இந்தியப் பிரதமரைச் சந்தித்துப் பேசிய பிறகு ‘போர் நிறுத்தம் செய்ய முடியாது' என இலங்கை அதிபர் இராசபக்சே அறிவித்திருப்பது எதிர்பாராதது அல்ல. இன வெறியும் போர் வெறியும் பிடித்து ஆட்டும் சூழ்நிலையில் அவர் இன்னொரு இட்லராக உருவாகிக்கொண்டிருக்கிறார் என்பதை உலகம் உணர வேண்டும் தமிழர் தேசிய இயகத் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்த கண்டன அறிக்கை வருமாறு:-
இந்தியப் பிரதமரைச் சந்தித்துப் பேசிய பிறகு ‘போர் நிறுத்தம் செய்ய முடியாது' என இலங்கை அதிபர் இராசபக்சே அறிவித்திருப்பது எதிர்பாராதது அல்ல. இன வெறியும் போர் வெறியும் பிடித்து ஆட்டும் சூழ்நிலையில் அவர் இன்னொரு இட்லராக உருவாகிக்கொண்டிருக்கிறார் என்பதை உலகம் உணர வேண்டும்.இந்தியப் பிரதமரின் வேண்டுகோளையும், தமிழக சட்டமன்றம் ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தையும் மதிக்க அவர் தயாராக இல்லை. அவருக்குப் பின்னணியில் உள்ள இந்தியாவின் எதிரி நாடுகளே அவரது துணிவிற்குக் காரணம்.
இனி இந்தியா என்ன செய்யப் போகிறது? ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை வேடிக்கைப் பார்க்கப் போகிறதா? அல்லது உறுதியான நடவடிக்கை எடுத்துப் போரை நிறுத்தப் போகிறதா? என்பதை அறிய தமிழக மக்கள் துடிக்கிறார்கள். விரைந்து செயல்பட இந்திய அரசு தவறினால் தமிழகம் எரிமைலையாக வெடிக்கும் என எச்சரிக்கிறேன்.
pathivu.com
******








No comments:
Post a Comment