இனப்படுகொலையை நியாயப்படுத்தி, விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரச்சாத்திற்காக ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்திருந்தது.


ஆரம்பத்தில் இந்தப் போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி வழங்காதபோதும் இறுதியில் அனுமதி வழங்கியுள்ளனர். அனுமதியைப் பெறுவதற்காக சிறிலங்கா தூதரகம் அனைத்து வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்டிருந்ததாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சிங்களவர்களின் உண்மைக்குப் புறம்பான போராட்டத்தை அம்பலப்படுத்தவும், சிறீலங்காவின் இனப்படுகொலையை அம்பலப்படுத்தும் முகமாகவும் தமிழ் மக்களும் பெருமளவில் அப்பகுதியில் குவிந்து போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

ஆனால், சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதையும், தமிழ் மக்களுக்கு அனுமதி வழங்கப்படாமையையும் எடுத்தக்கூறிய காவல்துறையினர், தமிழ் மக்களை அங்கிருந்து கலைந்துபோகுமாறு வலியுறுத்தியுள்ளனர். எனினும், அங்கு சென்றிருந்த தமிழ் மக்கள் பிரெஞ்சுக் கொடி, ஐரோப்பிய ஒன்றியக்கொடி, தமிழீழ தேசியக் கொடி ஆகியவற்றை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் சிறீலங்காவின் இனப்படுகொலையை அம்பலப்படுத்தும் துண்டுப் பிரசுரங்களையும் மக்களுக்கு விநியோகித்தனர்.


இதேவேளை, தமிழ் மக்களின் நியாயமான போராட்டங்களுக்கு அனுமதி வழங்க மறுக்கும் பிரெஞ்சு காவல்துறையினர், சிறிலங்காவின் நியாயமற்ற போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளமை தமிழ் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் கொடுத்துள்ளதாக தமிழ் மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.


இதேவேளை, இவ்வார்ப்பட்டத்தின் பின்னர் பரிசின் தமிழர்களின் அதிக வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ள லாச்சப்பல் பகுதியில் தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் கடுமையான வாய்த்தர்க்கம் இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட ஒரு சிங்கள தேனீர் கடையில் ஒன்றுகூடும் சிங்கள இளைஞர்கள் சிலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்ததுடன், தமிழீழத் தேசியக்கொடியை அவமதிப்புச் செய்தமையால் ஆத்திரமடைந்திருந்த நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள், குறிப்பிட்ட தேனீர் நிலையத்தை முற்றுகையிட்டனர். எனினும், பின்னர் தமிழ் இளைஞர்கள் தமது கடும் கட்டணங்களை தெரிவித்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றதாக தெரியவருகின்றது.
இது தொடர்பான ஒளிப்பதிவைப் பார்வையிட...
_________
sankathi.com

No comments: