Thursday, 6 November 2008

** வன்னியில் 20 ஆயிரம் குடும்பங்களுக்கு தற்காலிகமாக தங்குவதற்கான வசதிகள் இல்லை: ஐ.நா.

கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்களில் 20 ஆயிரம் குடும்பங்களுக்கு தற்காலிகமாக தங்குவதற்கான வசதிகள் இன்னமும் செய்யப்படவில்லை என்று ஜக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஜக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
20 ஆயிரம் தங்குமிட வசதிகள் தற்காலிகமாக செய்து கொடுக்கப்பட வேண்டும். தற்காலிக தங்குமிடங்களை அமைப்பதில் குறைபாடுகள் உள்ளன.

இடம்பெயர்ந்தவர்களில் அதிகமான மக்கள், கூடாரங்களை அமைத்து தற்காலிகமாக தங்கியிருந்தாலும் அவை பாதுகாப்பான கூடாரங்கள் அல்ல.
அநேகமான மக்கள் போதிய தங்குமிட வசதிகள் இன்றி இன்னல்களை எதிர்நோக்குகின்றனர். தங்குவதற்கான கூடாரங்களை அமைப்பதற்கான பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றது.

தங்களுக்குரிய கூடாரங்களை அமைப்பதற்கான பொருட்களை பெறுவதற்கு ஆயிரத்திற்கும் அதிகமானனோர் உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகளை கோருகின்றனர்.

அனால், அந்த நிறுவனங்களிடம் உரிய பொருட்கள் இல்லை என ஜக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையகத்தின் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
puthinam.com
*****

No comments: