இலங்கைத் தமிழர்களைக் காக்கும் விஷயத்தில் மத்திய அரசுக்கு நெருக்குதல் தரத் தவறி விட்டார் முதல்வர் கருணாநிதி. இந்த விஷயத்தில் அவர் தோல்வி அடைந்து விட்டார் என தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் குற்றம் சாட்டியுள்ளார்.கன்னியாகுமரி வந்த நெடுமாறன் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,இலங்கைத் தமிழர்களைக் காக்கத் தவறி விட்டார் கருணாநிதி. இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு நெருக்குதல் கொடுத்து, இலங்கைத் தமிழர்களைக் காத்தால்தான், மத்திய அரசுக்கு ஆதரவை தொடருவோம் என அவர் கூறியிருக்க வேண்டும். அதை செய்ய அவர் தவறி விட்டார்.திமுகவின் ஆதரவு இல்லாமல், மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஒரு நாள் கூட ஆட்சியில் இருக்க முடியாது என்ற உண்மையை அறிந்தும், அப்படி ஒரு நெருக்குதலைத் தவறி விட்டார் கருணாநிதி.
சோமாலியாவில் இந்திய சரக்குக் கப்பல்கள் தாக்கப்படுவது குறித்துத்தான் மத்திய அரசு அதிகம் கவலைப்படுகிறது. ஆனால், தமிழக மீனவர்கள் நடுக் கடலில் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படுவது குறித்து கண் மூடிக் கொள்கிறது.நமது மீனவர்கள் மீது மத்திய அரசுக்கு அக்கறை இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.இலங்கைத் தமிழர்களுக்கு தமிழகத்திலிருந்து அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் இலங்கையி்ல உள்ள தமிழர் மறு வாழ்வு மையம் மூலமாகவே விநியோகிக்க வேண்டும்.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, தமிழர் மறு வாழ்வு மையம் மூலமாக ரூ. 6 கோடி நிதியை வழங்கினார். மேலும், அந்த கழகம் மூலமாக 2 கப்பல்கள் நிறைய நிவாரணப் பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டன.இலங்கைக்கு இந்தியா வழங்கியுள்ள ஆயுதங்கள், அப்பாவித் தமிழர்களைத் தாக்கவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் உறுதியான நடவடிக்கை காரணமாக 1971ம் ஆண்டு வங்கதேசம் உருவானது, அந்த நாட்டு மக்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டன.ஆனால் அந்த உறுதியும், தைரியமும், பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சுத்தமாக இல்லை என்றார் நெடுமாறன்.
________
Thatstamil








No comments:
Post a Comment