மாவீரர் நாள் நெருங்கி வருவதனால் தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் போரை தொடங்கலாம் என்ற கலகத்தில் சிறிலங்கா படைத்தரப்பு உள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.இது தொடா்பில் அந்த ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு:
வரவு-செலவு திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் போது போர்முனையில் இருந்து ஒரு வெற்றிச் செய்தியையும் அறிவிப்பது என்ற சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் திட்டம் இரண்டாவது தடவையாக கடந்த வாரமும் வெற்றி பெறவில்லை. நிதியமைச்சரும், படைகளின் பிரதம தளபதியும் அவரே. கடந்த வருடம் நாடாளுமன்றத்தில் வரவு-செலவு திட்டத்தை சமர்ப்பிக்கும் போது களமுனையில் இருந்து ஒரு வெற்றிச் செய்தியையும் அறிவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் முகமாலையில் படை நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்படடிருந்தது. எனினும் அது வெற்றி பெறவில்லை.
-
-
இராணுவம் தற்போது மூன்று முனைகளில் தீவிரமான நகர்வுகளில் ஈடுபட்டு வருகின்றது.
-
57 ஆவது படையணி கிளிநொச்சியை கைப்பற்றும் நோக்கத்துடன் நகர்வில் ஈடுபட்டு வருகின்றது.
-58 ஆவது படையணி பூநகரி நோக்கிய நகர்வில் ஈடுபட்டு வருகின்றது. அது தற்போது பூநகரியில் இருந்து 8 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது.
-
மூன்றாவது களமுனையாக மணலாறு களமுனை உள்ளது.
இந்த வாரத்தில் பூநகரி அல்லது கிளிநொச்சி படையினரிடம் வீழ்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்பட்ட போதும் விடுதலைப் புலிகள் கடுமையான எதிர்ப்பை காட்டியிருந்தனர்.
-மூன்றாவது களமுனையாக மணலாறு களமுனை உள்ளது.
இந்த வாரத்தில் பூநகரி அல்லது கிளிநொச்சி படையினரிடம் வீழ்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்பட்ட போதும் விடுதலைப் புலிகள் கடுமையான எதிர்ப்பை காட்டியிருந்தனர்.
தற்காப்பு போர் மூலம் அவர்கள் இறுதி வெற்றியை இந்த வாரம் தடுத்திருந்தால், அது ஒரு பெரிய மாற்றம். அவர்கள் வலிந்த தாக்குதல் நடவடிக்கைகளை தொடங்க போகின்றனர் என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளன.இது எதிர்வரும் மாவீரர் நாள் தொடர்பான அச்சங்களை அதிகரித்துள்ளன.
-இந்த நவம்பர் மாதம் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 54 ஆவது பிறந்த நாளாகும்.மாவீரர் நாளின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொள்கை விளக்க உரையினை ஆற்றுவது உண்டு. இதன் போது விடுதலைப் புலிகள் அமைப்பு ஆற்றிய சாதனைகளையும் அவர் தெரிவிப்பதுண்டு.
-அரசும் அனைத்துலக இராஜதந்திரிகளும் இந்த உரையினை உன்னிப்பாக அவதானித்து வருவது உண்டு. மாவீரர் நாள் அண்மித்து வருவது படைத்தரப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு களமுனைகளுக்கு அப்பாலும் பாதுகாப்பை அதிகரித்து வருகின்றது.
முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்புக்கள் மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளன. படையினரின் புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் பல பகுதிகள் தரை மற்றும் வான் தாக்குதல் ஆபத்துக்களில் இருப்பதாக அரசு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
கொழும்பில் உள்ள முக்கிய பகுதிகளின் பாதுகாப்புக்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த எச்சரிக்கைகளை தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை கறுப்பு உடை தரித்த விடுதலைப் புலிகளின் அணி ஒன்று பனாமா காட்டுப்பகுதியில் தரையிறங்கி உள்ளதாக படைத்தரப்புக்கு தகவல்கள் கிடைத்திருந்தன.விடுதலைப் புலிகளின் இந்த அணியினரை அப்பகுதி கிராம மக்கள் அவதானித்துள்ளனர்.
மாவீரர் நாளுக்கு முன்னராக ஒரு வெற்றியை பெறும் நோக்கத்துடன் விடுதலைப் புலிகள் வலிந்த தாக்குதல் உத்திக்கு மாறலாம் என இராணுவத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
-
எனவே எதிர்வரும் 18 நாட்களும் மிகவும் அதிக பாதுகாப்பு கொண்ட நாட்களாகவே இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே எதிர்வரும் 18 நாட்களும் மிகவும் அதிக பாதுகாப்பு கொண்ட நாட்களாகவே இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
puthinam.com
******








No comments:
Post a Comment