கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன் மக்கள் குயிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் 12 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். 4 வீடுகள் அழிந்துள்ளன. 11 வீடுகள் சேதமாகியுள்ளன. தேர்வு எழுதிக்கொண்டிருந்த மாணவர்கள் சிதறி ஓடியுள்ளனர்.
பரந்தன் நகருக்கு வடக்கில் உள்ள கண்டி வீதியின் 161 ஆம் கட்டை மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று வியாழக்கிழமை பிற்பகல் 2:20 நிமிடத்துக்கு சிறிலங்கா வான்படையின் மிக்-27 ரக வானூர்திகள் இரண்டு குண்டுத்தாக்குதலை நடத்தின.
நான்கு தடவைகள் நடத்தப்பட்ட இக்குண்டுத் தாக்குதலில் வீதியால் சென்று கொண்டிருந்த அப்பகுதி மக்கள் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற இடத்துக்கு அருகில் பரந்தன் இந்து வித்தியாலயத்தில் மாணவர்கள் தேர்வு எழுதிக்கொண்டிருந்தனர். பேரிரைச்சலுடன் குண்டுகள் வீசப்பட்டதால் ஏற்பட்ட பேரொலியில் மாணவர்கள் பெரும் அவலத்துக்கு உட்பட்டனர். கதறி அழுதவாறு சிதறி ஓடினர். அப்போது, பரந்தன் நகரில் உள்ள வணிக நிறுவனங்களில் பொருட்கள் வாங்குவதற்காக நின்ற மக்கள், பேருந்துகளுக்காக காத்து நின்ற மக்கள் என அனைவரும் பேரவலப்பட்டு சிதறி ஓடினர்.
பரந்தன் நகரப்புறத்தில் குண்டுச்சிதறல்கள் வீழ்ந்ததில் மூதாட்டி உட்பட நால்வர் படுகாயமடைந்தனர். ஏனையவர்கள் சிறுகாயங்களுக்கு உள்ளாகினர்.
நான்கு வீடுகள் அழிந்துள்ளதுடன் 11 வீடுகள் சேதமடைந்துள்ளன.
க.சசிகரன் (வயது 16)
சி.நவநீதன் (வயது 18)
ம.பரமேஸ்வரி (வயது 57)
மே.தங்கேஸ்வரி (வயது 36)
ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர். ஏனை எட்டு பேரும் சிறுகாயங்களுக்கு உள்ளாகினர்.
puthinam.com
*****
Subscribe to:
Post Comments (Atom)








No comments:
Post a Comment