Sunday, 16 November 2008

** முகமாலை, கண்டல் ஊடான வலிந்த தாக்குதல்கள் முறியடிப்பு: 20 படையினர் பலி1 80 படையினர் காயம்!

முகமாலை, கண்டல் ஆகிய பகுதிகள் ஊடாக சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட வலிந்த தாக்குதல்களை அடுத்து அங்கு உக்கிர மோதல்கள் இடம்பெற்றன. இதன்போது சிறீலங்காப் படையினர் தரப்பில் 20 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 80 வரையிலான படையினர் காயமடைந்துள்ளனர் என தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை 5.10 மணி முதல் மதியம் 12.40 மணிவரை பல்குழல் வெடிகணை தாக்குதல்கள், ஆட்டிலறி எறிகணைத் தாக்குதல்கள், மோட்டார் எறிகணைத் தாக்குதல்கள், கனரக ஆயுதங்களின் சூட்டாதரவு மற்றும் எம்.ஜ.24 உலங்கு வானூர்தி உந்துகணைத் தாக்குதல்கள் சகிதம் சிறீலங்காப் படையினர் பெருமெடுப்பில் முன்னகர்வுகளில் ஈடுபட்டனர்.படையினரின் முன்னகர்வுகளுக்கு எதிராக போராளிகள் ஏழரை மணி நேரம் கடுமையான எதிர்த் தாக்குதலை தொடுத்து படையினருக்கு பலத்த உயிரிழப்பை ஏற்படுத்தி படையினரின் முன்னகர்வுகளைக் முறியடித்துள்ளனர்.

இன்போதே படையினர் தரப்பில் 20 அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 80 அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த படையினரை உலங்கு வானூர்தி மூலம் ஏற்றி பலாலி படைத்தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.இதேநேரம் இன்று மாலை சிறீலங்காப் படையினரால் கிளாலி, முகமாலை, கண்டல், பளை, இயக்கச்சி, வடமராட்சி கிழக்கு ஆகிய பகுதிகள் நோக்கி பல்குழல் வெடிகணைத் தாக்குதல்கள், ஆட்டிலறி எறிகணைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
_________
Pathivu.com

No comments: