Sunday, 16 November 2008

** நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்!

இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து விவாதிக்க நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இதற்கு ஏற்பாடு செய்துள்ளது.இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்த நிலையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அது ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இலங்கைத் தமிழ் மக்கள், ராணுவ தாக்குதலால் தொடர்ந்து படுகொலைக்கும், பாதிப்புகளுக்கும் உள்ளாகி வருகின்றனர். பாதிக்கப்பட்டு வரும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இலங்கைத் தமிழ் மக்களை பாதுகாப்பதற்காக அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்வதற்காக அனைத்துக் கட்சி மற்றும் முக்கிய அமைப்புகளின் கூட்டம் திங்கள்கிழமை காலை 11 மணிக்கு சென்னை தியாகராய நகர் தணிகாச்சலம் சாலையில் அமைந்துள்ள சாகித்தியன் ஹோட்டல் கட்டட அரங்கில் நடைபெறுகிறது.இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் திரையுலக அமைப்புகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.அனைவரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
____________

No comments: