Friday, 7 November 2008

** மாவீரர்களுக்கு கல்லறை அமைப்பதை தமிழக முதல்வர் அவமதிப்பு - உலகத் தமிழர்கள் பேரதிர்ச்சி

தமிழர்களுக்கு உரிமை பெற்றுத் தர போர்க்கோலம் பூண்டவர்கள், பகைவர்கள் மீது பாய்ந்திடாமல், சகோதர யுத்தம் நடத்துவதிலேயும், அவற்றில் மாண்டு மடியும் தமது பழைய களத் தளபதிகளுக்கு சமாதிகள் அமைத்திடும் பணியிலேயும் காட்டிய விறுவிறுப்பை இன ஒற்றுமையில் காட்டத் தேவையில்லையென்றே கருதிச் செயல்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார். நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையொன்றிலேயே இந்தக் குற்றச்சாட்டை அவர் சுமத்தியுள்ளார்.

தமிழக முதல்வரின் இந்த அறிக்கை உலகத் தமிழர்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இதுதொடர்பாக இணையத் தளங்களில் கடும் கண்டனங்களை தமிழ் மக்கள் வெளியிட்டு வருகின்றனர்.
****

No comments: