இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், அங்கு உடனடியாகச் சண்டை நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்திய தலைநகரான புதுடில்லியில் உள்ள நாடாளுமன்றம் நோக்கி இன்று ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்தினர்.-
இப்பேரணி புதுடில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுடில்லி பல்கலைக்கழகம், ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களின் மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.
-
தமிழகத்திலிருந்து சிறப்புத் தொடருந்து மூலம் புதுடில்லிக்குச் சென்ற 2 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்களும் இதில் பங்கேற்றனர். புதுடில்லியில் பரகதாம்பா சாலையிலிருந்து, நாடாளுமன்றம் முன்பு உள்ள சந்தர் மந்தர் வரை நடைபெற்ற இப்பேரணியில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதனைக் கண்டித்தும், சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
நாடாளுமன்றம் முன்பு பேரணி முடிவடைந்ததும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. --
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் து.ராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான என்.சிறீகாந்தா, எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் து.ராஜா உரையாற்றிய போது தெரிவித்துள்ளதாவது:
சிறிலங்காவுக்கு அளித்து வரும் ஆயுத உதவிகளை இந்தியா உடனடியாக நிறுத்த வேவண்டும்.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், சிங்களப் படையினருக்கும் இடையே நடைபெற்று வரும் சண்டையால் வடக்கு இலங்கையில் வாழும் அப்பாவித் தமிழ் மக்களுக்குச் சொல்லொண்ணாத் துயரம் ஏற்பட்டிருக்கிறது.
எனவே, இப்போரை நிறுத்த தேவையான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும். இலங்கைச் சிக்கலை அமைதிப் பேச்சு மூலமாகத்தான் தீர்க்க முடியும் என்பதை சிறிலங்கா அரசுக்கு எடுத்துக் கூற வேண்டும்.
-
-ஆபத்தை ஏற்படுத்தாத ஆயுதங்களை மட்டுமே சிறிலங்காவுக்கு வழங்குவதாக இந்தியா கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது.
சிறிலங்காவுக்கு எந்தவிதமான ஆயுதங்களை இந்தியா வழங்கினாலும், தமிழர்களைத் தாக்குவதற்கு அதனை சிறிலங்கா அரசு பயன்படுத்தும்.
எனவே, சிறிலங்காவுக்கு எந்தவிதமான ஆயுதங்களையும் வழங்கக்கூடாது என்று தனது உரையின் போது ராஜா கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உரையாற்றிய போது தெரிவித்துள்ளதாவது:
இலங்கையில் சண்டை நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து தமிழர்கள் மீதான தாக்குதல் நேற்று ஓய்ந்திருந்தது.
-சிறிலங்காவுக்கு எந்தவிதமான ஆயுதங்களை இந்தியா வழங்கினாலும், தமிழர்களைத் தாக்குவதற்கு அதனை சிறிலங்கா அரசு பயன்படுத்தும்.
எனவே, சிறிலங்காவுக்கு எந்தவிதமான ஆயுதங்களையும் வழங்கக்கூடாது என்று தனது உரையின் போது ராஜா கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உரையாற்றிய போது தெரிவித்துள்ளதாவது:
இலங்கையில் சண்டை நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து தமிழர்கள் மீதான தாக்குதல் நேற்று ஓய்ந்திருந்தது.
ஆனால், அனைத்துக் கட்சிக் கூட்டத் தீர்மானத்தின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது தெரிந்ததும் தமிழர்கள் மீதான தாக்குதலை சிறிலங்கா அரசு மீண்டும் தொடங்கியிருக்கிறது.
எனவே, இந்தியா உடனடியாகத் தலையிட்டு இலங்கையில் சண்டை நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்று தனது உரையில் வலியுறுத்தினார் சிவாஜிலிங்கம்.
எனவே, இந்தியா உடனடியாகத் தலையிட்டு இலங்கையில் சண்டை நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்று தனது உரையில் வலியுறுத்தினார் சிவாஜிலிங்கம்.
puthinam.com
*****

No comments:
Post a Comment