இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் இந்த உண்ணாவிரத போராட்டத்தை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆரம்பித்து வைத்தார்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் சின்னத்திரை நடிகர்கள் அஜய் ரத்னம், ராஜ்காந்த், மோகன் ராம், கே.நடராஜன், வசந்த், மனோபாலா, தேவ் அஜய், சிவன், சீனிவாசன், ஜெயமணி, கமலேஷ், ரிஷி, நடிகைகள் தேவயானி, தீபா வெங்கட், மஞ்சரி, பிருந்தா தாஸ், நித்யா, மவுனிகா மற்றும் தொழிற்நுட்பக் கலைஞர்கள் உள்பட 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இன்று மாலை 5 மணியளவில் இந்த உண்ணாநிலைப் போராட்டத்தை இயக்குனர் மணிவண்ணன் நிறைவு செய்து வைத்துள்ளார்.
pathivu.com
*****








No comments:
Post a Comment