அப்பாவி பொதுமக்களை கொலைவேறியாட்டம் செய்யும் சிங்கள அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்.எமது அன்பார்ந்த தென்தமிழீழ மக்களே!மாவீரர்களின் இலட்சியக் கனவை சுமந்து, எமது தனிப்பெரும் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வழிநடத்தலில், தமிழீழம் முழுவதும் எழுச்சி கொண்டுள்ள இவ்வேளையில், மீண்டும் ஒரு கோர இனக்கருவறுப்புப் படுகொலை நடவடிக்கையை, தென்தமிழீழ மண்ணில் சிங்களப் படைகள் அரங்கேற்றியுள்ளன.தென்தமிழீழத்தில் எமது வேங்கைகளின் வீரம்செறிந்த தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாது, திக்குமுக்காடி வரும் சிங்கள இனவெறிப் படைகள், தமது கையாலாகாத்தனத்தை மீண்டும் அப்பாவித் தமிழ் உறவுகள் மீது காண்பித்து வருகின்றன. இதன் வெளிப்பாடாகவே, நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு குடும்பங்கள் உட்பட பதினைந்து அப்பாவிப் பொதுமக்களை வயது வேறுபாடின்றி தமது கோரப் பற்களுக்கு சிங்களப் படைகளும், அவற்றின் ஒட்டுக்குழுக்களும் இரையாக்கியுள்ளன.
அப்பாவிப் பொதுமக்களை சிங்களப் படைகள் படுகொலை செய்வது இது முதற்தடவையல்ல. இவ்வாறான கொடூரங்களை, கடந்த காலங்களிலும் பல தடவைகள் எமது தென்தமிழீழ மண் சந்தித்துள்ளது. கிழக்கின் விடியல் என்ற மகிந்தவின் கொக்கரிப்பிற்கு முடிவு கட்டி, சிங்களப் படைகளை தென்தமிழீழ மண்ணை விட்டு ஓடோட விரட்டியடிப்பதற்கு, நாம் எல்லோரும் உறுதி பூண்டு நிற்கும் இவ்வேளையில், எம் மக்களின் உயிர்களைப் பலியெடுத்து தமது கோழைத்தனத்தை சிங்கள இனவெறி அரசும், அதன் கைக்கூலிப் படைகளும், ஒட்டுக்குழுக்களும் கட்டவிழ்த்து விட்டுள்ளன.சிறிலங்கா இராணுவத்தினரும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக்குழுவினரும் நடாத்திய கொலைவேறியாட்டத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
சிங்களப்படைகள் மீது நடாத்தப்படும் தாக்குதல்களுக்கு எதுவுமே அறியாத அப்பாவி மக்களை படுகொலை செய்து பழிதீர்ப்பது எந்தவகையிலுமே நியாயமாகாது என்பதனை சிங்களப்படைகளும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக்குழுக்களும் புரிந்து கொள்ளவேண்டும்.
தென்தமிழீழத்தில் தொடர்ந்துகொண்டுள்ள அப்பாவி மக்களின் படுகொலைகளுக்கான முழுப்பொறுப்பையும் சிங்களதேசமே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதோடு, அப்பாவி பொதுமக்கள் மீதான படுகொலைச் சம்பவங்களை இனிமேலும் தொடராமல் சிங்கள தேசம் உடனடியாக நிறுத்தவேண்டும்.
"புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்
அரசியல்துறை
தமிழீழ விடுதலைப் புலிகள்;
மட்டக்களப்பு மாவட்டம்.
தமிழீழம்.
_________
Pathivu.com








No comments:
Post a Comment