Tuesday, 11 November 2008

** முள்ளியவளையில் மேஜர் பசீலனின் 21ம் ஆண்டு நிறைவு நிகழ்வு

மேஜர் பசீலனின் 21ம் ஆண்டு நிறைவு நிகழ்வு முள்ளியவளையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. முள்ளியவளை மேஜர் பசீலன் முத்தமிழ் கலாமன்றத்தின் ஏற்பாட்டில் முள்ளியவளைக் காட்டு விநாயகர் கோவிலடியில் அமைக்கப்பட்ட அரங்கில் ஒட்டுசுட்டான் கோட்டக் கல்வி அதிகாரி சி.ஜெயபாலன் தலைமையில் இரவு 9.00 மணிக்கு இந்நினைவு நிகழ்வு ஆரம்பமானது.

முதலில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட பந்தலில் மேஜர் பசீலனின் திருவுருவப்படம் வைக்கப்பட்டு, பொதுச்சுடரினை புலிகளின்குரல் நிறுவனப் பொறுப்பாளர் நா.தமிழன்பனும், ஈகைச்சுடரினை மேஜர் பசீலனின் தாயார் ந.தங்கம்மாவும் ஏற்றினர். முள்ளியவளைக் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் மு.உமைநேசன் மலர் மாலை சூட்டினார்.

மலர் வணக்கத்தினை த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினம் ஆரம்பித்து வைத்தார்.கருத்துரைகளை தண்ணீரூற்று வட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கா.இளம்புலி, திரு ச.கனகரத்தினம், வற்றாப்பளை வட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் பரனண்ணை ஆகியோர் நிகழ்த்தினர். இந்நிகழ்வில் முள்ளியவளை விநாயகர் விளையாட்டுக் கழக உறுதுணையுடன் மேஜர் பசீலன் நினைவாக நடத்தப்பட்ட மரதன் ஓட்டப் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கும், பங்குபற்றியவர்களுக்கும் சான்றிதழ்களும் நினைவுப் பரிசில்களும் வழங்கி மதிக்கப்பட்டன.
shankathi.com
*****

No comments: