Sunday, 16 November 2008

** இலங்கையில் போரை நிறுத்த வேண்டும் - உண்ணாவிரத மேடையில் நடிகர் விஜய்

இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து தமிழகம் முழுவதும் ரசிகர்கள் இன்று உண்ணாவிரதம் இருக்கின்றனர். 37 இடங்களில் உண்ணாவிரதம் நடப்பதாக தகவல் வந்துள்ளது.
உண்ணாவிரத மேடையில் நடிகர் விஜய் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது.

இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து தமிழகம் முழுவதும் ரசிகர்கள் இன்று உண்ணாவிரதம் இருக்கின்றனர். 37 இடங்களில் உண்ணாவிரதம் நடப்பதாக தகவல் வந்துள்ளது.

ரசிகர் மன்ற நற் பணி இயக்கத்தினரே இப் போராட்டத்தை நடத்துகின்றனர். அவர்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் போராட்டமாக இது உள்ளது. இதில் எனது முயற்சி எதுவும் இல்லை. இப்படிப்பட்ட ரசிகர்கள் எனக்கு இருப்பதை பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது. அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஏற்கனவே இலங்கையில் தமிழர் படு கொலையை கண்டித்து பல போராட்டங்கள் நடந்துள்ளன. நானும் அவற்றில் பங்கேற்றுள்ளேன். எனது ரசிகர்கள் நடத்துவதால் இந்த உண்ணாவிரதத்திலும் பங்கேற்று இருக்கிறேன். இலங்கையில் நடக்கும் போரினால் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். அங்கு போர்நிறுத்தம் ஏற்பட வேண்டும். தமிழர்கள் படுகொலை செய் யப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இதற்காக நாம் இலங்கை சென்று அங்குள்ள இராணுவத்தோடு போர்செய்ய முடியாது. இது போன்ற போராட்டங்கள் மூலம் நம் உணர்வுகளைத் தான் காட்ட முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

உண்ணா விரதத்தில் நடிகர் மன்சூர்அலிகான் பேசியதாவது
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது வேதனை அளிக்கிறது. அங்கு போரை நிறுத்த வேண்டும் என்று எல்லோரும் வற்புறுத்து கிறோம். என்னை பொறுத்தவரை போரை நிறுத்த அவசியம் இல்லை. இலங்கை இராணுவத்துக்கு இந்திய அரசு பண உதவிகள், ஆயுத உதவிகளை செய்கிறது. அவற்றை நிறுத்தி விட்டு போராளிகளுக்கு வழங்கினால் போதும். இவ்வாறு அவர் பேசினார்.
__________
Tamilwin.com

No comments: